யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 354

தினமொரு சுலோகம்

நாள் 354

ஹரனிற்கு ஏற்பட்ட சோதனை

अथेयमाययौ तासां कथावसरत: कथा

अस्मानुमापतिर्देव: किं पश्यत्यवहेलया (6/18/27)

அதே²யமாயயௌ தாஸாம்ʼ கதா²வஸரத: கதா²

அஸ்மானுமாபதிர்தே³வ: கிம்ʼ பஶ்யத்யவஹேலயா (6/18/27)

athēyamāyayau tāsāṁ kathāvasarata: kathā

asmānumāpatirdēva: kiṁ paśyatyavahēlayā (6/18/27)

புஶுண்டன் சொன்னார்:” இந்த விசுவத்தில் ஹரன் என்ற பெயருடைய ஒரு தேவதி தேவன் இருக்கிறார்.சுவர்க்க உலகத்திலிருக்கும் தேவர்களுக்குக் கூட அவர் கடவுளாக வாழ்கிறார்.அவரின் ஒரு பாதி அவர் மனைவி உமா தேவி.அவரது ஜடாமகுடத்திலிருந்து கங்கை ஒழுகி வருகிறாள்.அவரது உச்சியில் பிறை ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது.ஒரு கொடும் நாகம் அவரது கழுத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.ஆனால் பிறையிலிருந்து சொட்டிக்கொண்டிருந்த அமுது அந்த நாகத்தின் விஷத்தின் வீரியத்தை இல்லாமலாக்கிக் கொண்டிருக்கிறது.அவர் உடல் முழுவதும்  புனிதமான திருநீறு அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.அது மட்டும் தான் அவரின் ஆபரணமாக இருந்தது.அவர் வசித்து வருவது சுடுதல் காட்டில்.

அவர் மண்டையோடுகளலான மலையை அணிந்திருக்கிறார்.ஒரே ஒரு பார்வையில் அவர் அசுரர்களை சாம்பலாக்கும் சக்தி கொண்டவராயிருக்கிறார்.உலகின் நன்மை தான் அவரது ஒரே ஒரு இலட்சியம்.எப்பொழுதும் தியானத்திலிருப்பதையும் போல் காட்சியளிக்கும் மலைகளும், குன்றுகளும் அவரை பிரதிபலிக்கின்றன.கரடி, ஒட்டகம், எலி முதலிய உயிரினங்களின் முகத்தோடுகூடிய பூதகணங்கள் அவரது சேவகர்களாயிருநக்கிறார்கள்.அவருடைய கைகள் வாட்முனைகள் போல் கூர்மையானவையாக இருக்கின்றது.அவருக்கு கூர்மையான மூன்று கண்கள்  உள்ளன.பூதங்களும் பிசாசுகளும் வரை நமஸ்கரிக்கின்றனர்..

பதினான்கு உலகிலுள்ள உயிரினங்களை உணவாய் உண்ணுகின்ற பிசாசினிகளும் தேவதைகளும் ஹரனின் முன்னால் நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள்..அவர்களுக்கு பலதரப்பட்ட விலங்கினங்களின் முகங்கள் காணப்பட்டன.மலையுச்சியிலும், ஆகாயத்திலும்,வெவ்வேறு உலகங்களிலும், சுடுகாட்டிலும். உருவமுடைய உயிரினங்களிலும்,அவர்கள் வாழுகிறார்கள்.அவர்களில் எட்டு பேர் முக்கியமானவர்கள்.ஜய, விஜய, ஜயந்தி, அபராஜிதா,ஸித்த,ரக்த, ஆலம்புஷ, உத்பல, என்பன அவர்கள் பெயர்கள்.மற்றவர்கள் இந்த எட்டு பேரின் பின்னால் போகிறார்கள்.இவர்களில் ஆலம்புஷ,மிகவும் பிரபலமானவள்.அவளது வாகனம் மிகவும் சக்தி வாய்ந்த,நீலநிறத்தில் காணப்படும் ஒரு காகம்.அந்த காகத்தின் பெயர் ‘சண்ட’! 

ஒரு நாள் இவர்கள் எல்லோரும் ஆகாயத்தில் கூட்டம் கூடினார்கள்.முதலில் அவர்கள் ருத்திரனின் அம்சமான தம்புரு என்ற தேவனை  பூசித்தார்கள்.பிறகு, பரம சத்தியத்தை வெளிக்கொண்டு வருவதற்கு உதவக்கூடிய ஒரு இடது பக்கமுள்ள ஒரு சடங்கில் ஈடுபட்டார்கள்.மது அருந்தி மயங்கியவர்களைப்போல் அவர்கள் நடனமாடிக்கொண்டே தம்புருவையும், பைரவனையும் பூசித்தார்கள். 

” சிறிது நேரத்தில் அவர்கள் இவ்வாறு சர்ச்சை செய்ய ஆரம்பித்தார்கள்:’ ஏன் உமாபதியான ஹரன் நம்மை மிகவும் கேவலமாக நடத்துகிறார்? ‘ பிறகு அவர்கள் இப்படியொரு முடிவிற்கு வந்தார்கள்.’ நாம் நமது சக்தி என்ன என்பதை ஹரனிற்கு காட்டிக் கொடுக்க வேண்டும்.அப்படி செய்தால் அவர் நம்மிடம் மோசமாக நடந்து கொள்ள மாட்டார்.’

அவர்கள் மாயா ஜாலத்தால் உமாவை மனக்குழப்பத்திலாழ்த்தி,ஹரனிடமிருந்து பிரித்தார்கள்.பிறகு ஆனந்தத்தில் உந்தப்பட்டு நடனமாடினார்கள்.மது அருந்தினார்கள்.சிலர் சத்தமாக பாடினார்கள்.உச்சஸ்தாயியில் சிரித்தார்கள்.சிலர் அங்குமிங்கும் ஓடி கீழே விழுந்து உருண்டார்கள்.சிலர் புலால் உண்டார்கள்.அவர்கள் மது மயக்கத்தில் செய்த செய்கைகள் பிரபஞ்சமெங்கும் ஒழுங்கின்மையையும், அமைதியின்மையையும் உண்டு பண்ணிற்று.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s