யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 311

தினமொரு சுலோகம்

நாள்311

இதய தத்துவமும் சத்திய தரிசனமும்

संविन्मात्रं तु हृदयमुपादेयं स्थितं स्मृतं

च बाह्वे च न च बाह्वे न चान्तरे (५/७८/३५)

ஸம்ʼவின்மாத்ரம்ʼ து ஹ்ருʼத³யமுபாதே³யம்ʼ ஸ்தி²தம்ʼ ஸ்ம்ருʼதம்ʼ

ச பா³ஹ்வே ச ந ச பா³ஹ்வே ந சாந்தரே (5/78/35)

saṁvinmātraṁ tu hr̥dayamupādēyaṁ sthitaṁ smr̥taṁ

ca bāhvē ca na ca bāhvē na cāntarē (5/78/35) 

இராமன் கேட்டான்: ” தாங்கள் இப்பொழுது சொன்ன இதயம் என்பது என்ன?” 

வஸிஷ்டர் சொன்னார்:” இராமா,நான் இரண்டு இதயங்களைக் குறித்து இங்கு சொல்லப்போகிறேன்.’ஒன்று நம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடியது. மற்றதை அலட்சியப் படுத்தி விடலாம்.’ என்றே வைத்துக் கொள்வோம்.சரீரத்தியில் இருக்கும் பௌதிக இதயத்தை பொருட்படுத்த வேண்டாம்.

‘நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய இதயம் சுத்த போத சொரூபம்.அது உள்ளிலுமுள்ளது; வெளியேயுமுள்ளது. ஆனால் அது உள்ளிலுமில்லை; வெளியேயுமில்லை.’

அது தான் இதய தத்துவம்.அதில்த்தான் இந்த பிரபஞ்சம் காணப்படுகின்றது.எல்லாவிதமான செல்வச்செழிப்புகளும் அங்கு தான் குடியிருக்கின்றது.

போதம் தான் எல்லா உயிரினங்களின் இதயம்.அது எப்பொழுதும் துடித்துக்கொண்டிருக்கின்ற ஒரு மாமிசத்துண்டல்ல.நான் ஏற்கனவே சொன்னது போல்,மனம் எல்லா உபாதிகளும் அழிந்து போதத்தில் மையப்படுத்தப் பட்டு விட்டால்,பிராணன் கட்டுப்படுத்தப்பட்டு விடுகிறது.யோகவித்யையில் நிபுணர்களான குருமார்கள் பிராணனை கட்டுப்படுத்துவதற்கு பல வழிகளை உபதேசித்துள்ளார்கள்.அவைகளில் எதை வேண்டுமானாலும் நாம் கடை பிடிக்கலாம்.

யோக வித்யைகள் கடை பிடிக்கும்பொழுது எந்த விதமான பலவந்தமும் கைக்கொள்ளக். கூடாது.அவ்வாறு செய்தால் மட்டுமே அவை பலனளிக்கும்.அப்படிப்பட்ட ஒரு வித்யை கற்று கடைப்பிடிக்கும் ஒருவனில்  ஆசையின்மையும் மனோ வாசனைகளின் கட்டுப்பாடும் ஒரே நேரத்தில் கைவரும்.அது பிராணனையும் கட்டுப்ஆட்டிற்குள கொண்டுவந்து விடும்.பயிற்சிக்காக, புருவங்களிற்கிடையில் ,மத்தியில், மூக்கின் நுனியில், தொண்டையில், சிரஸின் உச்சியில்,மூக்கின் நுனியிலிருந்து ஒரடி தொலைவிலுள்ள மையப்புள்ளியில்  மனதை ஒர்ருமைப்படுத்துவது- இவைகளில  எது வேண்டுமானாலும் செய்யலாம்.ஆனால் இடைவிடாத பயிற்சி வேண்டும்.அப்படிப்பட்ட பயிற்சியினால் மட்டுமே துன்பத்தை ஒழித்து ஆனந்தத்தை அனுபவப்பட வைக்க முடியும்.அதனால்த் தான்யோ பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.பிராணனை இவ்வாறு நிரோதித்து விட்டால் மிஞ்சுவது தான் நிர்வாணம்! அதில் தான் எல்லாம்; அதிலிருந்து தான் எல்லாம்; அது தான் எல்லாம்! காணப்படும் பிரபஞ்சம் அதுவல்ல! அதிலிருந்து உலகம்உருவாகவில்லை. உலகம் அது போல இல்லை. இம்மாதிரியான காட்சியை தன் உள்ளேயே காணுபவன் – அந்த எணணத்தில் உறுதியாக நிற்பவன்- தான் ஜீவன் முக்தன்.யோக பயிற்சியினால் பரம சாந்தியை அடைந்தவன் ஸத்திய சாக்‌ஷாத்காரம் அடைந்தவன்.
      பரமாத்மாவிற்கு ஆதியும் – முதலும்  கிடையாது; அந்தமும்- முடிவும் கிடையாது! எண்ணிக்கையில்லாத ஜீவ- நிர் ஜீவ ஜாலங்கள்  எல்லாமே ஆத்மா தான்; ஆத்மா அல்லாமல் வேறொன்றில்லை! என்ற ஞானம்  தான் சத்திய தரிசனம்.இந்த தரிசனம் பெற முடியாமல் போகிறவர்களுக்கு தொடர்ந்து பிறப்பும் இறப்பும் அனுபவப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டி வரும்.சரியான சத்திய தரிசனம் மறு பிறவி என்பதை இல்லாமலாக்கிவிடுகிறது. இதில் விஷய- விஷயீ பந்தம் கிடையாது. .இவைகளுக்குள் எந்த பேதமும் கிடையாது.ஏனென்றால் ஆத்மா என்ற போதம் தான் ஞானம்; அதுவே அறியப்படுகின்ற பொருள்; அதுவே அறிகிறவனும்! அறியப்பட வேண்டியதும் இந்த போதமே! இவைகளுக்குள்  வித்தியாசங்கள் உண்டு என்ற பிரமை தான் அவித்யை அல்லது அஞ்ஞானம்! சத்திய தரிசனம் பெற்றுவிட்டால் பந்தனமும் கிடையாது முக்தியும் கிடையாது.அப்படிப்பட்ட ரிஷி ‘தான் ‘ எனும்ஆத்மாவை தன்னில் உறுதிப்படுத்தி நிலைகொள்கின்றான்.அவன்  எதனாலும்  பாதிக்கப்பட  மா ட்டான். இருப்பது அவன் மட்டும்தானே! யார் யாரை பாதிப்பது?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s