யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 328

தினமொரு சுலோகம்

மனோ நிலகரகத்திற்கான வழிகள்
அத்³த்⁴யாத்மவித்³யாதி⁴க³ம: ஸாது⁴ஸங்க³ம ஏவ ச

வாஸனாஸம்பரித்யாக³: ப்ராணஸ்பந்த³னிரோத⁴னம்ʼ (35/92/35)

अद्ध्यात्मविद्याधिगम: साधुसंगम एव च

वासनासंपरित्याग: प्राणस्पन्दनिरोधनं (३५/९२/३५)

addhyātmavidyādhigama: sādhusaṁgama eva ca

vāsanāsaṁparityāga: prāṇaspandanirodhanaṁ (35/92/35) 

இராமன் கேட்டான்:” பகவான்,எப்படி ஒருவன் தன் கவனத்தை திரும்புகின்ற காரணங்களையெல்லாம் விலக்கி விட்டு பரமமான அந்த நிலையை அடைவது?”

வஸிஷ்டர் சொன்னார்:” இராமா, துன்பங்களின் விதைகளை ஒன்றொன்றாய் , ஒன்றுக்கொன்று காரணமானவையை அழிக்க முடியும்.இந்த மனோ வாசனைகளை எல்லாவற்றையும் ஒரேடியாக அழித்து விட முடிந்தால்,சுய முயற்சியால் அந்த பரமமான சத்( சத்தியத்தில்- பிரம்மத்தில்) தில் லயித்து பரமானந்தத்தை அனுபவிக்க முடிந்தால்,அதில் சிறிதளவேனும் நிம்மதியடையன முடிந்தால்,உன்னால் அந்த உன்னதமான நிலையில் நிரந்தரமாக வசிக்க முடியும்.ஆனால் அதன்- அந்த சத் வஸ்துவின் பொருள் தெரிந்து கொள்ள மட்டும் தான் நீ விரும்புகிறாய் என்றால்  இடைவிடா சுய முயற்சியால் அதுவும் சாத்தியமே! 

அதே போல் அனந்தாவபோதத்தை தியானம் செய்தும் அந்த ஆனந்தத்தை பெறமுடியும்.ஆனால் அது மிகவும் கஷ்டமான வழி.அனுபவங்களைத் தருகின்ற எந்த பொருளும் தியானத்திற்கு உதவாது.ஏனென்றால் அவை போதத்தில் – ஆத்மாவில் மட்டும் குடியிருக்கின்றவையல்லவா! ஆனால் நீ உன் மனோ விசாரங்கள், கற்பனைகள்,பழக்க வழக்கங்கள் முதலிய மனோ உபாதிகளை அழித்துவிட முயற்சிப்பயேயானால் கண் நேரத்தில் இந்த வாசனைகள் எல்லாம் ஒழிந்து போகும்.இது முன் சொன்ன எல்லா வழிகளையும் விட கடினமானது.
மனதில் எல்லா சஞ்சலங்களும் அற்றுப் போவது வரை உபாதிகள் அழிவது என்பது சாத்தியமில்லை.எதிர்மறையாக உபாதிகள்அழியும் வரை மனதிலுள்ள சஞ்சலங்களும் அழிந்து போகாது.சத்திய சாக்‌ஷாத்காரம் அடையாமலே மனோ விருத்திகள் இல்லாமலாகாது.அதே போல் மனோ விருத்திகள் அழிந்தால்லாமல் சத்திய சாக்‌ஷாத்காரம் சாத்தியமுமில்லை.உபாதிகள் முற்றிலும் அழிந்தாலல்லாமல்  உபாதிகளிலிருந்து  சத்தியம் வெளி வராது.சத்திய சாக் ஷாத்காரம், மனோ நிவுருத்திமார்க்கம், உபாதிகளின் முடிவு இந்த மூன்றும் கண்ணுக்குத் தெரியாத பரம ரகசியமான இழைகளால் பந்திக்கப்பட்டிருக்கிறது.ஆகவே அவைகளை தனித்தனியாக கையாள்வது மிகவும் கஷ்டமான காரியம்.ஆகவே இராமா,அவைகளை ஒட்டுமொத்தமாக வெல்வாயாக! அதற்காக உன் எல்லா திறமைகளையும் பயன் படுத்தி , உன்னிலுள்ள இன்பங்களை தேடும் ஆர்வங்களையும் ஒழித்து கட்டு.நிறைய நாட்கள் பயிற்சி செய்தால் மட்டும் தான் இது இயலும்; பலன் கிடைக்கும்.

இராமா, இந்த காணப்படுகின்ற உலகம் தான் உண்மை என்று நாம் நீண்ட காலமாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.ஆகவே தொடர்ந்து முயலுவதால் மட்டுமே இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் ஓழிக்க முடியும்.ஞானிகள் சொல்கிறார்கள், ‘ பிராணனை கட்டுப்படுத்துவதும் உபாதிகளை அழிப்பதும் ஒன்று தான்’ என்று.இரண்டும் ஒரே பலனைத் தரும்.ஆகவே இராமா, இரண்டையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்.ஒரு யோகா குருவின் உபதேசப்படி  பிராணாயாமத்தின் வழியாக பிராணனை கட்டுக்குள் கொண்டுவர இயலும்.

அனுபவங்களைத் தரும் பொருட்களை கண் முன்னால் காணும் பொழுதும்,மனதில் ஆசையோ வெறுப்போ, ஆஸக்தியோ, உதிக்கவில்லையென்றால், மனோபாதிகள் வலுவிழந்து விட்டன என்று அர்த்தம்.அப்பொழுது விவேகம் உதயமாகின்றது..அது மேலும் மனோபாதிகளினால் வலுவிழக்கச்செய்கின்றன. அப்படி மனமே இல்லாமலாகிறது.தகுந்த மார்க்கங்களை் நாடினால் தான் மனதை இல்லாமலாக்க முடியும் . 

” ஆத்மஞானம் , மகான்களுடனான சத் சங்கம்,மனோபாதிகளை கைவிடுதல்,பிராணனைக் கட்டுப் படுத்துதல் என்பவை தான் மனதை இல்லாமலாக்குவதற்கு வழிகள்.”

இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் கடுமையான தவங்கள் ஆற்றுவதாலோ,ஹடயோகம் முதலிய யோகமார்க்கங்களை நாடுவதாலோ, புனிதப் பயணங்கள் மேற்கொள்ளுவதாலோ,யாகங்கள் செய்வதாலோ எந்த பயனுமில்லை. அவை வீண் முயற்சிகள்.ஆத்ம ஞானம் மட்டும் தான் உனக்கு எல்லையில்லாத ஆனந்தத்தை நல்கும்.ஆத்மஞானம் நேடினவன் மட்டும் தான் சரியான வாழ்வு வாழ்கிறான்.இராமா, ஆகவே நீயும் ஆத்ம ஞானம் பெறுவாய். 
.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s