யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 264

தினமொரு சுலோகம்

நாள் 264

முக்தனின் வாழ்க்கை மற்றவர்களுக்கு உதாரணம்

ஸ்தாதவ்யமிஹ தேஹேன கல்பம் யாவதனேன தே

வயம் ஹி நியதிம் வித்மோ யதாபூதாமநிந்திதாம்!

வஸிஷ்டர் தொடர்ந்து சொன்னார்:” அவ்வாறு தீருமானித்து, பகவான் விஷ்ணு பாதாளவுலகை சென்றடைந்தார்.விஷணுவின் ஒளியினால் அசுரர்கள் விழித்தெழுந்தார்கள்.ஆனால் திவ்விய ஒளியின் தீவிரத்தை தாங்கமுடியாமல் அவர்கள் ஓடிப்போய்விட்டார்கள்.பிரகலாதன் இருந்த இடத்திற்குத் சென்று பகவான் உரத்த குரலில் இவ்வாறு கூறினார்: ‘ மகான், நீ உணருவாய்.’.

தொடர்ந்து சங்கநாதமும் எழுப்பினார்.தேவர்கள் மகிழ்நதார்கள்; அசுரர் அசந்து கீழே விழுந்தார்கள்.பிரகலாதனின் மகுடத்தில் ஜீவசக்தி பிரவாகமாக ௐழுக ஆரம்பித்தது.அது சிறிது சிறிதாக அவரின் உடல் முழுவதும் ப்ரவிக்கக் ஆரம்பித்தது.இந்திரியங்களில் ஜீவசக்தி நிறைந்து வழிந்தது.இந்திரியங்கள் அவரவர் கர்மங்களை செய்வதற்கு தயாரானார்கள். ஒவ்வொருவரும் தங்களது சூழ்நிலையை உணர ஆரம்பித்தார்கள்.நாடி நரம்புகள் துடிக்க ஆரம்பித்தன.மனம் செயலாற்ற ஆரம்பித்தது.மனதிற்கு தனது தேக கால ரூபங்களைக் குறித்துள்ள உணர்வு உண்டாயிற்று.தன் பௌதிக சரீரத்தை உணர்ந்தது. பிரகலாதன் பகவானைக் கண்டார்.

விஷ்ணு பகவான் பிரகலாதனிடம் கூறினார்:’ பிரகலாதா, நீ பாதாள உலகின் சக்கரவர்த்தி என்ற நிலையை உணர்வாய்.இனி உனக்கு நேடுவதற்கோ இழப்பதற்கோ ஒன்றுமில்லை. எழுந்திரு பிரகலாதா!

இந்த பிரபஞ்ச சக்கரம் சுழன்று முடியும் வரை , நீ இந்த உடலில் வாழ்ந்து தான் ஆக வேண்டும்.இது தவிர்க்க முடியாதது என்பதை நான் அறிகிறேன்.ஏனென்றால் இந்த உலகின் முறை என்னவெனபதை நானறிகிறேன்.ஆகவே நீ எல்லாவித பிரமைகளிலிருந்தும் விடுபட்டு, முக்தியடைந்த மாமுனிவர் போல் இங்கு ஆட்சி செய்வாய்.விசுவ பிரளயத்திற்கு இன்னும் காலமாகவில்லை.பிறகு ஏன் சரீரத்தை தியாகம் செய்வதற்கு அவசரப்படுகிறாய்? நான் நிலை கொள்கின்றேன்.இந்த உலகமும் அதன் ஜீவராசிகளும் நிலைகொள்கின்றது.ஆகவே உடலை தியாகம் செய்வதற்கான யோசனையை கை விட்டுவிடு.இறப்பதற்கு பக்குவம் அடைந்தவன் அஞ்ஞானத்திலும் துன்பத்திலும் மூழ்கிவிடுகிறான். ‘ நான் பலவீனன்” நான் மந்த புத்தி” நான் அவசன்’ என்று சிந்திப்பவனும் இறப்பதற்கும் தகுதியானவன்.எண்ணிக்கையற்ற ஆசைகளினாலும் பாசத்தாலும் சஞ்சலப்படுபவனும் இறப்பதற்கு தகுதியானவனே!இன்ப-துன்பங்கள் என்ற இரட்டை மனோபாவத்திற்கு அடிமையானவர்கள் உடலில் பிடிப்புடையோர்,மனோ ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அலட்டப்படுபவர்கள்,காம-குரோதங்களால் இதயமும் வரண்டு உலர்ந்தவர்களும் மரணத்திற்கு தகுதியானவர்கள்.’

விஷ்ணுபகவான் பிரகலாதனிடம் மீண்டும் கூறினார்,” பாதாள உலகின் சக்கரவர்த்தியாகிய நீ சரீரத்தை விட்டு போவதை மரணம் என்று  சாதாரணர்கள் கூறுகிறார்கள்.ஆனால் ஆத்மஞானத்தால் மனோ நிக்ரகம் நேடி சத்திய உணர்வோடு இருப்பவனுக்குத்தான் வாழுவதற்கு தகுதியுள்ளது.அஹம்பாவம் இல்லாத, எதனிடமும் ஆஸக்தியில்லாத, விருப்பு வெறுப்பு இல்லாத மன நிம்மதியடைந்தவர்கள்( அதாவது மனோ நிகரகம் கைவரித்தவர்கள் ) மட்டும்தான் வாழத் தகுதியானவர்கள்.சத்தியத்துடன் தெரிந்து ஆனந்தத்துடன்,இகலோக வாழ்வை ஒரு விளையாட்டென வாழ்ந்து,வெளியுலக விவகாரங்களால் அதிகப்படியான மகிழ்ச்சியோ, துயரமோ உணாமல்,எதையும் நேடுவதற்கோ, இழப்பதற்கோ இல்லாமல், வாழ்வபர்தான் வாழத்தகுதியானவர்கள். அவர்கள் வாழவேண்டும்.அவர்கள் வாழ்வு மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும்.அது மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இருக்கும்.அப்படிப்பட்டவர் வாழ்வு தான் விரும்பத் தக்கது. மரணம் அவர்களுக்கு உகந்ததல்ல..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s