யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 248

தினமொரு சுலோகம்

நாள் 248

பிரகலாதன்- நானே விஷ்ணு

!

அவிஷ்ணு: பூஜயன்விஷ்ணும்  ந பூஜா பலபாகீபகவத்

விஷ்ணுர்பூத்வா யஜேத் விஷ்ணுமயம் விஷ்ணுரஹம் ஸ்தித: !

பிரகலாதன் தன் சிந்தனையை தொடர்ந்தார்: ” பனி படர்நத இமயமலையின் உச்சி, சூரியனின் சூடு தாங்க 

முடியாமல் உருகி  இல்லாமல் போவதில்லை.அதே போல் பகவான் விஷ்ணுவை சரணடைந்தவர்களை 

துன்பங்கள் பாதிப்பதில்லை.மரத்தின்உச்சியில் அமர்நதிருக்கும் ஒரு சிறு வானரனுக்குக் கூட கீழே நிற்கும் 

பெரிய நாயை தொந்திரவுகள் செய்ய முடியும்.அதே போல் விஷ்ணுவின் ஆதரவின் பலத்தில் அசுரர்களை 

தேவர்கள் தொந்திரவுகள் செய்கிறார்கள்.

பகவான் விஷ்ணுவல்லவா உலகை முழுவதும் காத்து வருகிறார?.அவர் கையில் ஆயுதங்கள் 

ஏதுமில்லையென்றால் கூட அவரை யாரும் எதிர்த்து நிற்க முடியாது.நரசிம்மர் தன் கை நகங்களைத் தவிர 

வேறு என்ன ஆயுதம் பயன்படுத்தினார்?

அப்படிப் பட்ட பகவான் தான் எல்லா உயிரினங்களுக்கும் இருக்கக் கூடிய  ஒரே சரணம்.ஆகவே அவரை 

சரணமடைவது ஒன்று தான் வழி.யாரும் அவருக்கு மேல் கிடையாது.சிருஷ்டி- ஸ்திதி-சம்ஹாரம் ( ஆக்கல்-

காத்தல்-அழித்தல் ) எல்லாமே அவர் கட்டுப்பாட்டில் தானே நடக்கிறது.ஆகவே இந்த நிமிடம் முதல் நானும் 

அவரை சரணடைந்து அவரது சாந்நித்தியத்தை என் உள்ளில். நிறைத்துக்  கொள்ள போகிறேன்.

‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரம் பக்தனுக்கு சர்வ ஐசுவரியங்களையும் அளிக்கின்ற திவ்விமான மருந்து 

என்று சொல்கிறார்கள்.அது என் மனதிலிருந்து நீங்காமலிருக்கட்டும்.

‘ ஆனால் தான் விஷ்ணு ஆகாமல் , விஷ்ணுவிடமிருந்து எந்த ஒரு அனுக்கிரகமும்

கிடைக்காது.ஒருவன் விஷ்ணுவை  ஆராதிக்கவேண்டுமென்றால் அவனே விஷ்ணு ஆக மாற வேண்டும்.ஆகவே

நான் விஷ்ணுவே!’

பிரகலாதன் என்ற மனிதன் விஷ்ணு தான்.அங்கு இரண்டில்லை.விஷ்ணுவின் கருட வாகனம் 

என்னுடையது தான்.என் ஒவ்வொரு அஅங்கத்தினரும் விஷ்ணு குடியிருக்கிறான்.விஷ்ணுவின் பத்தினியும் 

லக்‌ஷ்மீ தேவி என் அருகில் இருக்கிறாள்.விஷ்ணுவின் திவ்விய ஒளி என்னிலுமுள்ளது.விஷ்ணுவை 

அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற சங்கு, சக்கரம்,கதை,தாமரை மலர்,வாள், எல்லாமே என்னை 

அலங்கரிக்கின்றன.விஷ்ணுவின் நாபியிலிருந்து உயர்நது வருகின்ற எந்த தாமரை மலரில் பிரம்மா 

வீற்றிருக்கிறாரோ, அது என் நாபியிலிருந்து உயர்ந்து வந்த தாமரை மலர் தான் ..என் வயிற்றில் அனேகம் 

பிரமாண்டங்கள் உண்டாகி, அழிந்து க்கொண்டிருக்கிறது. என் நிறம் இப்பொழுது நீலம்.விஷணுவைப் போல் 

நானும் இப்பொழுது பீதாம்பரத்தை தரித்துக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு எதிரி யார் இருக்கிறார்கள்? நான் விஷணுவானதால் எனது எதிரிகளெல்லாம் வேறு உலகிற்கு ஓடிப் 

போய். விட்டார்கள்.என்னிலிருந்து வெளிப்படும் ஒளிவெள்ளத்தை எதிர்கொள்ள முடியாமல் அசுரர்கள் 

குழம்புகினளனர்.நான் விஷ்ணுவாகையால் தேவர்கள் என்னை புகழ்ந்து பாடுகிறார்கள்.என்னிலுள்ள எல்லா 

இரட்டை மனப்பாங்குகளையும் அழித்து நான் விஷ்ணுவாகி விட்டேன்.மூவுலகங்களையும் என் 

ஆட்சிக்குள் கொண்டு வந்து, பிரபஞ்சத்திலுள்ள எல்லா விதமான கெடுதிகளையுபம் அழித்து, எல்லா 

உயிரினங்களுக்கும் அபயம் அளித்து, அவர்களது சஞ்சலங்களையெல்லாம் நீக்கி ஆளுகின்ற 

விஷ்ணுவாகி இருக்கிறேன் நான்..அந்த மஹாவிஷ்ணுவை வணங்குகிறேன்.’
.
.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s