யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 262

தினமொரு சுலோகம்

நான் 262

என்றுமே வெற்றி!

த்வதாலோகேக்ஷணோத்புதா த்வதாலோகேக்ஷணக்ஷயா

ம்ருதேவ ஜாதி ஜாதேவ ம்ருதா கேனோபலக்ஷ்யதே!

பிரகலாதன் தன் தியானத்தை தொடருகிறார்:” ஹே ஆத்மாவே, நீயிருப்பதாலத்தான் இன்ப -துன்பங்களுக்கு பொருளுண்டாகிறது.அவை உன்னில் தான் உதயமாகின்றது.ஆகவே உன்னிலிருந்து வேறுபட்டு ஒரு இருப்பு கிடையாது.இந்த உண்மை தெரியும்பொழுது அதன் தனித்தன்மையல்லவா நஷ்டமாகிறது.கண்மூடி திறக்கின்ற பொழுது அது வரை கண் முன்னால் தெரிந்த மாயா ஜாலக் காட்சிகள் மறைந்து விடுவது போல்,இன்ப துன்பங்கள் எனும் கற்பனை அனுபவங்கள் கண்மூடி திறக்கும முன் உளவாய் மறைகின்றன.

அவை தோன்றுவது  உள்ளுணர்வின் ஒளியினால்த்தான் தான்.ஆனால் அவை அந்த ஒளியிலிருந்து வேறல்ல என்று அறியும்பொழுது மறையவும் செய்கின்றன.அவை இறந்தவுடன் பிறந்தவை.அதே போல் பிறந்தவுடனையே இறக்கவும் செய்கின்றன.இந்த விசித்திரங்கள்ளையெல்லாம் யாரோ அறிவர்?

எல்லாமே எப்பொழுதும் மாறிக் கொண்டேயிருக்கின்றன.அவ்வாறிருக்க ஒரு நொடி மட்டும் இருக்கின்ற காரணங்களால் எவ்வாறு அழிவில்லாதவை உதயமாக முடியும்? கடலில் தோன்றுகின்ற அலைகள் மலர்களாகத் தோன்றலாம்; ஆனால் அப்படிப்பட்ட உண்மையல்லாத மலர்களால் மாலை  செய்ய முடியுமா? எந்த விதமான அடிப்படையுமில்லாத்தும்  அழியக்கூடியதுமான காரணங்களால் அழிவில்லாதகாரியங்கள் நிகழும் என்று நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்! மின்னல் கீற்றினால்  மாலைசெய்து கழுத்தில் அணிய முடியுமா?

என் ஆத்மாவே! சமன்நிலையிலிருக்கின்ற ஆத்ம ஞானியின் விழிப்பு நிலையில் உளவாகின்ற தாற்காலிகமான இன்பதுன்பங்களை உண்மை போல் பாவித்து நீ ரசிக்கின்றாய்! ஆனால் அஞ்ஞானிக்குண்டாகும் இன்ப துன்பங்களை நீ எப்படி ஏற்றுக் கொண்டு அனுபவிக்கின்றாய் என்று சொல்வது மிகவும் கஷ்டமான காரியம்.ஹே ஆத்மாவே, நீ உண்மையில் எதிலும் விருப்பு வெறுப்பில்லாமல், எதற்கும் ஆசைப் படாத,அஹங்காரம் அழிந்துவிட்ட பிரித்து பார்க்க முடியாத சத்ய சொரூபம் .சத்ய மாகவிருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரமைகளினாலுளவான கற்பனைகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீ யே தான் கர்த்தா! நீயே தான் போக்தா! கர்மங்களையாற்றுபவனும் நீயே! அனுபவிப்பவனும் நீயே! இப்படி பல உருவங்களில் நிலைகொள்வதும்  நீயே!

ஜய ஜய ஆத்மா! ஜய ஜய ஆத்மா! எல்லையற்ற விசுவமாக வெளிப்படுகின்ற ஆத்மா வெல்லட்டும்! பரம சாந்தியுடைய ஆத்மா வெல்லட்டும்! சாஸ்திரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆத்மா வெல்லட்டும்!வேத சாஸ்திரங்கள் உன்னை ஆதாரமாகவும் கொண்டவை.வேத சாஸ்திரங்களில் உலா வருவது நீ தான்! இது வரை பிறவாத உனக்கு என் நமஸ்காரம்! ஒரே நேரத்தில் மாறுதல்களுக்கும் அழிவிற்கும் பாத்திரமான , பாத்திரமாகும், ஆத்மா வெல்லட்டும்! இருப்பதும் இல்லாததுமான ஆத்மா வெல்லட்டும்! ஒரே நேரத்தில் அடையக்கூடியதும் வெல்லக்கூடியதும்,அதே நேரத்தில் வெல்ல முடியாதவனும், கிடைப்பதற்கரியவனுமாக இருக்கின்ற ஆத்மாவே விஜயீ பவ! நான் அளப்பற்கரிய ஆனந்தத்துடன் இருக்கிறேன்.நான் சமன் நிலையில் ஆனந்திக்கிறேன்.என்னில் எல்லாமே பூரணத்துவத்தை அடைந்திருக்கிறது. நான் அசைவில்லாதவன்; நான் வெற்றியை மட்டுமே காண்கின்றவன்; அதற்காகவே வாழ்கின்றவர்களால். அப்படிப்பட்ட எனக்கு நமஸ்காரம்! உனக்கு நமஸ்காரம்! என்றும் தூயமையானவனும் உண்மையானவனுமான நீ இருக்கும்பொழுது பந்தனம் எங்கிருந்து வரும்? சௌபாக்கியமும் துர்பாக்கியமும் எங்கிருந்து வரும்? பிறப்புக்களுக்கும் இறப்புக்களுக்கும் எப்படியுண்டாகும்? நான் அழிவில்லாத முடிவில்லாத பரமானந்தமான சாந்தியில் ஆறாடிக் கொண்டிருக்கிறேன்.

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s