யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 245

    தினமொரு சுலோகம்

நாள் 245

ந சிஞ்சிதபி கர்த்தவ்வியம் யதி நாம் மயாத்யானா

தத்கஸ்மாந்ந கரோமீதம் கிம்சித்பக்ருத்யதக
ர்ம வை
வஸிஷ்டர் தொடர்ந்தார்:” பலி மகாராஜனின் பிரஜைகளான எல்லா அசுரர்களும்  விஷயத்தை கேள்விப்பட்டு அரண்மனையை நோக்கி ஒடி வந்தார்கள்.தியானத்திலிருந்த அரசனை சுற்றி நின்றுகொண்டு ‘என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக’ சுக்கிராச்சாரியரை தியானித்து வரவழைத்தார்கள்.இந்திரியங்களுக்கெல்லாம் அப்புறமான தியான நிலையில் ஆழ்ந்திருக்கும் பலி ராஜனைக் கண்டார் சுக்கிராச்சாரியர்.உள்ளிலுண்டான மகிழ்சசியினால் ஒரு சிறு புன்னகையுடன் அசுரர்களை பார்த்து கூறினார்:’இதுவல்லவா எல்லாவற்றிலும் சிறந்த பாக்கியம்! அசுரர்களே இப்பொழுது ஒன்றும் கேட்காதீர்கள்.அஞ்ஞான இருள் அகன்று விட்டால் ஞான சூரியன் உதயமாகிறான்.அது தான் பலிராஜனின் நிலை தற்பொழுது.சற்றே பொறுத்துக்கொள்ளுங்கள். இன்னும் சிறிது நேரம் கழித்து அவர் தானாகவே இந்த நிலையிலிருந்து விழித்து எழுவார்.அவரது போதத்தில் இவ்வுலகம் மீண்டும் முளை விடும்.ஆகவே நீங்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வேலைகளை கவனிக்க செல்லுங்கள்.அவர் ஆயிரமாண்டுகளுக்குப் பின் தான் பிரபஞ்ச போதத்திற்கு திரும்புவார்’

  குருவின் வார்த்தைகளைக்கேட்ட அசுரர்கள்  தங்கள் கர்மங்களை ஆற்றுவதற்காக திரும்பி போனார்கள்.ஆயிரம் தேவ வருடங்கள் தியானத்தில் ஆழ்ந்திருந்த பலி ராஜன் தேவ-கந்தர்வர்களின் சங்கீதத்தைக் கேட்டு விழித்தெழுந்தான்.அவரிலிருந்து வெளிப்பட்ட ஒரு லௌகீகத்திற்கு அப்பாற்பபட்ட ஒளி இந்த பிரபஞ்சத்தை ஒளிமயமாக்கியது.அசுரர்கள் மீண்டும் அரண்மனையை நோக்கி ஓடி வந்தார்கள்.

அதற்கு முன் பலி ராஜன் இப்படி யோசிக்கலானார்:’ எனக்கு இதே நிலையில் தொடர வேண்டும் என்று ஆவலாக உள்ளது.ஆனால் புற உலக கர்மங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என் இதயமும் பரமானந்தத்தால் நிறைந்துள்ளது.’

அதற்குள் அசுரர்கள் எல்லோரும் பலி ராஜனைக் சுற்றி வந்து நின்றிருந்தார்கள்.

பலி தொடர்ந்து சிந்திக்கலானார்:’ நான் போதம். என்னில் எந்த விதமான வக்கிரத்தன்மையும்  விசித்திரமும் இல்லை.எனக்கு தியாகம் செய்வதற்கோ, அடைவதற்கோ ஒன்றும் இல்லை.என்ன ஆச்சரியம்! நான் முக்தி வேண்டுகிறேன்.ஆனால் நான் கட்டப்பட்டவனாகவே(பந்தனத்தில்்) இருக்கிறேன்.நான் எப்பொழுது இந்த பந்தனத்திற்காட்பட்டவனானேன்? யார் என்னை இந்த பந்தத்திற்குள்ளாக்கினது எப்படி இந்த நிலைமை உளவாயிற்று?இப்பொழுது நான் ஏன் முக்திக்காக ஏங்குகிறேன்? பந்தமும் இல்லை;முக்தியும் இல்லை.தியானம் செய்வதாலும் செய்யாமலிருப்பதாலும் என்ன கிடைக்கப் போகிறது? தியானம் எனும் பிரமையிலிருந்தும் விடுபட்டு அதற்கு பின் என்ன நிலை உள்ளதோ அந்த நிலையில் நிரந்தரமாக குடியிருப்பதல்லவா உத்தமம்? எனக்கு நேடுவதற்கும் இழப்பதற்கும் ஒன்றும் இல்லை.நான் தியான நிலையையோ தியானமற்ற நிலையையோ ஆசிக்கவில்லை.இன்பமோ துன்பமோ ஒன்றும் வேண்டாம்.பரம பதம் இவ்வுலகமோ எதுவும் எனக்கு வேண்டாம்.நான் வாழவில்லை; இறக்கவும் இல்லை.நான் ‘ ஸத்’ உம் இல்லை; ‘ ‘அஸத்’ உம் இல்லை.அனந்தவும்- முடிவில்லாததும் எப்பொழுதும் உண்மையாகவிருக்கின்ற என்னை நமஸ்கரிக்கின்றேன்.இந்த உலகம் எனது சாம்ராஜ்ஜியம் இருக்கட்டும்.எனக்கு இந்த சாம்ராஜ்ஜியம் இல்லாமலாகட்டும்.எனக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது.
தியானத்தினாலும் சாம்ராஜ்ஜியத்தினாலும ௐரு பயனுமில்லை.காரியங்கள் எப்படியிருக்கிறதோ அப்படியே இருக்கட்டும்.நான் யாருக்கும் கட்டுபட்டவனில்லை.எனக்காரும் கட்டுப்பட்டவர்களும் இல்லை.
“நான் எனும் எனக்கு செய்யவேண்டிய கர்மங்கள் எதுவுமில்வுலை.அப்படியிருக்கையில் சகஜமாக வந்துசேரும கர்மங்களை ஏன் கூடாது?”என்று மனதில்நி நினைத்துக்
கொணடு தனது ஒளிமிகுந்த கண்களால் தனது பிரஜைகளளை பார்த்தான் பலிராஜன்,அந்த பாரவை உதயசூரியன் தாமரை மலர்களைப் பார்த்தது போல் இருந்தது..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s