விவேகசூடாமணி 1

முன்னுரை

ஆதிசங்கரர் இயற்றிய விவேக சூடாமணி ஒரு பிரகரண கிரந்தம்.வேத-வேதாந்தங்களின் சாரமான அத்வைத சித்தாந்தத்தை சார்ந்துள்ள நூல் இது.

பிரகரண கிரந்தம் என்றாலே சார்பு நூல் என்று பொருள்.

இந்த நூல் புருஷார்த்தங்களில் கடைசியாக சொல்லப்பட்டுள்ள, ஆனால் முதன்மையானதான, மோக்‌ஷ த்தை அடைய வழி காட்டுகின்ற நூல்.ஆகவே இது ஒரு ‘ மோக்ஷசாஸ்திரம்’.

மோக்ஷம் என்றால் ‘ இடையிலா நிறையுணர்வு’ என்று  பொருள்.குறைவேயில்லாத ஆனந்தம். மற்ற புருஷார்த்தங்களில் அர்த்தம்( பொருள்), காமம் , தர்மம் எதுவுமே குறையில்லா ஆனந்தத்தை தர மாட்டா.

அவை தரும் ஆனந்தம் தாற்காலிகமானவை. தோன்றி மறையக்கூடியவை.

ஆத்மஞானத்தால் விளையும் முக்தி ஒன்று மட்டும் தான் நிரந்தரமானது. அழிவில்லாதது.பரமானந்தத்தைத் தரக்கூடியது.

முக்தியென்றால் காமார்த்த தர்மங்களின்  மீதுள்ள பிடிப்பு விட்டுப் போய், சுதந்திரமாவது.அப்படிப்பட்ட விடுதலையை தரக்கூடிய நூல் என்பதால் இதை மோக்ஷசாஸ்திரம் என்றும் சொல்வார்கள்.

இது சார்பு நூல், பிரகரண கிரந்தம் என்று சொன்னோமல்லவா. எதையோ சார்ந்திருப்பதால் இது மூல நூல் அல்ல.இது ஏதோ ஒரு மூல நூலின் விளக்கவுரை. முழு மூலத்தின் விளக்கம் என்று இருக்க வேண்டியதில்லை.

விவேக சூடாமணி அத்வைதத்தை எடுத்துக்கொண்டுள்ளது  போல் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு கூட துணை நூல் இருக்கலாம். து சார்பு நூல் என்றால் மூல நூல்கள் எவை?

வேதங்களும் உபநிஷத்துக்களும் ரிஷிகளால் அவர்களது அனுபவங்களிலிருந்து சொல்லப்பட்டவை. இவை ஶ்ருஅதி எனப்படும்.இவை அபௌருஷேயம் எனவும் சொல்லப்படுகிறது.தனி ஒரு மனிதனாலும் இயம்

ப்ப் பெற்றதல்ல.

பகவத்கீதை, பாகவதம் போன்றவை ஶ்ருதியில் கூறப்பட்டவையை  இன்னும் தெளிவாக கூறுபவர். இவை ஸ்ம்ரிதி எனப்படும்.இவை பௌருஷேயம் எனப்படுகிறது. வேத வியாசர் போன்ற ரிஷிகளால் இயற்றப்பட்டவை

இவை.

பிரம்ம சூத்திரம் போன்ற தர்க்க சாஸ்திர ங்கள் ஶ்ருதியில் மற்றும் ஸ்ம்ரிதிகளின் அடிப்படை நியாயங்களை விளக்கிக்கூறும் நூல்கள் என்பதால்  அவை தர்க்க சாஸ்திரங்கள், நியாய சாஸ்திரங்கள் என்று

கூறப்படுகின்றன.

இந்த மூன்று வகையான மூலக் கிரந்தங்கள் ப்ரஸ்தானத் த்ரயம் என்றறியப்படுகிறது.

ப்ரஸ்தானத் என்றால் ‘புறப்பாடு’ ‘ பயணம்’.எங்கு ஜீவராசிகளெல்லாம செல்கின்றன? எல்லா பிரபஞ்ச சிருஷ்டிகளின் இலட்சியங்களும் வீடு போய்சேருவது தான் ‘ வீடு’ என்றால் நமது மூலஸ்தானம்.

எல்லாவற்றின் மூலஸ்தானமும் பரமன் தான்.அவனை என்ன பெயரிட்டு வேண்டுமென்றாலும்அழையுங்கள்;

அவன் அல்லது அது தான் மூலம்.

இந்த மூன்றில் எதையாவது ஒன்றை சார்ந்திருக்கும் நூல்களை பிரகரண கிரந்தங்கள் அல்லது சார்பு நூல்கள் அல்லது துணை நூல்கள் என்று கூறுகிறோம்.

விவேக சூடாமணி இப்படிப்பட்ட ஒரு பிரகரண கிரந்தம் .

அதற்கு ஏன் அந்த பெயர்?

சூடாமணி என்பது பெண்கள் தலையில் அணியும் ஒரு ஆபரணம். அது ஆபரணங்களில்

தலையானது;முதன்மையானது.பெண்கள் கால்கள்,கைகள், இடுப்பு, கழுத்து என்று உடலின் பல பாகங்களிலும் ஆபரணங்களை அணிகிறார்கள். ஆனால் சிரஸில் அணிகின்ற அணிகலன் சூடாமணி. அது சிரம் போல் முதன்மையானது விவேகங்களில் முதன்மையானது இந்த நூல்.

அது என்ன ‘ விவேகங்கள’?  விவேகம் என்றால் பகுத்தறிவு. எதை பகுத்து அறிவது? எது சரி, எது தவறு என்று பகுத்தறிவது. சிறு சிறு விஷயங்களிலும் சரி தவறை ஆராய வேண்டியுள்ளது.இந்த உடை உடுக்கலாமா, இந்த வேலையில் சேரலாமா, அவருக்கு உதவலாமா உதவக்கூடாதா,இப்படி தினப்படி சரியையும் தவறையும் பகுத்தறிவது லௌகீக பகுத்தறிவு அல்லது வியாவஹாரிக பகுத்தறிவு.

எது சத்தியம்? எது மித்யை? எது அழிவிற்கு ஆட்பட்டது? எது அழிவில்லாதது? எது பிறப்பு-இறப்புஇல்லாதது?

இந்த பாரமார்த்திக விவேகம்.

ஆத்மா யாது? அதன் குணங்கள் நாவை? ஆத்மாவைத்தவிர வேறு ஏதாவது உளதா? அனாத்மா என்றால் என்ன ?

இது ஆத்ம- அனாத்ம விவேகம்.

விவேக சூடாமணியெனும் இந்த நூல் ஆத்ம- அனாத்ம விவேகத்தை விளக்குகின்னற நூல். இந்த விவேகம் தான் எல்லா விவேகங்களையும் விட மேலானது; சிறந்தது. ஆபரணங்களில் சூடாமணி எப்படி தலை

சிறந்ததோ, அது போல் ஆத்ம-அனாத்மா விவேகம் விவேகங்களில் தலை சிறந்தது.

சூடாமணியைப்போன்ற  விவேகத்தை விளக்குகின்ற இந்த நூல் விவேக சூடாமணி.

( வளரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s