யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 252

தினமொரு சுலோகம்

 நாள்252

ஸர்வ வியாபி

ஆஇதானீம் ஸ்த்யுதம் ஸத்யமேதத்ததகிலம் மயா

நிர்விகல்ப்பசிதாபாஸ ஏஷ ஆத்மாஸ்மி ஸர்வக: !

பிரகலாதனின் சிந்தை இன்னும் ஆழமாக சென்றது:” நான் ஸர்வ வியாபியான ஸ்த்யு வஸ்துவாக 

உள்ளேன்.அதனால் அதில் விஷயங்களோடு விஷய சம்பந்தமான எண்ணங்களோ கற்பனைகளோ

கிடையாது.நான் சுத்த போதம் தான்.இந்த போதத்தின் சக்தியினால் தான் ஒரு சின்ன மண்பாண்டத்திலிருந்து 

எப்பொழுதும் ஒளி உமிழ்ந்து கொண்டிருக்கின்ற சூரியன் வரை நமக்கு அறிவாகிறது.

“ஆகா!நான் உணருகிறேன். நான் சர்வ வியாபியான மனோ விசாரங்கள் ஏதுமில்லாத, சங்கல்பங்கள் 

ஏதுமில்லாத ஆத்மா தான்”

ஆத்மா தான் எல்லா புலன்களின் உள்ளே ஒளியாக இருந்துகொண்டு,அந்த புலன்கள் உளவாக்கும் 

அனுபவங்களை நமக்கு உணர்த்துகின்றது.பிரபஞ்ச பொருட்களுக்கு அசைவு உண்டு என்று தோற்றுவிப்பதும் 

ஆத்மா தான்.வாசனா விசேஷங்களை ஏதுமில்லாத, அந்த போத பிரகாசத்தின் மகிமையினால்தான் 

சூரியனுக்கு சூடும் சந்திரனக்கு குளிர்மையும் உளவாவது.மலைகளுக்கு ஸ்தூல உருவமும்,நீரிற்கு அதன் 

திரவத் தன்மையும், உண்டாக்குவது அதே போதம் தான்.உருவம் படைத்த, காணப்படுகின்ற எல்லா பிரபஞ்ச 

வஸ்துக்களின் மூலாதாரமும் அதுவே.ஆத்மாவிற்கு மூலம்- காரணம் எதுவும் கிடையாது.ஆத்மாவின் 

உள்ளொளி காரணமாகத்தான் பலதரப்பட்ட பிரபஞ்ச வஸ்துக்களுக்கும் அதாதின் குண விசேஷங்களை 

கிடைக்கப் பெற்றுள்ளது. ஆத்மாவிற்கென்று உருவம் கிடையாது என்றாலும் எல்லாவற்றிற்கும் உருவம் 

தந்துள்ளது அந்த ஆத்மா தான்.
ஆத்மாவிலிருந்து தான் பல விதமான குண நலன்களோடும் நிற வித்தியாசங்களிலும் காணப்படுகின்ற இந்த 

பிரபஞ்சம் தோன்றியுள்ளது.ஆக்கல், காத்தல், மற்றும் அழித்தல் என்ற மூன்று கர்மங்களையும் ஆற்றுகின்ற 

மும்மூர்த்திகளான பிரம்மா-விஷ்ணு-சிவன் மூவரும் ஆத்மாவிலிருந்து தோன்றுகிறார்கள்.ஆனால் ஆத்மா 

தோன்றுவதற்கு காரணமோ மூலாதாரமோ எதுவும் கிடையாது.அவ்வாறு  சுயமாக ஒளிர்நதுகொண்டிருக்கின்ற 

ஆத்மாவை நான் வணங்குகிறேன்.அது ஞானம்-ஞானி-விஷயம்-விஷயீ-முதலிய எல்லா இரட்டைகளுக்கும் 

புறம்பானது.

பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிலும் ஆத்மா நிறைந்திருக்கிறது.அது வசிக்கின்ற இடம் பிரபஞ்ச 

வஸ்துக்கள்.அது எதை எப்படி கற்பனை செய்கின்றதோ அது அப்படியே உருவாகிறது.அது தன் விருப்பத்தின் 

காரணமாகவே பிரபஞ்ச வஸ்துக்களை சிருஷ்டிக்கின்றது!அழிக்கிறது!எல்லையற்ற பொருட் கள்தோன்றுவது 

எல்லையற்ற போத மண்டலத்தில்த்தான்.சூரிய ஒளியால் உருவாகி, பெரிதாகி, குறுகி, காணாமல் 

போய்விடுகின்றதோ நிழல்களைத்தான் நாம். காண்கிறோம்.ஆனால் இந்த ஒளி ஆத்மா கண்ணுக்கு- 

புறக்கண்ணுக்குத் தெரிவதில்லை.அதை தெரிந்து கொள்ளவும் இயலாது.இதயம் சுத்தமானவர்களால் மட்டுமே 

அடையக்கூடியது கூடிய நிலை அது.

 ஆனால் மகான்கள் அதை மாசுமறுவற்ற எல்லையற்ற, ஆதியும் அந்தமும்்இல்லாத,பிரபஞ்ச- விசுவ 

போதமாக உணருகிறார்கள்.ஆத்மா அல்லது பிரம்மம் மூவுலகங்களிலும் பிரிக்க முடியாமல் புற்கொடி முதல் 

சிருஷ்டிகர்ததாவான பிரம்மா வரை எல்லாவற்றிலும் அணையா ஒளி விளக்காக சுயமாக நிறைந்து 

காணப்படுகிறது.அதற்கு முதலும் இல்லை; முடிவுமில்லை.அது  எல்லாவற்றிலும் எப்பொழுதும் 

நிறைந்து நிற்கின்றது.உயிருள்ள- உயிரில்லாத எல்லா பொருட்களிலும் ஆத்மானுபவமாக – மற்றவர்கள் 

கண்ணுக்கு புலப்படாத சக்தியாக நிற்கின்றது.

    

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s