யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 265

தினமொரு சுலோகம்

நாள் 265

பூரண போதம்

தேஹஸம்ஸ்தோஅப்யதேஹத்த்வாததேஹோஅஸி விதேஹத்ரிக்

வ்யோமஸம்ஸத்தோஅப்ய ஸக்தத்வாதவ்யோமேவ ஹி மாருதி:!

பகவான் விஷ்ணு தொடர்ந்தார்:’ தேகம் இருந்து அதன் கர்மங்களை ஆற்றும்பொழுது அதை வாழ்க்கை என சொல்கின்றோம்.இந்த தேகத்தை இன்னொரு தேகத்திற்காக தியாகம் செய்யும் பொழுது அதை மரணம் என்று  சொல்கின்றோம்.பிரகலாதா, நீ இந்த இரண்டு அவஸ்தைகளிலிருந்தும் விடுபட்டவனாகிறாய்.உனக்கு வாழ்வும் சாவும் ஒன்று போல் தான் எந்த ஒரு வித்தியாசமுமில்லை.பொதுவான சில எண்ணங்களை நான் சொன்னேன் ; அவ்வளவு தான்.ஆனால் உண்மையில் யாரும் வாழவுமில்லை; இறப்பதுமில்லை.

நீ இந்த உடலில் வசிக்கும்பொழுதும் உனக்கு தேக உணர்வில்லாததால் நீ விதேகனே!சாக்ஷி மாத்திரமான நீ  எந்த ஒரு வஸ்துவையும் ஆதாரமாக கொள்ளாத ‘ அறிவு’ மாத்திரமே ! எவ்வாறு வாயு ஆகாயத்தில் நிலை கொள்ளும்பொழுதும் ஆகாயத்தை சார்நதிருகாததும்,ஆகாயத்தால் வரையறுக்கப்பாடாமல் இருப்பது போல் இந்த ‘போதம்’ ‘ அறிவு’உடலில் நிலைகொள்கின்றது.

சொல்லப்போனால் நீ தேகமின்மையிலும் நீராகவே இருக்கிறாய். ஏனென்றால் இந்திரியங்கள் உன்னில் செயலாற்றுகிறதை நீ அறிகிறாய்.ஆகாயம் செடிகளை. மரமாக வளருவதற்கு இடம் அளிக்கிறது.ஆனால் அது ஆகாயத்தின் வளர்சசியல்லவே. நீ போதவானாகிவிட்டாய்.உன்னில் தேகம் அல்லது இந்த மூர்த்தீபாவம் என்பது தான் என்ன?உனக்கு ஒரு உருவம் இருக்கிறது என்று தோன்றுவது அஞ்ஞானிகளின் பார்வையில் மட்டும் தான்.நீ எப்பொழுதும் என்றும் எல்லாமான பரம போத ஒளி தான்.உன்னைப் பொறுத்தவரை உடலோ உடலின்மையோ எந்த விதமான அர்த்தமும் கிடையாதுஉனக்கு ஏற்றுக்கொள்வதற்கும் ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்கும் என்ன உள்ளது? வசந்த காலமோ, பிரளயமோ,ஜீவசம்பந்தமான எல்லா எண்ணங்களும் அற்றுப் போன உனக்கு ( ஞானிக்கு) என்ன வித்தியாசம்? எந்த நிலையிலும் அவன் ஆத்ம ஞானத்தில் உறுதியாக நிலை கொள்கிறான்.இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜீவ ராசிகளுக்கும் அழிவோ     மேன்மையோ நிகழட்டும்.அவன் ஆத்மாவில் நிலைகொள்வதில்  எந்த மாற்றமுமுண்டாகாது.
எந்த விதமான மாற்றங்களுக்கு ஆட்படாமலும்,மரணத்தால் ஸ்பரிசிக்க முடியாததாகவும்,.இந்த உடலில் பரம புருஷன் நிலைகொள்கின்றான்.

‘ நான் இந்த சரீரத்தினுடையது ‘ ‘ இந்த சரீரம் என்னுடையது’ என்ற எண்ணங்களெல்லாம் அழிந்து விட்டால்,’ நான் இந்த உடலை விட்டு விடப் போகிறேன்’ ‘ விடமாட்டேன்’  என்றோ ‘ நான் இதை செய்தேன்’ ‘ இனி செய்யப் போகிறேன்’  என்பன போன்ற எண்ணங்களுக்கோ எந்த பொருளும் கிடையாது.ஆத்ம ஞானம் அடைந்தவர்கள் எப்பொழுதும் செயலாற்றிக்கொண்டேயிருந்தாலும் ,ஒன்றும் ‘ செய்வதில்லை’.கருமங்கள் ஆற்றாமல் அவர்கள் இந்த நிலையை அடையைவில்லை. இம்மாதிரியான ‘செயலாற்றா நிலை’ உன்னை அனுபவங்களிலிருந்து விடுதலை பெறவைக்கின்றது.விதைத்தால் தானே அறுவடை செய்ய வேண்டும்!

அவ்வாறு ,’ நான் செய்கிறேன்’, ‘ நான் அனுபவிக்கின்றேன்’, என்ற எண்ணங்கள் அற்று விட்டால் பரம சாந்தி உளவாகும்.அது தான் முக்தி.! அப்படிப்பட்டவன் சன்னியாசியாவதற்கு என்ன இருக்கிறது? எதை நேடுவதற்கு? விஷய- விஷயீ எண்ணங்கள் அழிந்து விட்டால் மட்டுமே முக்தியடைய  முடியும்.அவ்வாறு நித்திய முக்தனான உன்னைப்போன்றவர்களுக்கு  எப்பொழுதும் சுஷுப்தி தான்.அந்த ஆழ்ந்த நித்திரையிலென்பது போல் இந்த பிரபஞ்ச வாழ்வை காண்பாய்.ஆத்ம ஞானிகள் இன்ப நிகழ்வுகளால் ஆனந்தப்படவோ துயர நிகழ்வுகளால் துன்பப்படவோ மாட்டார்கள்..கண்ணாடி அருகிலிருக்கும் வஸ்துக்களை அனிச்சையாக பிரதிபலிப்பது போல் நீயும் செயலாற்றுவாய்.

ஞானிகள் பூரண அறிவை அடைந்தவர்கள்.ஆனால் இந்த உலகத்தின் பார்வையில் உறக்கத்திலாழ்ந்திருப்பவர்கள் போல் தோற்றமளிப்பார்கள். ( இதைத்தான் பிற்காலத்தில் பகவான் ரமணர் ‘ ஏனிந்த உறக்கமெனப் பிறரென்னனை இருக்கும்பொழுது ‘ என்று சொன்னார் போலும்!)அகங்காரத்தையும் அதன் பரிவாரங்களையும் உதறித் தள்ளிவிட்டு அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.பிரகலாதா, நீ விஷ்ணு பதத்தை அடைந்து விட்டாய்.பிரம்மாவின் ஒருநாள் எனும் ஒரு உலக சக்கர சுழற்சி முடியும் மட்டும் பாதாள உலகை ஆண்டு வருவாய்!

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s