விவேகசூடாமணி 2

அத்வைதம்- நூலின் மூலக் கருத்து

விவேக சூடாமணிக்குள் நுழையும் முன் அதன் மூலக்கருத்தான ‘ அத்வைத’ சித்தாந்தத்தை சிறி தே புரிந்து கொள்ள முயலுவோம். அது விவேக சூடாமணிய்யை சரியான நோக்கில் காண உதவும்.

நமது ‘வேதாந்தம்’  என்பது மேலை நாடுகளிலும் கீழை நாடுகளிலும் ஒரு போல் பரிச்சயமான  பாரத ஸம்ஸகாரத்தின் பிரதீகம்.அத்வைதம் என்பது ஏழாம் நூற்றாண்டு எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த ஆதிசங்கரர் ஸ்தாபித்த தத்துவம். ஸ்தாபித்தார் என்று சொல்வது தவறாகக்கூடும். வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் கூறப்பட்டுள்ள கருத்தை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக எடுத்து உரைத்தார் என்று கூறுவது மிகவும் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

அத்வைதம் என்பது, இரண்டில்லை, இரட்டை கிடையாது என்பதல்ல. ஒன்றைத்தவிர  வேறொன்றில்லை என்பதேயாகும்.. இந்த தத்துவத்தின் படி பிரபஞ்சத்தில் ஒன்றே ஒன்று தான் சத்தியம்; அது தான் பிரம்மம்.அந்த பிரம்மமே எல்லா ஜீவ ராசிகளின் உள்ளும் இருக்கும் ஆத்மா.வேதாந்தத்தின் நோக்கம் பிரம்மம்- ஆத்மா சொருமிப்பை உறுதிப் படுத்துவதாகும்..

சங்கரனின் அத்வைத விளக்கத்தை சுருங்க சொல்ல வேண்டுமென்றால் கீழ்க்கணஃடவாறு கூறலாம்.

பிரம்மம் சத்யம், ஜகன்மித்யா,ஜீவனோபிரம்மைனஅபர:

பிரம்மமம்  மட்டுமே சத்தியம்;இந்த பிரபஞ்சம் என்பது மித்யை.

ஜீவாத்மா- நான்-அஹம் என்பது பிரம்மத்திலிருந்து வேறல்ல

பிரம்மம் என்பது ஆதியும் அந்தமுமில்லாதது.அது அகண்டம்; அவிச்சின்னம்.அது நிர்குணம். அதற்கு  பிறப்பும்கிடையாது; இறப்பும்கிடையாது.அது உருவமில்லாதது. அதற்கு விருப்பு – வெறுப்பு கிடையாது. அது வெளியுலக நிகழ்வுகளால் எவ்விதத்திலும் பாதிக்கப் படுவதில்லை.

அதுவே தனி மனித அஹமும்.

காணப்படுகின்ற பிரபஞ்சமெல்லாம் மாயை.

காண்பவன், காணும் பொருள், காண்பது எல்லாம் பிரம்மமே.

அது அவித்யையிலிருந்நது உண்டானது.பிரபஞ்சம் மாயையின் ஆவரண சக்தியாலும் விக்‌ஷேப

சக்தியாலும் உருவான மாயத் தோற்றம்.

அத்வைதத்தின் முக்கிய இலட்சியம் ஜீவாத்மா-பரமாத்மா சொருமிப்பை வெளிக்கொண்டுவருகின்றது.

அந்த அறிவு தான் ஆத்ம ஞானம்.
அந்த ஞானத்தை பெறுவதற்கு வேண்டிய நான்கு முக்கிய தகுதிகள்;
.1.விவேகம்- சத்திய- மித்யா பகுத்தறிவுஅல்லது நித்ய-அநித்ய பகுத்தறிவு.இது நூல்களிலுருந்தோ மற்றவர்கள் சொன்னதிலிருந்தே வராது. உள்ளிருந்து வர வேண்டும்.எதற்கு அழிவுக்கு; எதற்கு அஅழிவில்லாத என்ற பகுத்தறிவு.எது நேற்று இருந்ததோ, இன்று இருக்கின்றதோ, நாளையும் இருக்குமோ அது நித்யம்; அது சத்யம்.மற்றவையெல்லாம் மித்யை.

2.வைராக்யம்-  மித்யா வஸ்துக்களை கைவிடுதல், அதற்கான மன உறுதி. அநித்தியமான எதனிடமும் பற்றின்மை. பற்றிருந்தால் கை விடுதல் சத்தியமில்லை.அநித்யமான வஸ்துக்களிடம் பிரியம் வைப்பதுடன் அதை நாடி செல்வதும்  வைராகிக்கு உகந்ததல்ல. அப்படியிருப்பவர்கள் வைராகியே  அல்ல.

எதனிடமும் விருப்பு வையாமலிருப்பது. விருப்பு இருந்தால் வெறுப்பும் தானாகவே வரும். விருப்பு – வெறுப்பு ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்.

ஆசைகளை அடக்குவது வைராக்கியம் அல்ல. ஆசைகளேயில்லாமல் இருப்பது தான் வைராக்கியம் அது விவேகம் உளவானால் தான் உண்டாகும்.கூழாங்கல்லும் இரத்தினக்கல்லும் வைராகிக்கு ஒன்றாகவே தோன்றும்

.3.ஆறு நற்குணங்கள்.ஷட்ஸம்பத்தி

ஸாமம்—மனக்கட்டுப்பாடு. புலன்கள் தேடும் வஸ்துக்களிடம் மனதை செலுத்தாமல் இருப்பது. மனம் ஒன்றின்மேல் சென்றுவிட்டால் அங்கு பற்று உண்டாகிவிடும்.அந்த பரமனிடம் மட்டுமே மனதை செலுத்துதல்

தாமம்—-மனது புலன்கள் விரும்பும் வஸ்துக்களிடம் செல்லாமலிருக்க வேண்டுமென்றால் புலனடக்கம் வேண்டும்

உபாதி—-தான் எடுத்துக்கொண்ட காரியத்திலையே குறியாயிருப்பது. ஆத்ம விசாரணை செய்பவர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் அது புலனடக்கத்தாலும் மனக்கட்டுப்பாட்டினாலும் மட்டுமே கை வரும்.

திதீகஷா—-எதையும் தாங்கும் மனபக்குவம்.கிடைத்த பொருள்களிலா மகிழ்ச்சியோ, கிடைக்காதவ்வற்றிற்காக வருந்துவதைத் விவேகியென்றும் குணங்களில்.
ஶ்ரத்தா—நம்பிக்கை. வேத சாஸ்திரங்களின் மீதும் அதை உபதேசிக்கின்ற குருவிடமும். வைத்தியநாத நம்பினால் தான் வியாதி குணமாகும்.

ஶ்ரத்தா—-மனத்தை குறிக்கோளிலேயே செலுத்துவது. மனம் சிதறாமலிருப்பது.

4. முமுகஸ்தவம்முக்தி வேண்டும் என்ற வேட்கை.விவேகமும் வைராக்கியமும் இந்த வேட்கையை பலப்படுத்துகிறது.

இனி விவேக சூடாமணிக்குள் செல்வோம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s