யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 253

தினமொரு சுலோகம்

நாள் 253

பிரம்மத்தின் சக்தி அளவிட முடியாதது! 

க்ருதம் யதாந்த: பயஸோ ரஸஶக்திர்யதா ஜலே

சிச்சக்தி: ஸர்வபாவேஷு ததாந்தரஹமாஸ்தித:!

பிரகலாதன் தனது தியானத்தைத் தொடர்ந்தார்: ‘ எல்லா உயிரினங்களும் அனுபவிக்கின்ற அனுபவங்களெல்லாம் அனுபவிப்பது ஆத்மா தான்.ஆகவே தான் ஆத்மாவிற்கு ஆயிரம் கைகளும் கண்களும் உண்டு என்று கூறுகிறார்கள்.சூரியனின் அழகான உருவமாகவும் வாயுவாகவும் மற்றபடி எல்லாவுமாக ஆத்மா ”நான்’ ஆகி ஆகாயம் முழுவதும் வியாபித்திருக்கின்றது.சங்கு-சக்கர-கதா தாரியான விஷ்ணுவாக இந்த உலகை ஆளுவதும் ஆத்மா தான்.இதே ஆத்மா தான் தாமரை மலரில் அமர்ந்து சிருஷ்டி கர்மத்தை நிர்வகிப்பதும் !ஆத்மாவே பிரம்ம தேவன்.இந்த உலக சக்கரம் சுழல்வது நிலைக்கும் போது எல்லாவற்றையும் கரைத்து தன்னில் லயனம் செய்யும் சம்ஹார மூர்த்தியும் ( மஹேசுவரனும்) இதே ஆத்மா தான். இந்திரனால்உருவகப்படுத்தப்பட்ட ,’ நான்’என்று சொல்லப்படுகின்ற ஆத்மா தான் உலகை காத்து ரட்சிக்கின்றது.
‘ நான் ஆண், நான் பெண்,நான்இளைஞன்,நான் தலை நிரைத்த வயோதிகன்,நான் எப்பொழுதும் எல்லாமே தான்.உடல் இங்கு தோன்றியதால், நான்இங்கு பிறந்தவனாகிறேன்.உண்மையில் நான் எங்கும் பிறக்கவில்லை; அது ஒரு மாயத்தோற்றமே!நான் எங்கும் இருப்பவன் சர்வகவியாபி! அனந்தாவபோதத்தில் உருவாக்கப்பட்ட பூமியில் நான் மரங்களாகவும்,செடிகொடிகளாகவும் ,அவையினுள் இருக்கும்  உள்ளுணர்வாகவும் இருக்கிறேன் .சேறு புரண்ட குழந்தையின்  கை போல் என்ம கிமையில் பிரத்யட்ச பிரபஞ்சம் முழுவதும் நானே நிறைந்திருக்கிறேன்.இந்த பிரபஞ்சத்தின் உண்மை நிலை, ‘என்னில்’- ஆத்மாவில்  அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.அது என்மூலம் செயலாற்றுகின்றது.ஆனால் அதை விட்டு விடும்பொழுது அதற்கு ஆதாரம் இல்லாமலாகிவிடுகிறது.பிரபஞ்சம் உண்மை என்று அது வரை எண்ணியிருந்த அந்த சத்யம் காணாமல் போய்விடுகின்றது.

கண்ணாடியில் காணும் நிழல் உருவம் போல் இந்த பிரபஞ்சம்’என்னுள்’ ஆத்மாவில் , அனந்தாவபோதத்தில் தெரிகிறது.மலர்களின் வாசனை நான்; ஒளியின் ஒளி நான்; அவைகளினால் உளவாகின்ற அனுபவங்களும் நான். எல்லா உயிரினங்களின்- உயிரில்லாதவைகளின் உட்பொருள் நான்.வாசனைகளற்ற சுத்த போதம் நான்.விசுவ பிரபஞ்சத்தின் ஆத்மாவும் நானே!

” பாலில் வெண்ணை எப்படி கண்ணுக்குத் தெரியாமலே இருக்கிறதோ,நீரின் திரவத்தன்மை போல் போதத்தின் சைதன்யம்போல் எல்லாவற்றின் ‘சத்’ தான உட்பொருள் நான் தான்.”

கடந்த காலம்- நிகழ்காலம்- வருங்காலம் என்ற முக்காலங்களாக நாம் காணுகின்ற பிரபஞ்சம் அனந்தாவபோதத்தில் எவ்வித வேற்றுமைகளும் இல்லாமல் நிலைகொள்கின்றது.சர்வ வியாபியும், சர்வ சக்தனுமான விசுவ புருஷன் இந்த ஆத்மா அதாவது ‘ நான்’ இந்த விசுவம் யதேச்சையாக என்னில் வந்து நிறைந்து விட்டது.அது என்னால் எல்லாயிடங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. .   .நான் ஆத்மாவாக, பரமாத்மாவாக, அனந்தாவபோதமாக,பிரளயத்திற்கு பின்பும் விசுவம் முழுவதும் பிரபஞ்ச சமுத்திரமாக நிறைந்து காணப்படுகின்றது.அங்கங்களில் குறையுள்ள உயிரினங்கள்கூட சமுத்திரத்தின் எல்லையற்ற தன்மையை உணர்வது போல், ‘நானும்’ என் இயற்கையான திறைமையை உணருவதில்லை;அதை அளவிட முடியாது என்று மட்டும் உணருகிறேன்.

அனந்தாவபோதத்தைக் பொறுத்த மட்டில் இந்த பிரபஞ்சம் என்பது ஒரு சிறு தூசுக்கு சமானமே.அது என்னை திருப்திப்படுத்த போதுமானதல்ல.யானைப் பசிக்கு சோளப்பொரி எம்மாத்திரம்?பிரம்மனின் கிரகத்தில் ஆரம்பித்து அனேகமனேகம் பெயர்களுமே உருவங்களும் உண்டாகிக்கொண்டேயிருக்கின்றன; வளர்ந்து கொண்டேயிருக்கின்றன.

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s