யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 258

தினமொரு சுலோகம் 258

நாள் 258
ஆத்மாவிற்கு-பரமாத்மாவிற்கு நமஸ்காரம்

ஸ்துத்யா ப்ரணத்யா விஞ்ஞப்த்யா ஶமேன நியமேன ச

லப்தோஅயம் பகவானாத்மா த்ருஷ்டஶ்சாதீகத:ஸ்புடம் !

பிரகலாதன்தொடர்ந்து சிந்திக்கலானார்:” எனது பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும்:இந்திரிய சுகங்களினமீதுள்ள விருப்பங்களெனும் நாகரிகமான பாம்புகள் என்னை விட்டு அகன்று சென்றுவிட்டன.என்னுள் இருந்த ஆசைகளும் மாயா சங்கல்பங்களும் அழிந்துவிட்டன.பரமசத்தியத்தின் தளத்தை எட்டிவிட்டேன்.

” பகவத் கீர்த்தனைகளினாலும் ,நமஸ்காரங்களின் வழியாக, பிரார்ததனைகளின் காரணம்,கட்டுப்பாடான வாழ்க்கை முறைகளின் காரணம்,சம்பாதித்த மன நிம்மதியாக என்னால் ஆத்ம சொரூபமான  பகவானை காணமுடிந்தது.”.

விஷ்ணுவின் ஆசியால் பரம்பொருளைக் சாக்‌ஷாத்கரிக்கவும் முடிந்தது.அதை ( அந்த பலமானசத்தியத்தை)இதயத்தில் உறுதிப்படுத்திக்கொண்டு கொள்ளவும் முடிந்தது.இந்நாள்வரை என்னை

அவதிக்குள்ளாக்கிக் கொண்டிருந்த அஞ்ஞானமும்,இயலாமையும்,மனோ மயக்கங்களும்,என்னை விட்டு அகன்று விட்டன.

அஞ்ஞானமெனும் பயங்கர வனத்தில்,இந்திரியாஸக்திகளெனும் விஷ மரணமெனும் இருளடைந்த பள்ளங்களுள்ளன.சர்பபங்கள் வாழ்கின்ற புற்றுக்கள் உள்ளன.

துன்பங்களும் துயரங்களும் படர்நதெரியும் காட்டுத்தீ யாக வலம் வருகிறது.கோபதாபங்களெனும் திருடர்கள்அலைந்து கொண்டிருக்கிறார்கள்.அதற்கெல்லாம் மேலாக அகம்பாவம் எனும் சக்திவாய்நத எதிரி அங்குதான் வசிக்கிறான்.

இப்பொழுது, நான் சுய முயற்சியினாலும் பகவான் விஷ்ணுவின் அருளாலும் அவைகளிலிருந்தெல்லாம் விடுதலை பெற்று விட்டேன்.என் போதம்- மேதா சக்தி- பூர்ணமாக விழித்து எழுந்து விட்டது.இந்த மயக்கம் தெளிந்த நிலையில் அகம்பாவம் என்ற பொருளை காண்பதற்கேயில்லை.சூரியனின் ஒளியில் இருளைக் காண முடியுமா?.அகம்பாவம் என்ற பேயை அழித்துவிட்டதினால்,நான் மேலான  அமைதியை  உணருகிறேன். அகம்பாவத்தை அழித்து, சத்தியத்தை சாக்‌ஷாத்கரித்து விட்டால், மனோமயக்கங்களுக்கும், துன்பத்திற்கும்,ஆசா-பாசங்களுக்களுக்கும்,எதிர்பார்ப்புகளுக்கும்   மனப் பிரமைகளுக்கும் எங்கு

இடமுள்ளது?

நரகம் குறித்துள்ள சிந்தைகள்,முக்தி யை நாடுதல்,இவையெல்லாம் அகம்பாவம் உள்ளவரையில் தான் உயிருள்ளவை.வெற்றிடத்தில் சித்திரம் வரைய முடியுமா? அதற்கு ஒரு சுவர் வேண்டுமல்லவா? அக்ம்பாவம்

எனும் கரிய மேகம் கலைந்து ஆசா-பாசங்கள் எனும் புயல் அடங்கி -என்னுள் போதம் பூர்ணமாக உதித்து எழுந்துள்ள பொழுது,சரத்காலத்து சந்திரன் பூர்ணமாகொளிரும்பொழுது   என் போதம் ஆத்ம ஞானம் எனும் பூரணத்துவத்தில் நிற்கின்றது.அகங்காரத்திலிருந்து விடுபட்டுவிட்ட அந்த ஆத்மாவை நமஸ்கரிக்கின்றேன்.பயம் உளவாக்குகின்ற இந்திரியங்களையும், எல்லாவற்றையும் விழுங்குகின்ற சக்தியுடைய மனதையும்  .கீழ்ப்படுத்தி வெற்றிகண்டஆத்மாவிற்கு என் நமஸ்காரங்கள்.பரமானந்தம் எனும் தாமரை விடர்நது மகிழ்ச்சியுடைய ஆத்மாவிற்கென்றுநமஸ்காரங்கள்.போதமும் தியானமும் இரு சிறகுகளாக

நிலைகொள்கின்ற இதயத்தாமரையில் வசிக்கின்றஆத்மாவை வணங்குகிறேன்.அஞ்ஞான இருளை அகற்றியசூரியனான ஆத்மாவிற்கு என் நம்ஸ்காரங்கள்.அன்பே உருவான, அன்புடன் பிரபஞ்ச வஸ்துக்கள் யாவற்றையும் போற்றி பாதுகாக்கின்றஆத்மாவை நமஸ்கரிக்கின்றேன்.

நெருப்பபி ல் பழுத்த  இரும்பைஅறுப்பதற்கு இன்னொரு இரும்பு தான் வேண்டும் என்பது போல், நான் என்மனதைஅடக்கி, தூய்மைப்படுத்தியது மனதால்த்தான்.ஆசைகளையும் அஞ்ஞானத்தையும் அவைகளால் உளவாகின்ற இரட்டைகளையும் மனதால்த்தான் அறுத்தெறிய இயலும்.அஹங்காரம் கட்டுப்படுத்தாத என் உடல் அதில்இயற்கையாக உளவாகின்ற சக்தியை பயன்படுத்தி செயலாற்றுகின்றது.பிறப்பில் உண்டான வாசனைகள்,மனோபாதைகள்,குறைபாடுகள் என்னில் இல்லாமலாகி விட்டன.அந்த மாயாவலயத்தில் சிக்கி இவ்வளவு நாட்கள் வாழ்ந்தேன் என்று எண்ணிப்பார்க்க பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.முழு சுதந்திரத்துடன், எந்த விதமான மனோ பாரமுமில்லாமல்,ஆஸக்தியோ ஆசையோ இல்லாமல்,அஹம் என்கின்ற கற்பனை பேரின்பம் உணர்வில்லாமல்,அம்மாதிரி அஞ்ஞானத்தால் பாதிக்கப்படாமல், சுகங்களைத் தேடி சஞ்சலங்களுக்கும் சபலங்களுக்கும் ஆட்படாமல்நான் பரமமான சுக நிலையை அடைந்துவிட்டேன்.எல்லா துன்பங்களும் அழிந்து விட்டன. பரம சுகம் இன்று.

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s