யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 259

தினமொரு சுலோகம்

நாள் 259

ஆத்மசாக்‌ஷாத்காரத்திற்கு பின்—

வாச்யவாசகத்யஷ்டைவ பேதோ யோஅயமிஹாவயோ:

அஸத்யா கல்பனைவைஷா வீசீவீச்யம்பஸோரிவ !

பிரகலாதன் தன் தியானத்தைத் தொடர்ந்தார்:” அவ்வாறு, கடைசியில், எல்லா நிலைகளுக்கும் மேலான, போத மண்டலங்களுக்கும் அப்பாற் பட்டஆத்மாவை நான் சாக்‌ஷாத்கரித்துவிட்டேன்.அப்படிப்பட்ட ஆத்மாவே, என் பாக்கியம் உன்னை நான் கண்டுள்ளேன்.உனக்கு என் நமஸ்காரம்.நமோவாகம்.உன்னை தான் மாறோடு அணைத்துக்கொளார்கள் கொள்கிறேன். உன்னையன்றி இந்த மூவுலகங்களிலும் யார் எனக்கு நண்பனாக உள்ளார்கள்? உறவு என்று சொல்வதற்கு யாரிருக்கிறார்கள்?எல்லாவற்றையும் இல்லாமலாக்கினது நீ தான்.!எல்லாவற்றையும் தருவதும் நீ தான்!அவைகளை காப்பாற்றி பாலிப்பதும் நீ தான்!எல்லாவற்றையும் நடத்திக்கொண்டு போவதும் நீ தான்.உன்னை நான் கண்டு விட்டேன; உன்னை அடைந்து விட்டேன்.இனி நீ செய்வதற்கு என்ன இருக்கிறது?என்னை இட்டு எங்கு செல்வாய்?

இந்த உலகமாக காண்பதெல்லாம் நீ தான்.உன்’சத்’ தான் உலகம் முழுவதும் வியாபித்து இருப்பது.ஏய்ஆத்மாவே, நீ எங்கு போய் ஒளிந்து கொள்ள முடியும்?காலம்காலமாகமாக எனக்கும் உனக்கும்இடையில் அஞ்ஞானம் என்னும் மறை இருந்தது. அது ஒரு தாண்ட முடியாத மதில்கள் போல்  தோன்றியது.இப்பொழுது அந்த மதில் உடைந்து தூள் தூளாகிவிட்டது.இப்பொழுது நமக்கிடையே இடைவெளியே கிடையாது.நேடுவதற்கு தகுதியானவையெல்லாம் நேடிவிட்டேன்.எல்லா கர்மங்களின் கர்த்தாவும் போக்தாவும்  நீயே! உனக்கு நமஸ்காரம்.ஆத்மா தான் நித்தியம்; ( அழிவில்லாததும்) தூயது ; அதுவே  ஈஸ்வரன்.அப்படிப்பட்ட பிரம்மா விஷ்ணு மகேஶவரருக்கு என் நமஸ்காரம்.

‘ ஹே, ஆத்மாவே, உனக்கும் எனக்கும் இடையில் வெறும் வார்த்தைகளில்த்  தான் வித்தியாசம் உள்ளது.வார்த்தைகளும் அவைகளின் பொருளும் போல்,அலைகளும், நீர்த்திவலைகளும் போல் நம்மிடையே உள்ள வேற்றுமைகள் வெறும் கற்பனையே!அது உண்மையல்ல. பொய்மை.!’

காண்பவனாகவும்  நுகர்பவனாகவும்,இருக்கின்ற ஏகமானதான அந்த உண்மைக்கு எனது நமஸ்காரம்.பிரபஞ்சத்திலுள்ள எல்லாபொருட்களையும் சிருஷ்டித்து அவைகளாகவே மாறி வளர்நது நிலைகொள்கின்ற ஆத்மாவிற்கு என்நமஸ்காரம்.எங்கும் எதிலும் நிறைந்திருப்பவனுமான ஆத்மாவிற்கு என் நமஸ்காரம்.

பொருட்களாகவும் அவைகளின் உருவமாகவும் உருக்கொண்டு, அவைகளை நீ என்று பொய்மை தோற்றத்தை கற்பனை செய்து ஏமாந்து கொண்டிருந்தேனே! என்னே பரிதாபம்!அந்த மாயா கற்பனையினால், ஆத்மஞானம் இல்லாமலாகி, முடிவற்ற துயரங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பிறவிக்கு மேல் பிறவியாக சகித்துக் கொண்டிருந்தாயே! வெளி பிரபஞ்சமாக காணப்படுகின்ற எல்லாம் வெறும் கற்களும் மண்ணும் தான், நீ  உயிரோட்டமாக அவைகளில் இல்லாத வரை அவைகள் எதுவும் சத்தியமில்லை.

ஆத்மஞானம் உண்டாகிவிட்டால் வேறு எதை விரும்புவது? பகவானே, தங்களை நான் கண்டுவிட்டேன்! தங்கள் வாச ஸ்தலத்தில் நான் வந்தடைந்துவிட்டேன்.எனக்கு எந்தவிதமான மனோ மயாக்கங்களும். இல்லை. ஆகவே உனக்கு நமோவாகம்!பகவான், ஆத்மா கண்ணிற்கு கண்! அது சரீரம் முழுவதும் பரவியிருக்கின்ற மேதா சக்தியாகவிருந்தும் ஏன் கண்ணிற்கு தெரிவதில்லை.எனக்கு ஏன் அனுபவமாக மாட்டேனென்கிறது?ஸ்பரிசம், முதலிய இந்திரிய அனுபவங்களை அறிகின்ற அந்த மேதா சக்திக்கு உன்னை மட்டும் ஏன் பகுத்தறிய முடியவில்லை.?அது ஒருவனை விட்டு விலகிப் போக முடியுமா?அதுவே தானே அறியும் சக்தியும் மணத்தறியும்சக்தியுமாக நம்மில் மயிர்கூச்சத்தை உளவாக்குகின்றது? மற்ற பொருட்களின் இனிமை யை உணர முடிகின்ற அந்த மேதா சக்திக்கோ ஏன் சொந்த இனிமையும் உணர முடியவில்லை? ஏன் தன்னுடைய வாசனையை உணர இயலவில்லை?வேத சாஸ்திரங்களில் புகழ்ந்து பாடும் அதன் பெருமையை அது ஏன் உணர்வதில்லை? ஆத்மாவே, நான் உன்னை க்‌ஷாத்கரித்துவிட்டேன். இதுவரை நான் அனுபவித்து வந்த இந்திரிய சுகங்களில் இப்பொழுது எந்த நாட்டமுமில்லை.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s