யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 327

தினமொரு சுலோகம்

பூரண முக்தி

பா³த்³த்⁴வாத்மானம்ʼ ருதி³த்வா கோஸ²காரக்ருʼமிர்ʼயதா²

சிராத்கேவலதாமேபி ஸ்வயம்ʼ ஸம்ʼவித்ஸ்வபா⁴வத: (5/91/93)

बाद्ध्वात्मानं रुदित्वा कोशकारकृमिर्यथा

चिरात्केवलतामेपि स्वयं संवित्स्वभावत: (५/९१/९३)

bāddhvātmānaṁ ruditvā kōśakārakr̥miryathā

cirātkēvalatāmēpi svayaṁ saṁvitsvabhāvata: (5/91/93) 

வஸிஷ்டர் தொடர்ந்து சொன்னார்:” நான் சொன்ன இந்த நிலையை அடைவது எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் அதற்காக முயன்றே ஆகவேண்டும்.அப்படித்தான் துன்பக்கடலைக்  கடக்க முடியும்.அனுபவங்கள் வேண்டும் என்ற ஆசை முதலில ஒரு சிறு எண்ணத் துளியாகத்தான் போதத்தில் உதயமாகும்.ஆனால் அந்த எண்ணம் திரும்பத் திரும்ப வந்து உறுதிப் பட்டு விடுகிறது.அது பிறகு மிகவும் பிரபலமாகிறது.அவ்வாறு இந்த பிரமையின் சிருஷ்டி சஞ்சயத்தை( பிரபஞ்சத்தை) தானாகவே உற்பத்தி செய்து போதம் தானே முக்தியை நோக்கி அழைத்துச்செல்லப்படுகிறது.போதம் என்ன விரும்புகிறதோள அது உருவம் பெற்று தோன்றுகிறது.

‘ பட்டு நூல் புழு தான் கட்டிய கூட்டுக்குள் சிறைபடுவது போல், ஆத்மா இன்ப- துன்பங்களை தானே வரவழைத்துக்கொண்டு அதில் சிறை படுகிறது.பிறகு அதுவே கூட்டை அறுத்துக்கொண்டு  பட்டாம்பூச்சியாக விடுதலை அடைந்து பறந்து போவது போல் ஆத்மாவும் இன்ப- துன்பங்களிலிருந்து விடுபடுகிறான். அது தான் முக்தி.அனந்தாவபோதம் தான் ஆத்மாவின் இயற்கை குணம்.’

இந்த பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற எல்லாமே அனந்தாவ போதம் தான், இராமா . அனந்தாவபோதத்தின். அஸ்திவாரமோ ‘அது இருக்கின்ற ஒன்று’ என்பது தான்.பிரபஞ்ச வஸ்துக்களும் அனந்தாவபோதமும் சூரியனும் சூரிய ஒளிக்கீற்றுக்களும் போல பிரிக்க முடியாதவை

தூய இருப்பிற்குக் இரண்டு பக்கங்களுண்டு. ஒன்று: ஏகவும் அத்விதீயம் ப்ரஹ்மம். இரண்டு: நானாத்துவம்.’அது’ , ‘ இது’, ‘ நான்’, ‘நீ’என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பது நானாத்துவம்.இம்மாதிரியான வேற்றுமைகளை கை விடும்பொழுது உளவாகின்ற தூய இருப்பைத்தான் ஏகமானதான சத் என்று உணர்வாயாக, இராமா! நானாத்துவத்தை கை விட்டு ஏகத்துவத்தை தெரிந்தெடுக்கும் பொழுது ‘ அனுபவம்’ என்ற ஒன்றில்லாமலாகிவிடுகிறது.ஆகவே ஏகத்துவம் என்பது அனுபவிக்கத் தகுந்த ஒன்றல்ல.ஆனால் இந்த ஏகம் என்பது அழிவில்லாததும் என்றும் இருக்கக் கூடியதுமான ஒன்று.

 ஆகவே இராமா, காலத்தினாலோ, கூட்டுப்பொருட்களின் தன்மையினாலோ, பொருட்களின் குணவிசேஷங்களாலோ உண்டாகின்ற எல்லா பாகுபாடுகளையும் கைவிட்டு விடு.ஏனென்றால் அவை எல்லாமே மனோ சங்கல்பங்களினால் உண்டானவை. அவைகளுக்கு தனியான இருப்பு கிடையாது. அவைகள் எல்லாமே அனந்தாவபோதமே! அவை உண்மையுமல்ல! பாகுபாடுகளை, பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட சிந்தைகள் நம் மனதையோ பார்வையோ மாசற்றதாக்காது.

இதுவரை நாம் சொன்னதெல்லாம் மாசற்ற இருப்பை அடிப்படையாகக் கொண்டு தான்.அது தனி சத்.இந்த சத்திற்கு காரணமானது என்று ஒன்றில்லை.அதுவே எல்லாவற்றிற்கும் காரணமாயிருக்கும் பொழுதும் அது காரணமில்லாத ஒன்று தான்.அதில் தான் எல்லாமெல்லாம் காட்சியளிக்கின்றன.நாக்கு எப்படி பலதரப்பட்ட சுவைகளை ருசிக்கின்றதோ அது போல் இந்த சத் தான் பலவிதப்பட்ட அனுபவங்களை தோற்றுவிக்கின்றன.அனேகம் கோடி பிரபஞ்சங்களும் பிரபஞ்ச வஸ்துக்களும் உண்டாகி கால- தேசங்களுக்கேற்றார்ப் போல் ஒன்றுக்கொன்று பந்தங்களையும் சிருஷ்டித்து, கடைசியில் எல்லாமே அழிந்து போகின்றன.இந்த தூய சத் கனமான பொருட்களின் எடை; எல்லா வெளிச்சத்திற்கும் ஒளி; அது சூக்‌ஷமமும் ஸ்தூலவும் ஆன எல்லாப் பொருட்களும் தான்.முதலவர்களில் முதன்மையானதும், வரிசையிலே கடைசியில் வரும் கடைசியாக பொருளும். அதுவே! விளக்கின் ஒளியும்,இருளின் இருளும்அதுவே! பொருட்களின் உள்ளேயிருப்பதும் வெளியே இருக்கின்ற ஆகாயமும் இதுவே! அது எதுவுமில்லை; அதுவே எல்லாம்! அது தோன்றுகின்றதும் தோன்றாததும்! அது காண்பதும் காணாததும! அது தான் நான்; அது நானில்லை.! 

ஆகவே இராமா, நீ உன் சர்வ சக்தியையும் பயன்படுத்தி அந்த நிலையை அடைவாயாக! பிறகு எது உசிதமானதாகப்  படுகிறதோ அதை செயலாக்கு! .அழிவில்லாத, தூய, விடுதலை பெற்ற சொரூபமான ,ஆத்மாவான,அந்த பரம சத்தை அடைவாயாக! அப்பொழுது மிகுந்த அமைதியை பெறுவாய்! அங்கு சென்றடைந்ததும் இந்த பிரபஞ்சத்தின் காரணமாக உண்டாகின்ற எல்லா பயங்கள், சஞ்சலங்கள், சந்தேகங்கள் எல்லாவற்றிலிருந்தும் நீ பூரண முக்தனாவாய்! .  

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s