யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 246

தினமொரு சுலோகம்

நாள் 246
ஆத்ம சாக்‌ஷாத்காரம் 

யேஷு யேஷு ப்ரதேஶேஷு மனோ மஜ்ஜதி பாலவத்

தேப்யஸ்தேப்ய: ஸமாஹ்யத்ய தத்தி தத்வே நியோஜயேத்!

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” பலி மன்னன் அழகாக நீண்டகாலம் தன்னுடைய நாட்டை ஆண்டான்.எதையும்் 

முன்னாலேயே தீர்மானித்து மனதை திடப்படுத்திக் கொள்ளாமல் அவ்வப்பொழுது தானாகவே நிகழும் 

நிகழ்வுகளுக்கேற்ப அரசாட்சியை நடத்தினார்கள்.பிராமணர்களையும் தேவர்களையும் மகான்களையும் 

வணங்கி ஆதரித்து வந்தான்.பந்து ஜனங்களிடம் மிகவும் வினயத்துடன் நடந்து வந்தான்.தன்னிடம் வேலை 

பார்பபவர்களுக்கு தாராளமாகவே வெகுமதிகள் வழங்கினான்.யாருக்கெல்லாம் தேவையிருந்ததோ 

அவர்களுக்கெல்லாம் உகந்த வகையில் தான் தருமங்கள் செய்தான்.இளம் பெண்களுமாக நிறையவே உறவாடி

மகிழ்ந்தான் . எதையும் தீண்டத்தகாதவையாக அவன் கருதவில்லை.

அப்படியிருக்கும்பொழுது ஒரு மிகப் பெரிய யாகம் ஒன்று  நடத்த வேண்டும் என்ற எண்ணம் 

உண்டாயிற்று.அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படி கட்டளையிட்டான்..

யாகமும் தகுந்த முறையில் ஆரம்பமாயிற்று.இந்த யாகத்தின்பொழுது தான் மகா விஷ்ணு வாமன 

உருவமெடுத்து மூன்று அடிகளாக மூன்று உலகங்களையும் தானம்பெற்று இந்திரனுக்கு வழங்கினார்.இராமா, 

பலி மகாராஜாவிற்கு அடுத்ததாக இந்திர பதவி கிடைக்கவிருந்தது.அந்த நேரத்தில்த் தான் விஷ்ணு பகவான் 

இந்திரனுக்கு பதவி நல்குவதற்காக பலி ராஜனைக் பாதாளத்திற்கு தள்ளிவிட்டான் பலி ராஜன் 

இதைப்பற்றியெல்லாம் எந்தவித சிந்தனையும் இல்லாமல் பாதாளத்தில் தன் கர்மங்களை செவ்வனே 

நிறைவேற்றிக்கொண்டிருந்தான்.அவனுக்கு தனக்கு நேர்ந்தது விபத்தோ, நன்மையோ என்பன போன்ற எந்த 

விசாரமும் இல்லாமல் நிச்சிந்தையாக இருந்து வந்தான்.இன்ப-துன்ப விவேகம் எதுவும் அவனுக்கில்லை. 

அவன் பூரண முக்தன்.அனேக கோடி வருடங்கள் மூவுலகங்களையும் ஆட்சி செய்த பலி ராஜன் அந்த 

நினைவுகள் எதுவும் இல்லாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்.இந்திர பதவி அவனைத் தேடி ஒரு நாள் 

வரும் . அவனும் மூவுலகங்களையும் மீண்டும் ஆட்சி செய்வான். ஆனால் அவனில் எந்த எதிர்பார்பபும் 

இல்லை.அரச பதவியை இழந்து பாதாளத்திற்கு தள்ளிவிடப்பட்ட பொழுதும் அவன் 

வருந்தவில்லை.இயற்கையாக எது வருகிறதோ அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அந்த நித்திய 

சாந்தியில்- பரமானந்தத்தில் ஆழ்நதிருந்தான் பலி ராஜன் 

இது தான் பலி ராஜனின் கதை. இராமா, நீயும் பலி ராஜனுக்கு உண்டான அந்த சத்திய தரிசனம் 

அனுபவிப்பாயாக.பரம பதத்தின் நித்தியானந்தத்தில் ரமித்திருப்பாயாக.பயனில்லாததும் பொய்மையுமான 

லௌகீக சுகங்களின் பால் ஈர்க்கப்படாமல் இருப்பாயாக.தூரத்தில் தெரியும் பாறாங்கற்கள் அளவிற்கு தான் 

இந்த பிரபஞ்ச வஸ்துக்களிற்கு உன்னுள் இடமளிக்கலாம்.அவை அதற்கு மேல் எந்த கவனிப்போ, 

பரிசீலனையோ, பற்றுதலோ பெறுவதற்குரியவை நல்ல.ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு அதாவது 

முயலும்பொழுது உன் மனதை ஒருமுனைப் படுத்தி அந்த பரமாத்மாவில் லயிக்க விடு.இராமா, நீ 

அனந்தாவபோதத்தின் எல்லையற்ற ஒளிக்கீற்றுக்களாகி இருக்கிறாய்.உலகங்கள் எல்லாம் 

உன்னிலடக்கம்.உனக்கு நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?நீ எல்லையற்றவன்.இந்த ப்ரபஞ்சம் வஸ்துக்கள் 

எல்லாம் நீயெனும் நூலில் கோர்த்த மணிகள் தான்.நீயெனும் ஒரு தனி மனிதன் பிறக்கவும் இல்லை; இறக்கத் 

போவதுமில்லை.ஆத்மா மட்டும் தான் உண்மை.பிறப்பும் இறப்பம் வெறும் கற்பனைகளே! வெறும் மித்யை- 

பொய்மை.உலக வாழ்விலுள்ள எல்லா துன்பங்களைக் குறித்தும் ஆராய்ந்து பார்.ஆனால் எதிலும் பற்று 

வைக்காதே. இராமா, நீ தான் பகவான்; பகவத் சைதன்யமும் நீ தான் . உலகம்இருப்பதே 

அந்தபிரபையினால்த் தான்.பிரபஞ்சத்தின் இருப்பிற்கு வேறு காரணம் ஏதும் கிடையாது.இதற்கு முன்னால் 

விருப்பு-வெறுப்பு எனும் இரட்டைகள் உன்னில்ஆதிக்கம் செலுத்தி வந்ததன.அந்த இரட்டை மனோபாவத்தை 

கைவிட்டு விட்டால் உனக்கு சமத்தவ பாவம் கைவரும். அத்துடன் பிறப்பு-இறப்பு எனும் சக்கர 

சுழற்சியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

“மனம் ஆழ்ந்து செல்லக்கூடிய எல்லாயிடங்களிருந்தும் நீ பின் வாங்கி சத்தியத்தை நோக்கி திரும்புவாயாக”

சத்தியத்தை விசாரித்து அறியாமல் தானாகவே குரு என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர்களின் 

வார்த்தைஜாலங்களில் மயங்கி அவர்களது வலையில் விழாமல் கவனமாக இருக்க வேண்டும். நான் ஓனறு 

மட்டும் உறுதியாகக் கூறுவேன்:என் உபதேசங்களின் படி நடந்துகொண்டால் உனக்கு ஆத்ம சாக்ஷாத்கார 

அனுபவம் உண்டாகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s