யோகவாஸிஷ்டம் என்ற மஹா ராமாயணம் 247

தினமொரு சுலோகம்

நாள் 247

பிரஹலாதனின் கதை

மனாக்சலதி பர்ணேஅபி த்ருஷ்டாரிபயபீதய:

வத்த்வஸ்த்ரஸ்யந்தி விமத்வஸ்தா ம்ரிக்யோ க்ராமகதா இவ!

வஸிஷ்டர் தொடர்ந்தார்: எந்த விதமான தடைகளுமில்லாத வேறு ஒரு வழியில் சென்று முக்தி – ஆத்ம 

சாக்‌ஷாத்காரம் அடைந்த வேறு ஒருவரின் கதையை உனக்கு கூறுகிறேன், கேள் , இராமா.பாதாள உலகில் 

ஆண்டு வந்த இன்னொர அசுர குல மன்னன் ஹிரண்யகசிபு . இந்திரனிடமிருந்து மூன்று உலகங்களையும் 

வலுவில் பறித்துக் கொண்டவன் ஹிரண்யகசிபு .அவனுக்கு நிறைய புத்திரர்கள் இருந்தார்கள்.அவர்களில் 

ஒருவன்தான் மாபெரும் பக்திமான் என பிற்காலத்தில் புகழப்பட்ட பிரகலாதன்.மூன்று உலகங்களுக்கும் 

அதிபதி, பெரும்  படை பலம், திறைமைசாலிகளான புத்திரர்கள் இப்படி எல்லா சௌபாக்கியங்களும் 

ஹிரண்யகசிபுவை அகங்காரியும், யாரையும் மதிக்காதவனாகவும் மாற்றியது.அவனது நியாயத்திற்கு புறம்பான 

செய்கைகளும்,அக்கிரமும் தேவர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.அவர்கள் தங்களது பிரச்சினையையும் 

தீர்த்து வைக்கும்படி பிரம்ம தேவனை வேண்டினார்கள்.ஆனால் பகவான்  ஹரி தான் நரசிம்மாவதாரம் எடுத்து 

அவனை வதம் செய்தார்.

பகவான் ஹரியின் நரசிம்மாவதாரம் மிகவும் பயங்கரமும், மிகவும் சக்தி வாய்நததாகவும்  

பீமாகாரமுமாயிருந்தது.கூரிய நகங்களும்,பற்களுக்கு,நெருப்பை கக்கிக்கொண்டிருந்த 

குண்டலங்களும்,மலையை ஒத்த வயிறும்,நெருப்பு பந்தங்களைப் போலுள்ள உரோமங்களும், உலக்கை 

போன்ற அவையவையங்களும் நரசிம்ஹன் மூர்த்தி மிகவும் பயமுளவாக்கக் உருவத்துடன் காட்சியளித்தார்.

நரசிம்மரின் கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க அசுரரகள் அங்குமிங்கும் ஓடினார்கள். அஅரண்மனையும் 

அந்தபுரங்களும் எரிந்து சாம்பலாயிற்று. ஆனால் பிஅகலாதன் மட்டும் எங்கும் ஓடாமல் 

பயமேதுமில்லாமல்,தந்தையின் கடைசி கருமங்களை நடத்தினான்.காயமுற்றவர்களுக்கு ஆறுதல் 

கூறினான்.இருந்தாலும் நாட்டிற்கும் மக்களுக்கும் உண்டான நாச நஷ்டங்களைக் கண்டு பிரகலாதனும் 

மற்றவர்களைப் போல் அதிர்சசியால் பேச்சுமூச்சற்றுப் போனான்.

பிரகலாதன் கூறினான்:” இப்பொழுது நமக்கு யார் உதவி செய்வார்கள்? ஹரி சுரங்க வம்சத்தின் அடி 

வேலையையும் பிழுது எறிந்துள்ளார்.நம் எதிரிகள் நம் படைகளை வென்றுள்ளார்கள்.என் தந்தையின் காலில் 

விழுந்து வணங்கி வந்த தேவர்கள், இன்று வீடுகளை வசப்படுத்தி விட்டார்கள்.நம் பந்துக்களின் முக்கியத்துவம் 

எல்லாம் நஷ்டப்பட்டு விட்டது.அவரகள் செய்வதற்கு தொழில் எதுவும் இல்லாமல் அநாதைகளாகி 

விட்டார்கள்.ஒரு காலத்தில் வலிமை மிக்க அவர்களாக இருந்தவர்கள் இன்று வலிமை எல்லாம் இழந்து 

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள் .விதியின் விசித்திரம் மிகவும் அதிசயமான ஒன்று.!

” பயந்த சுபாவத்தையுடைய ஒரு பெண்மான் பழக்கமில்லாத ஒரு பிரதேசத்திலுள்ள சென்று விட்டால்,ஒரு 

சிறு இலை விழும் சத்தத்தைக் கேட்டுக் கூட பயந்து நடுங்கும்.அதே போல் ஒரு காலத்தில் வீரமிக்அக படை 

வீரர்களாக இருந்த அசுரர்கள் எதை கண்டாலும் கேட்டாலும் பதறினார்கள்”

நமது கறப்பதற்காக விருட்சத்தின் தேவர்கள் கொண்டு போய்விட்டார்கள்.முனபு அசுரர்கள் தேவ 

கன்னிகைகளை ஆர்ததியோடு பார்த்தார்கள்,  என்றால், இன்று அசுர குலப் பெண்களை தேவர்கள் கவர 

முயலுகிறார்கள்.அசுரர்களின்அந்தப்புரத்தில் வாழ்ந்து வந்த அப்சரஸுகள் ஓடிப் போய் மா மேருவின்,உச்சியில் 

ஒளிந்துகொள்கிறார்கள்.என் தாய்மார்கள்  மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.என் தந்தையைப் 

விசிறிகள் கொண்டிருந்த விசிறிகள் இன்று தேவேந்திரனோ வீசித் கொண்டிருக்கின்றது. மகா விஷ்ணுவின் ‘ 

‘கருணையால்’ சாதரணமான,விவரிக்க இயலாத கெடுத்து நாம் அனுபவிக்கின்றோம் .யோசிக்க யோசிக்க 

இந்த நிலையிலிருந்து தப்பிக்க வழியோ, தப்பிக்க வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையோ தான் காண 

வில்லை.’
.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s