யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 254

தினமொரு சுலோகம்

நாள் 254

அனந்தாவபோதமும் நிலையற்ற பிரபஞ்சமும் 

ஸர்வ்வபாவாந்தரஸ்தாய சேதமுக்தசிதாத்மனே

ப்ரத்யக்சேதனரூபாய மஹ்யமேவ நமோ நம்: !

பிரகலாதன் தனது மனனத்தை தொடர்ந்தார்:” கண்டிப்பாக இந்த அனந்தாவபோதம் மட்டும் தானே 

எல்லாக்காலங்களிலும் இருந்துள்ளது? பிறகு எப்படி எந்தவொரு காரணவுமில்லாமல் – 

அடிப்படையுமில்லாமல் இந்த எல்லைகளுக்குட்பட்ட  அகம்காரம் முளைத்து வந்தது? ‘ இது நான்’ ‘ அது நீ’ 

என்பன  போன்ற பிரமைகளுக்கும் கற்பனைகளுக்கும் காரணம் தான் யாது?

இந்த உடல் தான் என்ன? சரீரமில்லாத நிலை என்ன? யார் இந்த உடலில் வசிப்பது? யார் மரணம் 

அடைகிறார்கள்? உறுதியாக எனது முன்னோர்கள் அறிவின்மையின் காரணத்தால்த்தான் 

அனந்தாவபோதத்தை மறந்து, இந்த குறுகிய பூமியியில் அலைந்து திரிந்தார்கள். அதில் சந்தேகமேதுமில்லை 

.அனந்தாவபோதத்தின் அளவிட முடியா திறைமைகளையும் இந்த குறுகிய வட்டத்தின் தற்குறித்தனத்தையும் 

ஒன்றாக பார்க்க முடியும்? இந்த சிறிய பிரபஞ்சத்தில்த் தான் எத்தனை வேற்றுமைகள், எத்தனை 

ஆசாபாசங்களை, வாசனைகள்? பூமி முழுவதும் இவை தானே நிறைந்து காணப்படுகின்றன?

ஆனால் அனந்தாவபோதத்தின் பார்வையோ முற்றிலும் மாசற்றதாகவும் பரமசாந்தியை நல்கக் கூடியதுவுமாக 

உள்ளது.ஆத்ம தரிசனம் – அந்த அனந்தாவபோத தரிசனம்- தான் இப்பிரபஞ்சத்தில் கிடைப்பதற்கரிய பேறு.

‘ என்னுள் நிலைகொள்ளும் ஆத்மாவை ( அஅந்தர்யாமியை) நான் நமஸ்கரிக்கின்றேன்.எல்லா விதமான 

வஸ்து- விஷய அறிவிற்கும் புறம்பான அது எல்லா உயிரினங்களின் மேதா விலாசமே!’

இன்னமும் பிறவாத ( அஜன்) என்னில் இந்த உலகம் காணாமல் போய்விட்டது.எது கிடைப்பதற்கு எனக்கு 

தகுதியுள்ளதோ அதை நான் பெற்று விட்டேன்.நான் வெற்றிபெற்றவனாக உலாவருகிறேன்.

விசுவ போதத்தைத் துறந்து கிடைக்கும் அரச பதவியில் எனக்கு கொஞ்சம் கூட நாட்டம் 

இல்லை.அதில் எனக்கு எந்தவிதமான மகிழ்ச்சியும் கிடைக்கப்போவதுமில்லை.இந்த லௌகீக ஆழ்ந்திருக்கும் 

அசுரர்களை காணும்பொழுது பரிதாப உணர்வு தான் என்னில் தோன்றுகிறது.என் தந்தை எவ்வளவு பெரிய 

அஞ்ஞானியாக இருந்திருக்கிறார்?பௌதிக வாழ்வில் மட்டும் ஆனந்தம் கண்டு அவர் தனது வாழ்வை 

வீணடித்து விட்டார்.நீண்டகாலம் வாழ்நதும் இந்த மண்ணை ஆண்டதாலும் அவர் என்ன நேடினார்? 

ஆத்மானந்தத்திற்கு அம்மாதிரி எத்தனை உலக அதிபதி பதவியும் ஈடாகாது.வேறொன்றுமில்லையென்றாலும் 

ஆத்மஞானிகள் எல்லாம் பெறப்பெற்ற நிறைகுடங்களல்லவா? அப்படிப்பட்ட ஆனந்தத்தையன்றி வேறு 

எதையும் தேடுபவன் அறிவாளியாக இருக்க முடியாது.

கடந்த நேரம், நிகழ்காலம்  என்று இருக்கின்ற, இந்த நாசமடையக்கூடிய, பாலைவனமும் போல் 

வரண்டிருக்கின்ற,இந்த பௌதிக  வாழ்வு எங்கே? மகிழ்ச்சியளிக்கிறது நந்தவனம்போல் இருக்கின்ற ஆத்ம 

சாக்‌ஷாத்காரனுபவம் எங்கே? மூவுலகங்களின் அதிபர் ஸ்தானம் என்பது வெறும்கற்பனையில் மட்டுமே! இந்த 

ஆத்மசாக்‌ஷாத்காரம் அனுபவத்திற்கும் மேலாக ஒன்றுமே உண்மையானது கிடையாது. அதை ஏன் மனிதர்கள் 

புரிந்து கொள்வதில்லை? பிரிக்கமுடியாததும்,சர்வ வியாபியும் சர்வ சக்தனுமாக இருக்கின்ற 

அனந்தாவபோதத்தின் மூலம் மட்டும் தான் எல்லாமெல்லாம் எங்கும், எப்பொழுதும் கிடைக்கப் பெறுகிறது.

சூரியசந்திரரகளில் நாம் காண்கின்ற ஒளி , தேவதைகளின் ஒளிர்கின்ற தெய்வீக சைதன்யம்,மனதின் குண 

நலன்கள்,இயற்கையில் சுபாவமாகவே காணப்படுகின்ற குணங்கள்,சக்தியின் அளவற்ற உருவ 

வெளிப்பாடுகள்,விசுவ போதத்தில் நிகழ்கின்ற வளர்சசியும் மாற்றங்களுக்கெல்லாம்,அடிப்படையாக இருப்பது 

ஆத்மா தான்.ஆனால் அந்த ஆத்மாவில் எவ்வித மாற்றமும் நிகழ்வதில்லை.எவ்வித பாரபட்சமுமின்றி, 

எரிசக்தியும் குளிர்மையும் எல்லோருக்கும் பகிர்நதளிக்கின்ற,சூரிய சக்தி போல் நாசம் என்பதையெல்லாம் 

அனந்தாவபோதம் பிரபஞ்சத்திலுள்ள எல்லா பொருட்களையும் ஒளிமயமாக்கின்றது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s