நாயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 251

தினமொரு சுலோகம்

நாள்251

நான் யார்?

ஸர்வஸம்ப்ரம்ம ஸம்ஶாந்த்யை ப்ரமாத் பலாயதே ச

ப்ரம்மவிஶ்ராந்திபர்யந்தோ விசாரோஅஸ்து தவானக்க !

பகவான் சொன்னார்: ‘பிரகலாதா, உன்னில் நற்குணங்களின் ஒரு மகா சமுத்திரமே இருக்கிறது.உண்மையிலேயே நீ அசுரர்களுள் ரத்தினம் தான் மாணிக்கம் தான்…பிறப்பு- இறப்பின்

துன்பங்கள் இல்லாமலாவதற்கு என்ன வரம் வேண்டுமோ கேள், தருகிறேன்.’

பிரகலாதன் சொன்னான்:”பகவான்,தாங்கள் எல்லா உயிரினங்களின் ஜீவனிலும் வசிக்கிறீர்கள்.எங்கள் இச்சைகளை பூர்த்தி்செய்வதும் தாங்களே.எது முடிவில்லாததும், ஈடு இணையற்றதும் என்று தாங்கள் கருதுகிறீர்களோ அது தான் எனக்கு வேண்டும்.”

பகவான் சொன்னார்: ” எல்லையில்லாத பிரம்மத்தில் சென்றடையும் வரை சஞ்சலங்களற்ற  விசாரணை செய்வதற்கான உத்வேகம் உண்டாகட்டும்.அவ்வாறு உன்னிலுள்ள மாயா பிரமைகள் அகன்று,பரலமபதம் என்ற உயர்ந்த இடத்தை அடைவாய்!”

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இதை சொல்லிவிட்டு பகவான் மறைந்தார்.பகவானை துதி செய்து ஸ்தோத்திரங்களை சொல்லி பூஜையை முடித்துக்கொண்டான் பிரகலாதன்.

பிறகு இவ்வாறு யோசிக்கலானான்: ” ‘ தொடர்ந்து விசாரணை செய் ‘என்று  பகவான் சொன்னார்! 

ஆத்மாவைக் குறித்து சிந்திக்கத்தான் வேண்டும்.இந்த பிரபஞ்சத்தில் நடந்து கொண்டும், பேசிக்கொண்டும் லௌகீகமான செயல்களை ஆற்றிக்கொண்டும் இருக்கின்ற ‘நான் யார்’ என்று விசாரித்து அறியத்தான் 

வேண்டும்.மரங்களும், செடி கொடிகளும் நிறைந்த உயிரற்ற அசையா வஸ்துக்கள் நிறைந்திருக்கும் புற உலகமல்ல நான் என்பதில் சந்தேகமில்லை.சிறிய காலம் மட்டும் வாழுகின்ற, பிராண வாயுவின் தயவில் இருந்து கொண்டிருக்கின்ற தேகமல்ல ‘ நான் ‘.

ஜடப் பொருளான புறப் புலன்களால் அறியக்கூடிய வார்த்தைகளோ, ஒலியோ அல்ல ‘ நான்’.காரணம் காற்றின் அசைவில் உருவாகும் ஒலி  நானாக முடியாது.அது நிரந்தரமில்லை.’நான்’ ஸ்பரிசமும் 

இல்லை.அதுவும் தாற்காலிகம் தான்.அனந்தாவபோதத்தின் சக்தியால் மட்டுமே அதற்கு உயிரோட்டம் உள்ளது.நான் நாவில் தோன்றும் ருசியும் அல்ல.ஏனென்றால் அது மாற்றத்திற்குட்பட்டது.நாவாகட்டும் 

எப்பொழுதும் புற உலகப் பொருட்களுடன் தொடர்பிலிருந்து கொண்டிருக்கின்ற ஒன்று.நான் தோன்றி மறைகின்ற காட்சியுமல்ல.காண்பவனின் மனோ விசார-விகாரங்களை பொறுத்து வேறு வேறு விதமாக தோற்றமளிக்கின்ற காட்சிப்பொருளுமல்ல.நான் மணத்தறியும் உணர்வுமல்ல.மணம் நாசியின் கற்பனையின்படி வேறு வேறாக உணரப்படுகிறது.இந்த கற்பனையிலுளவாகின்ற குண நலன்கள் எதுவுமில்லை 

நான்.இந்திரியங்களின் செயல்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.நான் சுத்தமான – களங்கப்படாத-மாசற்ற போதம் தான் .நினைத்துப் பார்க்க முடியாத பூரண சாந்தி தான் நான்.
.    

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s