யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 266

தினமொரு சுலோகம்

நாள் 266

முக்தனாய் வாழ்வாயாக!

இதம் ஸுகமிதம் அது:கமிதம் நாஸ்தீதமஸ்தி மே

இதி தோளாயிதம் சேதோ மூடமேவ ந பண்டிதம்!

பிரகலாதன் சொன்னான்:” பகவான்! அசதியினால் நான் சிறிது கண்ணயர்நது விட்டேன்.தங்கள் கிருபையால் தியானத்திற்கும் தியனமல்லாத நிலைமைக்கும் எந்தவொரு வித்தியாசமும். இல்லை என்ற அறிவு என்னில் உதயமாகிவிட்டது.

தங்களை நான் நீண்ட காலமாக  என் உள்ளில் கண்டு கொண்டிருக்கிறேன்.என் பாக்கியம், இன்று இதோ தங்களை நேரிலும் தரிசிக்கிற ஏதுவாகியுள்ளது.இந்த காணப்படும் பிரபஞ்ச உலகைக் கண்டு பயப்படாமல்,சரீரத்தை விடுவதற்காக எந்த ஆசையும் இல்லாமல்,அனாஸக்தியைக்குறித்து எந்த விதமான கவலையுமில்லாமல்,பிரமையோ, கற்பனைகளோ எதுவுமில்லாமல், துன்பங்களால் அலட்டப்படாமல்,நான் அனந்தாவபோதமே என்ற உண்மையை அனுபவத்தறிந்துவிட்டேன்.அந்த ஏகாத்ம தத்துவத்தை அறிந்து விட்டால் துன்பங்கள்தான் எங்கிருந்து வரும்?அழிவு தான் எங்கே வரும்? சரீரமும் இந்த காணப்படும் உலகமும் எங்கே? அவைகளை இழந்துவிடுவோமோ என்ற பயம் எங்கே? திடீரென என்னிலுதயமான அபௌம ( பூமி சம்பந்தமில்லாத) போத நிலையில் இத்தனை நாள் இருந்து விட்டேன்.

‘இந்த உலகம் தான் எத்தனை கீழ்த்தரமானது? நான் இதை விட்ட்உ விடப்போகிறேன் ‘ .என்று சிந்திப்பது அஞ்ஞானிகளின் குணமல்லவா!உடலிருந்தால் துன்பம்; இல்லையென்றால் துன்பமின்மையென்றும் நினைப்பதும் அஞ்ஞானம் தானே! ‘ இது சுகம், இது துன்பம், இது அது, இது அதில்லை என்றெல்லாமுள்ள சஞ்சலங்கள் அஞ்ஞானியின் உள்ளத்தில் மட்டும் தான் இருக்க முடியும்.ஞானிகளுக்கு அம்மாதிரி சிந்தைகள் ஏதும் இருக்கலாகாது.
‘ நான்’ ‘ மற்றவர்’ என்ற எண்ணமே விவேகம் வராத அஞ்ஞானிகளில் மட்டும் தான் உளவாகும்.அதே போல் ‘ இது எனக்கு வேண்டும், இது வேண்டாம், என்பன போன்ற சிந்தைகளும் அஞ்ஞானிகளுக்கு உண்டு. ஞானிகளுக்கு இருக்க முடியாது.

எங்கும் நீயே நிறைந்து இருக்கும் பொழுது ‘ எதை துறக்கிறது,எதை நேடுவது? விசுவப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து நிற்பது போதம் ( பிரம்மம்) மட்டுமே ! பிறகு எதை துறப்பதற்கு? எதை நேடுவதற்கு?

நான் இம்மாதிரி சிந்தைகளில் மூழ்கி என்னுள்ளேயே ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.

தோற்றமும் மறைவுடன் இல்லாமல்,நேடல்- இழப்பல் என்ற சங்கல்பங்கள் எதுவும் இல்லாமல்,நான் சிறிது நேரம் ஓய்விலிருந்து விட்டேன்.இதோ, என்னில் ஆத்மஞானம் உணர்ந்து விட்டது.தங்களை பிராசாதிப்பதற்கு நான் எதுவும் செய்ய தயாராக உள்ளேன்.என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வீர்களாக.

பிரகலாதனின் பூஜையில் பிரார்த்தனையில் ஏற்றுக்கொண்டு பகவான் இவ்வாறு அருளினார்:’ எழுந்திரு, பிரகலாதா! தேவர்களும் மகரிஷிகளும் உன்னை வீழ்த்துகிறார்கள்.உன்னை இந்த நிமிடமும் பாதாள உலகின் சக்கர வர்த்தியாக உன்னை நியமிக்கிறேன்.சூரிய சந்திரர்கள் உள்ள காலம் வரை நீ இந்த பதவியில் தொடருவாய்காமக குரோத லோபவுண்ர்வுகளுக்கு ஆட்படாமல், சமன் நிலையோடு,இந்த உலகை காத்து ஆண்டு வரவும்.தேவ லோகத்திற்கோ, பூஉலகிற்கோ எந்தவிதமான கவலையுண்டாக்கும் செயல்களைச் ஆற்றாமல் எல்லா ஐசுவரியங்களையும். அனுபவித்து வாழ்வாயாக்.

வேண்டாத சிந்தைகளிலும், இலட்சியங்களிலும் காலத்தை விரயமாக்காமல் கர்மங்களில் ஈடுபடும்பொழுது அவை ‘ கர்மங்களல்ல’; அவை உன்னை பாதிக்கமாட்டா.உனக்கு எல்லாம் தெரியும்.நான் சொல்லித்தரும்படி தெரிவதறகொன்றுமில்லை.இனி தேவர்களும் அசுரர்களும்தோழமையுடன் வாழ்வீர்களாக்.ராஜன், அஞ்ஞானத்தை நெருங்க விடாமல்,தொலைவிலையே நிறுத்தி வைக்கவும்.பின் போத உணர்வோட நீண்ட காலம் இந்த உலகை ஆண்டு வாழ்வாயாக’.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s