விவேக சூடாமணி 3

மங்   கள சுலோகம் 1

எந்த ஒரு முயற்சியை ஆரம்பிக்கும் முன்னும் அந்த முயற்சி திருவினையாக வேண்டும்; இடையில் எந்த இடையூறும் நேரக்கூடாது என்பதற்காக பரமனை, குருவை வணங்கி ஆரம்பிப்பதே நமது மரபு. இதை மங்களாசரணம், கடவுள் வணக்கம், காப்பு என்றெல்லாம் கூறுவார்கள்.

பொதுவாக மங்கல சுலோகம் மூன்று வகையாக சொல்லப் படுகிறது.

வேண்டுதல்– பிரார்த்தனை

அங்கெங்கினாதப்படி எங்கும்நிறைந்திருக்கும் பரமனையும்,அந்த பரமனை காண உதவிய குருவையும்,நமஸ்கரித்து போற்றுவது இந்த மங்கலாசரணம்.

ஆசீர்வாதம்-தங்கள் சீடர்களுக்கு அவர்கள் எண்ணமீடேறவேண்டும் என்ற நோக்கில் பரமனை ஸ்துதி செய்வது  ஆசீர்வாத மங்களாசரணம்.

  • வஸ்து நிர்தேசம்

ஒரு சத்தியத்தை சொல்லி எந்த வேண்டுதலுமில்லாமல் வணங்குவது வஸ்து நிர்தேசம்.

இதற்கு சரியான உதாரணம் திருக்குறள்.

அகரமுதலெழுத்தெல்லாம்

ஆதி பகவன் முதற்றே உலகு

.

பிரார்த்தனைக்கு உதாரணங்கள்.

நெஞ்சகனக்கல்லு நெகிழ்நதுருக

தஞ்சத்தருள் ஷண்முகனுக்கியல் சேர்

செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே

பஞ்சக்கரவானை பணிவம்

கல்லும் கரயும் தன்னை தஞ்சமடைந்தவரகளை கண்டு நெகிழ்ந்து என்றும் கை விடாதென, ஷண்முகனுக்குகந்த பாமாலை சாற்ற  ஐந்து கரங்களுடைய வினாயகனை வணங்குகின்றேன் றேன்.

அருணாசல வரற்க்கேற்ற வக்ஷரமணமாலை சாற்ற

கருணாகர கணபதியே கரமருளி காப்பாயே

அக்ஷரமணமாலை இயற்றுமுன் பகவான் ரமணர் இயற்றிய மங்கல சுலோகம்.

இன்னுமொரு உதாரணம்:

வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்

ஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்

சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி

நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார்.

“வினையின் தொகை ஆய வென்றான் – காதி, அகாதி என்னும்

வினைத் தொகுதிகளை முழுதும் வென்றதாலையே உயர்ந்து நிற்கின்றவனும்;  தன் திருவுள்ளத்திலேயே தோன்றிப் பெரிதாகி  ஒப்பற்றதாகி  விரிந்த கேவலஞானத் தினின்றும் பிரியாமல்; மூவுலகங்களையும்  -ஒருங்கே உணர்கின்றவனும்;  – விளங்கா நின்ற ஒளிவட்டம் சூழ்தற்குக் காரணமான ஒளிவடிவம் உடையவனாய் நிலைபெற்றவனும் (ஆகிய அருகக் கடவுளினது),பாதம் பணிந்தவரே வினைகளெல்லாம்  – நீங்கி நின்றார் – பிறப்பிற்குக் காரணமானஇருள்சேர் இருவினையும் நீங்கப்பட்டு வீட்டின்கண் – பரம பத த்தில்- ஆத்ம சாக்ஷஆத்காரம் அடைந்து  நிலைத்து நிற்கின்றவர் ஆவர் வரை வணங்குகிறேன்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை – திருக்குறள் – 9

தச்சாம்பாடி சின்னசாமி நயினார் உரை:

கோளில் பொறியின் – கொள்ளும் நினைவுப் பொறியறிவில்லாத பாவைபோல, எண்குணத்தான் தாளை

வணங்காத் தலை – எண்குண இறைவன் பாதங்களைத் தொழாத வெறுந்தலைகள், குணம் இலவே – யாதோர் குணமுமில்லை.

எண்குணம் யாது?

குறளாசிரியர் யாரை எண்குணத்தான் என்று விளிக்கிறார்? பரிமேலழகர் தம் விளக்க உரையில் இவ்வாறு கூறுகிறார்:
எண்குணங்களாவன:
1. தன்வயத்தன் ஆதல்

2. தூய உடம்பினன் ஆதல்

3. இயற்கை உணர்வினன் ஆதல்

4. முற்றும் உணர்தல்

5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்

6. பேரருள் உடைமை

7. முடிவு இல் ஆற்றல் உடைமை

8. வரம்பு இல் இன்பம் உடைமை

திருவாவடுதுறை ஆதீனம் சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த காஞ்சிப் புராணம்

இருக வுள்துளை வாக்குகார்க் கடங்கள் இங் குலிகக்

குருநி றத்திழி தோற்றமுன் குலாய்த்தவழ்ந் தேறிப்

பரிதி மார்பினில் சமனொடு காளிந்தி பயிலுந்

தி ருநி கர்த்தசீர் ஐங்கரக் களிற்றினைச் சேர்வாம்.

ஐந்து திருக்கரங்களும் யானைமுகமும் உடைய விநாயகப் பெருமானாரது

இரு காதுகளின் வழி ஊற்றுகின்ற கரிய மதநீர் செந்நிற மார்பினிடமாக

ஒழுகுதல், சூரியன் மார்பில் அவன் மகனாகிய இயமனும், மகளாகிய

காளிந்தியும் தவழ்தலை ஒக்கும். இவ்வாறு காட்சி விளங்கும் அவ்விநாயகப்

பெருமான் திருவடிகளில் சரண் புகுவாம். இவ்வாறு எல்லோருமே பரமனை வணங்கியே எந்த நூலையும் ஆரம்பித்துள்ளார்கள்.

எல்லாவற்றிலும் மிகவும் பொருத்தமான மங்களாசரணம் சுவாமி தாண்டவராயன் பிள்ளை இயற்றிய நவநீத கைவல்யம் என்ற நூலிற்கு தந்துள்ளது தான். அதை அடுத்த பகுதியில் காணலாம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s