யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 250

தினமொரு சுலோகம்

 நாள் 250

மூவுலக ஈசன்
த்ரிபுவனபாவனாபிராமகோஶம்

ஸகலகளங்கஹரம் பரம் ப்ரகாஶம்

அஶரணஶரணம் ஶரண்யமீஶம்

ஹரிமஜமச்யுதமீஶ்வரம் ப்ரபத்தயே

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” அவ்வாறு தேவர்களை சமாதானப்படுத்திவிட்டு விஷ்ணு பகவான் மறைந்து 

போய்விட்டார். தேவர்கள் அவரவர்கள் வீட்டிற்கு திரும்பிப் போனார்கள்.அதன் பின் அவர்கள் பிரகலாதனிடம்

நட்பும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.பிரகலாதன் தினமும் தன் தீருமானப்படி விஷ்ணு பூஜை 

மனதால்,செய்கையில் வார்த்தைகளால் நிர்வகித்து வந்தான்.

இப்படிப் பட்ட பூஜையின் உடனடி பலனாக, பிரகலாதனில் தூய குண ங்களைக் விலகி  விவேகம், அனாஸக்தி, முதலியவை வலுப்பெற்றன.அவர் சுகத்தை தேடவேயில்லை. சுகத்தைத் குறித்துள்ள தேடலைத் விட்டதாலும் ,பிரகலாதனில் எந்த விதமான வாசனைகளும் மீதமிருக்கவில்லை.

பிரகலாதனின் நிலைமையை அறிந்த விஷ்ணு பகவான் பாதாள உலகத்தில் பிரகலாதனின் முன் 

பிரத்தியட்சமானார்.பகவானைக் கண்ட பிரகலாதன் மிகவும் மகிழ்ச்சியுற்று மீண்டும் தன் பூஜையை 

தொடர்ந்தார்.

பிரகலாதன் இவ்வாறு பிரார்த்தித்தான்:

‘மூன்று உலகங்களையும் ஆளுகின்ற இந்த பகவானை சரணம்அடைகிறேன்.எல்லாவிதமான இருளும் 

அஞ்ஞானமும் இல்லாதாக்கிற உத்தம பிரகாசம் பகவான்.அனாதைகளுக்கு ஒரே ஒரு அபயம் பகவான் 

தான்.இன்னமும் பிறவியெடுக்காத ( அதனாலையே மரணமுமில்லாத) அந்த பகவானை சரண்டைவது மட்டும் 

தான் விரும்பக் கூடியதாக உள்ளது.என்றென்றும் பாதுகாப்பு அந்த பகவானில் மட்டும் தான் கிடைக்கும்..

நீல வைரக்கல் போல், நீலத் தாமரை மலர் போல், ஓளிமயமானது பகவானின் உருவம்.ஶிஶிர காலத்தை நீல 

ஆகாயத்தின் கிரீடம் போல் ஒளிர்கின்றது பகவானின் திரு உருவம்.

கைகளில் விஷ்ணுவின் அடையாள குறிகளுடன் என் முன்னால் நிற்கும் பகவானை நான் சரணடைகிறேன். 

வேத சாஸ்திரங்களில் உறுதியிட்டு கூறுகின்ற சத்தியம் தங்கள் ஒலி.தங்களது நாபியிலிருந்து 

முளைத்தெழுகின்ற தாமரையில் தான் பிரபஞ்ச சிருஷ்டாவான பிரமன் நிலை கொள்கின்றான்.தாங்கள் 

எல்லா பௌதிக உயிர்களின் உள்ளிலும் வசிக்கிறீர்கள்.

யாருடைய கால் நகங்கள் ஆகாயத்தில் மின்னும் நடசத்திரங்கள் போல் ஒளிர்கின்றதோ, யாருடைய 

முகத்தாமரை சந்திரனைப் போல் புன்னகைக்கின்றதோ, யாருடைய இதயத்திலே கங்கை 

ஒழுகின்றதோ,ஒளிக்கீற்றுக்கள் போல் ஜ்வலிக்கின்ற இரத்தின கற்கள் இருக்கின்றதோ, யார் ஶரத்காலத்து 

ஆகாயத்தை வஸ்திரமாக அணிந்து கொண்டிருக்கிறாரோ அந்த பகவான் தான் எனக்கு அபயம்.

யாருடைய உள்ளத்தில் இந்த விசுவ பிரபஞ்சம் எந்த குறையுமில்லாமல் நிலை கொள்கின்றதோ, யார் 

பிறப்பில்லாதவனாக இருக்கிறானோ, யார் மாற்றங்களுக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கிறானோ,யாருடை 

தேகம். ஐசுவரிய நிறைந்த குணங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளதோ,யார் ஆலிலையில் 

சயனித்திருக்கிறாரோ, அந்த பரமனில் நான் அபயம் தேடுகிறேன். சூரியன் மறையும்பொழுது தோன்றும் ஒளி 

வெள்ளம் போல்,அதிசௌந்தரியம் வழிகின்ற இலட்சுமி தேவி யாருடைய இடப்பக்கத்தில் 

குடிகொள்கின்றாளோ,அவரே எனக்கு சரணம்.மூவுலகங்களிலுமுள்ள தாமரை மலர்களுக்கெல்லாம் 

சூரியனாக விளங்கும் , அஞ்ஞான இருளை முற்றிலும் அகற்றும் மணி விளக்காக நிலை கொள்கின்ற 

அனந்தாவபோதமான,பிரபஞ்சத்திலுள்ள எல்லாத் துன்பங்களையும் அழிக்க வல்ல அந்த பகவானை 

சரணடைகிறேன்.’

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s