யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 244

தினமொரு சுலோகம்

நாள் 244

காற்றில்லாத இடத்து தீபம்

த்யாத்யேத்யத்யானஹீனோ நிர்மல்:ஶாந்தவாஸன:

ப்புவாவாததீபாபோ பலி: ப்ராப்தமஹாபத:!

சுக்கிராச்சாரியர் சென்ற பிறகு பலி ராஜன் யோசிக்க ஆரம்பித்தான்:” என் குரு நாதன் சொன்னது முற்றிலும் 

பொருத்தமானதும் உண்மையும் தான்.நிச்சயமாக எல்லாமே அனந்தாவபோதம் தான் அதல்லாமல் மற்றொன்றில்லை.அந்த போத சத் ‘ இது சூரியன்’ என்று நினைக்கும் பொழுது அங்கு இருட்டு விலகி ஒளி பரவுகிறது. அங்கு சூரியன் உதயமாகிறான்.வெளிசம் எது இருட்டு எது என்று பகுத்தறியும் உதவுவது இந்த 

போதம் தான்.பூமியை பூமியாகவும் ஆகாயத்்தையும் திசைகளையும் அவ்வாறு காண்பதற்கு உதவுவது இந்த 
ம் தான். இந்த பிரபஞ்சத்தை உருவாக்குவதும் பரிபாலித்துக்கொண்டிருப்பதும் போதம் தான்.

போதம் ஒரு மலையை மலையாக பகுத்தறியவில்லை என்றால் மலை எங்கிருந்து வரும்.இங்கு நாம் காண்பதெல்லாம் போதம் ன்புலன்களும்உடலும்மனதிலுண்டாகின்ற ஆசாபாசங்களும் உள்ளிலிருப்பவையும் வெளியேஇருப்பவையும் ஆகாயமும் மாறுதல் என்கின்ற விசித்திர நிகழ்வுகளும் எல்லாம் போதம் தான் .எனக்கு பிரபஞ்சத்திலுள்ள மற்ற பொருள்களுடன் ஏற்படுகின்ற தொடர்புகளும் அதனால் ஏற்படுகின்ற அனுபவங்களும் எல்லாமே போதம் உளவாக்கின்றவை தான்.சரீரம் எந்த வித்த்திலும் அதற்கு 
காரணமல்ல.சரீரமில்லாமலே நான் போத சொரூபம் தான்.அந்த போதமேயில்லாத விசுவத்தின் ஆத்மாவும்.ஒன்றன்றி மற்றொன்றில்லாமல் எங்கும் போதம் நிறைந்து நிற்கின்றது.அப்படியிருக்கையில் எனக்கு யார் நண்பன்? யார் விரோதி? இந்த பலி என்றழைக்கப்படுகின்றவனின் தலையை வெட்டியெறிந்தாலும், 

அனந்தாவபோதத்தின் தலைக்கு ஒன்றும் நேரப்போவதில்லை.வெறுப்பு முதலிய மற்ற 

குணங்களுள்ளவர்களாக இந்த போதத்தின் மாற்றங்கள் தான்.ஆனால் மனதும் அதில் உண்டாகின்ற வெறுப்பு மற்றும் ஆசாபாசங்களும்,உண்மையாக முடியாது.ஏனென்றால் அனந்தமான ஒன்றில் எப்படி வேற்றுமைகள் உளவாக முடியும்? போதம் நித்திய சுத்தமானது. அதற்கு முதலும் இல்லை ;முடிவும் இல்லை. போதம் என்பது 
அதன் பெயரில்லை.அது ஒரு குறியீட்டுக்கு சொல் மட்டுமே.அதற்கு பெயரும் கிடையாது,உருவமும் கிடையாது.

‘நான்’ சிரஞ்சீவியான பரம்பொருள் தான்.எனக்கு விஷயங்களும் விளக்கங்களும் 

அவசியமில்லை.கவர்சசியான எந்த ஒரு வஸ்துவோ, விஷயங்களோடு என்னை 

ஈர்பபதில்லை. அப்படிப்பட்ட,என்றென்றும் சுதந்திரமான அந்த சர்வ வியாபிக்கு என் நமஸ்காரங்கள்.விஷயீ-விஷய வேற்றுமைகளில்லாத என் ஆத்மாவையும் நான் வணங்குகிறேன்.எல்லா பொருள்களிலும் ப்படுகின்ற  ஒளியும் அதுவே தான்.அனுபவங்களுக்கான ஆர்வம் அடங்கின போத சொரூபம் தான் நான்.ஆகாயம் போன்று எல்லையில்லாதவற்றை நான்.இப்பிரபஞ்ச இன்ப துன்பங்கள் என்னை ஒன்றும் செய்யாது.எனக்கு அவைகளில் எந்த ஈடுபாடும் இல்லை.சுகமும் துக்கமும் எனக்கு ஒரே போல்தான்.ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு ஒழுகிக் போகின்ற உயிர் சக்தி எந்தவிதமான லாப நஷ்டங்களையும் உளவாக்குவதில்லை.போதம் மட்டுமே உள்ளது என்கின்ற பொழுது மனோ விசாரங்களை, அவைகளில் உளவாகின்ற மாற்றங்களை அவைகளில் ஏற்படுகின்ற ஏற்ற இறக்கங்களோ, எதுவும் போதத்தை பாதிப்பதில்லை.ஆகவே ஆத்மாவில் பரமமான அமைதி உண்டாகும்பொழுது, ‘ நான்’ தொடர்ந்து எனது 
கர்மங்களை ஆற்றிக்கொண்டு கொண்டு எந்த வித மான பாதிப்பும் இல்லாமல் இருந்து கொண்டிருப்பேன்.”

வஸிஷ்டர் சொன்னார்” அதன் பின் பலி ராஜன் ‘ ஓம்’ எனும் பிரணவம் மந்திரத்தை ஜபித்துக் கொண்டு மௌனமாக இருந்தான்.’ எல்லா சந்தேகங்களும் நீங்கள் பெற்று, வஸ்துக்களைக் பற்றின் எந்த விதமான சிந்தைகளுமில்லாமல்,விஷய-விஷயீ என்கின்ற வேற்றுமைகள் எதற்கும் ஆட்படாமல்,மனோ விசாரங்கள்- 

சிந்தைகள்-மனோ விசாரங்களின் விஷயம்( தியானம், தியானிப்பவன், தியான விஷயம்)என்ற ண்ணங்ளேதுமில்லமல்,பலிராஜன் தொடர்ந்து வாழ்ந்து வந்தான்.எந்த விதமான இலடசியங்களுமில்லாமல்,மிகவும் அமைதியுடன்,மனம் அடங்கி, காற்றில்லாத இடத்தில் எரிந்துகொண்டிருக்கின்ற தீபம் போல் அவன் பரம்பதத்தில் ஆனந்தத்துடன் வாழ்ந்தான்.”
 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s