யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 256

தினமொரு சுலோகம்

நாள்256

ஆத்ம தரிசனம்

விசரத்யேஷ லோகேஷ்ய ஜீவ ஏவ ஜகஸ்திதௌ

விலஸத்யேவ லோகேஷ்ய ப்ரஸதுரத்யேவ வஸ்துஷு!

பிரகலாதன் தனது தியானத்தை தொடர்ந்தார்:” எந்த விதமான

குறைபாடுகளுமில்லாத அத்வைத போதம் தான் ‘ ஓம்’ என்ற

பிரணவத்தினால் குறிப்பிடப் படுகின்ற ஆத்மா. இந்த உலகிலுள்ள எல்லா

பொருட்களையும் தன்னுள் கொண்டுள்ள இந்த ‘ ஓம்’ தான் ஆத்மா.இந்த

உடலிலிருக்கின்ற மாமிசமும் எலும்பும் நிணமும்,இந்த எல்லாவற்றையும்

உணர்த்துகின்றது ‘ அறிவும் ‘, சூரிய சந்திரர்களும் எல்லாம் ஆத்மாவே! அது

தான் அக்னிக்கும் சூட்டை வழங்குகின்றது.இனிமையான பழவகைகளுக்கு

அந்த இனிப்பு வழங்குகின்றது. புலன்கள் வழியாக அனுபவங்களை

உளவாக்குகின்றது.

அது இருக்கின்றதென்றாலும் நிலையானதல்ல.

அதுஅசைகின்றதென்றாலும் அது ஜங்கம( அசையும் )

பொருளல்ல. அது எந்த வித மான அசைவும் இல்லாமல் இருந்தாலும்

எப்பொழுதும் விழிப்புடன் இருக்கிறது.செயலாற்றிக்கொண்டேயிருந்தாலும்

அதில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.கடந்த- நிகழ்ந்த-

வரும்காலங்களில், அங்கும் இங்கும் எங்கும் இருக்கின்றதென்றாலும் பல

நாம ரூபங்களில் தோன்றினாலும் அது வேறு வேறு பொருளல்ல.

எந்தவிதமான பயமில்லாததும்,எல்லைகளேதும் இல்லாததுமான இந்த

போதம் தான் பிரம்மா முதல் புற்கொடி வரை எல்லாவற்றிலும் இருப்பது.

அனேகமனேகம் உயிருள்ள, உயிரில்லாத பொருட்களை உருவாக்கி

அவைகளை தொடர்ந்து இருக்கச் செய்வது,இந்த போதம் தான்.அது

எப்பொழுதும் புத்தி கூர்மையுடையதும் செயல்களில் மூழ்கியும்

இருக்கிறது.ஆனால் மிகப் பெரிய பாறை போல் அசையாமல் வலுவாக

தரையில் ஊன்றி நிற்கின்றது.எதாலும் பாதிக்கப்படாத ஆகாயத்தை

போன்று கூட அது பாதிக்கப்படுவதில்லை.

இந்த ஆத்மா தான், காற்றில் பறக்கின்ற காய்ந்த சருகு போன்ற மனதை

சஞ்சலங்களுக்கு ஆட்படுத்துவது.குதிரையின் கடிவாளத்தைப

பிடித்துக்கொண்டிருக்கும் குதிரைக்காரன் அது.இந்திரியங்கள்

எனும் குதிரைகளை ஆத்மா தான் இயக்குகிறது;கட்டுப்படுத்துகிறது.ஆத்மா

இந்த சரீரத்தின்  யஜமானனாகவிருந்தும் ஒரு அடிமையைப் போல்

எண்ணிக்கையிலடங்காத,எல்லாவிதமான கருமங்களையும்

செய்வதாக காட்சியளிக்கின்றது.இப்படிப்பட்ட ஆத்மா மட்டும் தான் பூஜை

செய்யவும், வணங்கவும்,தியானிப்பதற்கும் தகுதி வாய்ந்ததாக உள்ளது.

அதை சார்ந்திருந்தால் மட்டுமே ஒருவனுக்கு இந்த உலகம் எனும் பிறப்பு-

இறப்பு  சக்கர சுழற்சியிலிருந்தும் இந்த மாயா சங்கல்பங்களிலிருந்தும்

விடுதலை கிடைக்கும்.நல்ல நண்பனைப் போல் அதை வெல்ல முடியும்;

ஏனென்றால் அது குடியிருப்பதாகத் நமது இதயமெனும் தாமரையிலல்லவா!

அழையாமலையே அது எளிதாக நம்மில் குடியேறியுள்ளனது.ஒருமுறை

தியானம் செய்துவிட்டால் அது காட்சியளிக்கும்.ஆத்மா பிரபஞ்ச

வஸ்துக்கள் எல்லாவற்றின் உடமையாகவிருந்தும், ஆத்மசாக்‌ஷாத்காரம்

அடைந்தவனுக்கு எவ்வித அகந்தையோ,தான் என்ற உணர்வோ இராது..

மலர்களின் வாசனை எவ்வாறு எல்லா பாகங்களிலும்

பரவியுள்ளது  அது போல்தான் சரீரத்திலுள்ள ஆத்மா அங்கெங்கில்லாதபடி

எங்கும் வியாபித்திருக்கிறது.

யாரும் அதைக் குறித்து- அதாவது ‘ தன்னை’க்குறிது சிந்திக்கத்தால் தான்

அது எல்லோராலும் எட்ட முடியாததாக தோன்றுகிறது.ஆத்ம விசார

மார்க்கத்தினால் மட்டும் தான் அதை கண்டு உணர முடியும்.அவ்வாறு

உணரந்தால்  பரமானந்தத்தை அளிக்க வல்லதும்,சத்தியத்தின் சுய ரூப

தரிசனமாகவும் என்றென்றும் அழிவில்லாத்ததுமாக இருக்கிறது. அது ஒரு

உயர்வான உத்தம தரிசனம். பந்தங்களெல்லாம் அவிழ்ந்து,

ஆசைகளெல்லாம் இல்லாமலாகி, எதிரிகள் என்று யாரும் இல்லாமலாகி

இருக்கின்ற நிலையில் மனம் எவ்வாறு சஞ்சலபஃபட முடியும்?அதை

தரிசித்து விட்டால் எல்லாவற்றையும் தரிசித்ததாகிவிடும்.அதை செவி

மடுத்து விட்டால் வேறு ஒன்றையும் கேட்பதற்கில்லை.அதை தொட்டு

விட்டால் தொடுவதற்கு வேறு ஒன்றும் இராது.உலகம் இருப்பதே அது

இருப்பதால் தான் .ஒருவன் துயிலும்பொழுது அது விழித்திருக்கிறது.அது

அறிவிலியை அறிவாளியாக்குகிறது.துனஃபப்படுபவர்களின் துன்பத்தை

அகற்றுகிறது.விரும்புவதை தருகின்றது.

” படைக்கப்படும்பொழுது அது ‘ஜீவன்’.( உயிரினமாகவும்) ஆக

தோன்றுகின்றது.அது இன்பங்களை நுகர்ந்து

அனுபவிப்பது  போல் காட்சியளிக்கின்றது.பிரபஞ்ச வஸ்துக்களில்

வியாபித்து லயித்து இருப்பது போலவும் தோன்றுகிறது”  ஆனால் எல்லா

ஜீவன்களின் ஆத்மாவாக -ஸத் ஆக நிலைகொள்கின்றது.மிகவும் உன்னத

நிலையிலுள்ள அமைதியோடு ஆனந்தத்தை அளிக்கின்றது.விசுவ

பிரபஞ்சத்தின் ஒரே ஒரு ஸத் வஸ்து அது மட்டும் தான் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s