யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 263

தினமொரு சுலோகம்

நாள் 263
தைத்யோதயோகேன விபுதாஸ்ததோ யஞ்தப:க்ரியா:

தேன ஸம்ஸாரஸம்ஸ்தானம் ந ஸம்ஸாரக்ரமோஅன்யதா!

வஸிஷ்டர் தொடர்ந்து சொல்லலானான்:” இவ்வாறு தியானம் செய்து பிரகலாதன் பரமானந்தத்தின் பூமியில் கிடைப்பதற்கரிய ஒரு நிலையை அடைந்தான்.அந்த நிலை மனோ விசாரங்களின் தொல்லைகளோ, மன சஞ்சலங்களை இல்லாத ஒரு நிலை.அங்கு அவன் ஒரு சிலை போல் அமர்நதிருந்தான்.காலம் நிறையவே கழிந்தது.அசுரர்கள் அவரை தொந்திரவு செய்ய முயன்றார்கள் என்றாலும்,வெற்றி பெறவில்லை.ஆயிரம் வருடங்கள் கடந்து போயின.அவரின் முடிவு நெருங்கி விட்டது என்று அசுரர்கள் நினைத்தார்கள்.பாதாள உலகில் தலைவனில்லாத ஒரு நிலை உருவாயிற்று.ஹிரண்யக சிபு காலமானார்.அவர் மகன் பிரகலாதன் உலகை பொறுத்தவரை இறந்ததற்கு சமானாமான தியானத்திலிருந்தார்.அரசகட்டிலில் அமருவதற்கு ஆள் இல்லாமலாயிற்று.அசுரர்கள் அவரவரருக்குத் தோன்றியது போல் வாழ தலைப் பட்டனர்.

எங்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலையெடுத்தது. கடலிலுள்ள பெரிய திமிங்கலங்கள் சிறு சிறு மீன்களை பிடித்து உண்பது போல் பலமுள்ளவர்கள் பலவீனர்களை அடிமைப் படுத்தினர்.அப்பொழுது உலக நாயகனான மஹாவிஷ்ணு பாற்கடலில் அனந்தன் எனும் சர்ப்பத்தின்மீது சயனம் கொண்டு உலக நடப்புகளை விசாரித்து கொண்டிருந்தார். சுவர்க்கலோகத்திலும் நரக லோகத்திலும் எல்லாம்ஒழுங்காக நடப்பது அறிந்து மிகவும் மகிழ்ந்தார் மஹாவிஷ்ணு. ஆனால் பாதாள லோக விசாரணை வந்தபொழுது பிரகலாதன் ஆழ்ந்த தியானத்திலிருப்பதையும் அசுர்ர்களின் தொந்திரவுகள் ஏதுமில்லாமல் தேவர்கள் சுகபோகத்துடன. வாழ்ந்து வருவதையும் கண்டார்.

மஹாவிஷ்ணு யோசிக்கலானார்:’ பிரகலாதன் இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகில் தியானத்தில் மூழ்கியிருப்பதால் அசுரர்கள் நாதனில்லாமல் தங்கள் சக்தியெல்லாம் இழந்து தத்த்தளிப்பதையும் கண்டார்.

அசுர்ர்களின் எதிர்ப்பெதுவுமில்லாததால் தேவர்களும் வெறுப்பதற்கோ எதிர்ப்பதற்கோ எதுவும் இல்லாமல் இந்திரியங்களுக்கு மேலான நிலையை அடைந்து கொண்டிருந்தார்கள்.விருப்பு-வெறுப்பு எனும் இரட்டை சக்திகள் இருந்தால் தான் அவர்கள் முக்தி பதத்திலிருந்து தொலை தூரத்திலிருப்பார்கள்.

தேவர்கள் இல்லாமலாகி விட்டால். பூலோகத்திலுள்ள மானுடர்களுக்கும் தர்மங்களை கடைபிடிப்பதிலுள்ள ஆர்வம் இல்லாதாகிவிடும்.

இந்த விசுவம் பிரளய காலம் வரை நிலவிஇருக்க வேண்டியதால் இதை அனுமதிக்க முடியாது. அனுமதித்தால் விசுவத்தின் இருப்பே கேள்விக்குரியதாகிவிடும்.

இந்தநிலையில் தொடர்வதில் எந்த விதமான நன்மையையும் நான் காண வில்லை. ஆகவ அசுரர்கள் தங்களது சகஜ சுபாவத்திற்கு திரும்ப வேண்டும்.’

அசுரர்கள் தேவர்களுக்கு எதிரிகளாக கர்மங்கள் அனுஷ்டித்தாரல் மட்டுமே தர்மமும் அத்துடன் தொடர்புடைய ஏனைய கருமங்களும் உலகில் இந்த சிருஷ்டி சக்கரத்தை வலுப்படுத்தி பிரபஞ்ச நிலைக்கு உதவும்.

ஆகவே நான் பாதாளத்திற்கு சென்று பிரகலாதனை எழுப்பப் போகிறேன்.பிரகலாதனுக்கு சக்கரவர்த்தி பதவியில் விருப்பமில்லையென்றால் அதற்கு வேறு ஒருவரை தேடிக் கண்டு பிடிப்பேன்.பிரகலாதனின் கடைசி பிறப்பு இது.ஆனால் இந்த நிலையில் சக்கரசுழற்சி முடியும் மட்டும் இந்த உலகில் வாழ்ந்தே ஆகவேண்டும் என்பது பிரபஞ்ச நியதி அல்லவா!.
முக்தி நிலையிலிருந்து கொண்டே ஆட்சியை நடத்துவதற்கான வேண்டுதலை அவரிடம் வைக்கப் போகிறேன்.விசுவ பிரளயம் நிகழும் வரை அவ்வாறு உலகை நடத்திக்கொண்டு கொண்டு போகமுடியும். 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s