யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 255

தினமொரு சுலோகம்

நாள் 255

மாற்றமேயில்லாத பரம்பொருள்

பாவனாபாவமாஶ்ரித்ய பாவஸ்த்யுஜதி துக்கதாம்

ப்ரேக்ஷ்ய பாவம்பாவேன பாவஸ்த்யுஜதி துஷ்டதாம்!

பிரகலாதன் தன் சிந்தனையை தொடர்ந்தார்:” அனந்தாவபோதம் எண்ணிக்கையிலடங்காத உலகங்களை தனது மூன்று காலங்களிலும் அனுபவிக்கின்றது. அது எல்லாவற்றையும் வளைத்துப்   பிடித்துக்கொள்கின்றது. எல்லாவற்றையும் காண்கின்றது.ஆனால் தான் எந்த வித மாற்றங்களுக்கோ சஞ்சலங்களுக்கோ ஆளாகாமல் எல்லா காலங்களிலும் இருந்து கொண்டிருப்பது அது ஒன்று மட்டும் தான்.அதனால் ஒரே நேரத்தில் இனிமையான அனுபவங்களையும் கசப்பான அனுபவங்களையும் தனதாக்கிக் கொள்ள முடியும்.அது எப்பொழுதும் பூரண அமைதி நிலையில் அசைவற்று இருந்து கொண்டிருக்கிறது.பலவிதமான சூழ்நிலைகளை எதிரக்கொள்ளும்பொழுதும் அனந்தாவபோதத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.ஏனென்றால் அது எல்லாவிதமான வாசனைகளுக்கும் மாற்றத்திற்கும் புறம்பானதாகவிருந்தும் நிலைகொள்கின்றது.எந்த விதமான சங்கல்பங்களோ எண்ணங்களோ இல்லாத ஒரு நிலையில் அது இருக்கின்றது.அது மட்டுமல்ல; ஒரே நேரத்தில் மிகவும் நுண்ணியமானதாகஇருந்து கொண்டும் எல்லாவற்றையும் தன்னுள் உட்கொண்டும் நிலைகொள்கின்றது.என்றும் எப்பொழுதும் சாந்தமும் அசைவற்றதாகவும் இருக்கிற ‘சத்’ அது.

ஒருபொழுதும் மாற்றத்திற்கு உள்ளாகாத பொருளான அதை மாற்றங்களுக்கெல்லாம் ஆட்பட்டு பிரபஞ்ச வாழ்க்கையை நீந்தி கடந்து ஒரு ஜீவன் அதை நாடி வரும்பொழுது அந்த சத் வஸ்து துன்பங்களை எல்லாம் 

துடைத்து எறிகிறது.அசைவில்லாத அசஞ்சலமாய் அந்த பொருள் ஒரு சாட்சியாக மட்டும் தன்னை காணும்பொழுது அதிலிருந்து வந்த எல்லா தீமைகளும் இல்லாமலாகி விடுகின்றது.”

அனந்தாவபோதம் மூன்று காலங்களுக்கு சம்பந்தப்பட்ட  விசார -விகாரங்களை கைவிடும்பொழுது எல்லா பந்தங்களிலிருந்தும் பந்தனங்களிலிருந்தும் விடுபட்டு பூரண முக்தனாகிறது. அப்பொழுது கற்பனை ஏதுமில்லாத சஞ்சலங்கள் ஏதுமில்லாத ஒரு பூரண சாந்தி உளவாகிறது; அதை தவிர்த்து அங்கு வேறு ஒரு ‘சத்திய வஸ்து’  இல்லை என்ற உண்மை நிலைமை புலனாகிறது.ஆனால் அதை விவரிக்க இயலாது. அதனாலையே சிலர் ஆத்மா என்றொரு ‘சத்’ கிடையாது என்று வாதிடுகிறார்கள்.பிரம்மம் அல்லது ஆத்மா என்பது உண்டா இல்லையா என்ற வாதங்களில் எது சரியாக இருந்தாலும் மாற்றத்திற்கு உட்படாத, அழிவில்லாத, முடிவற்ற அந்த நிலை தான் பரம முக்தி.எண்ணங்கள்- மனோ விருத்திகள் எனும் சஞ்சலங்களில் போதம் மறைந்திருக்கிறது.ஆகவே போதத்தை நம்மால் சாக்‌ஷாத்கரிக்க இயலாமல் போகிறது. ஆசைகளிலும் நிராசைகளிலும் விருப்பு- வெறுப்புகளிலும் மூழ்கியிருப்பவர்களுக்கு அது கிட்டாப்பொருளே! அவர்கள் எண்ணங்கள் எனும் சிலந்திஙலையில் சிக்கி வெளியே அவர் வழி தெரியாமலே தவிக்கிறார்கள்.என் முன்னோர்களும் அவ்வாறு தான் இருந்தார்கள்.ராக-துவேஷங்கள்- விருப்பு- வெறுப்பின் பிடியில் அகப்பட்டு, இரட்டை மனோபாவங்களில் உழன்று, புழு பூச்சிகளைப்போல் போல் வாழ்ந்தார்கள்.ஆசை எனும் பேய் அடங்கி, தீய மனோபாவங்கள் அழிந்து, அஞ்ஞான சங்கல்பங்கள் எனும் திரை விலகி,மனோ விகாரங்கள் ஒடுங்கி, உண்மையான உள்ளுணர்வு யாரில் உதயமாகிறதோ, அவர்கள் மட்டும் தான் உண்மையில் வாழ்கிறார்கள். அனந்தாவபோதம் என்ற ஒரேயொரு உண்மை மட்டும் தான் உள்ளது எனும் பொழுது வேறு சிந்தைகள் எப்படி முளை விடும்?

நான் அந்த ஆத்மாவை வணங்குகிறேன்.

நான் என்னை வணங்குகிறேன்.

பிரித்துப் பார்க்க முடியாத அனந்தாவபோதம் காண்கின்ற, காணமுடியாத, எல்லா பிரபஞ்சங்களின் மகுடத்திலுள்ள இரத்தினம் தான் .அதை அடைவது அவ்வளவு எளிதல்ல.அது இப்பொழுது கிடைத்து விட்டது.

நான் அதை உணர்த்த விட்டேன்.உன்னை நான் சாக்‌ஷாத்கரித்து விட்டேன்.எல்லா விகற்பங்களுக்கும் அப்பாற்பட்டதாக உன்னை காண்கிறேன்.

நீ நீயாக இருக்கிறாய் நீ நானாகவும் இருக்கிறாய்.நான் நீயும்! உனக்கு என் வணக்கங்கள்.

உனக்கும் எனக்கும் பரமசிவனுக்கும் தேவதேவனுக்கும் பரம்பொருளுக்கும் எனது வணக்கங்கள்

சுய உருவத்தில் – தன் உண்மை உருவத்தில் வெளிப்படுகின்ற ஆத்மாவிற்கு எனது வணக்கங்கள்.

தானாகவே ஆத்மாவில் ஆத்மா நிலைபெறுவதால் அதை அஞ்ஞானத்தின் மறையோ மனோ விகாரங்களாகின்ற அவித்யையோ பந்திப்பதில்லை.
.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s