Yogavasishtam 355

தினமொரு சுலோகம்

நாள் 355

சண்டாவின் குழந்தைகள்

तात ज्ञातमलं ज्ञेयं ब्राह्म्या देव्याः प्रसादत:

किंत्वेकान्तस्थितेः स्थानमभिवाञ्छाम उत्तमं (6/19/25)

தாத ஜ்ஞாதமலம்ʼ ஜ்ஞேயம்ʼ ப்³ராஹ்ம்யா தே³வ்யா꞉ ப்ரஸாத³த:

கிந்த்வேகாந்தஸ்தி²தே꞉ ஸ்தா²னமபி⁴வாஞ்சா²ம உத்தமம்ʼ (6/19/25)

புஶுண்டன் தொடர்ந்தார்:” இவ்வாறு தேவதைகள் தன்னை மறந்து, மது மயக்கத்தில் ஆடிப்பாடி  கும்மாளமிட்டுக் கொண்டிருந்ததை பார்த்த அவர்களது வாகனங்களான காகங்களும் அன்னப்பறைவைகளும்  ஆடிக்களிக்க ஆரம்பித்தார்கள். சண்ட எனும் காகத்துடன் அன்னங்கள் குதித்து கும்மாளமிட்டுக் நடனமாடினார்கள்.அவ்வாறு நடனமாடிக் கொண்டிருக்கையில் அவர்களில் பால் உணர்வு உளவாய் கலவியிலும் ஈடுபட்டார்கள்.ஒவ்வொரு அன்னப்பறவையும் அந்த காகத்துடன் கலவியிலும் ஈடுபட்டார்கள்.நாட்கள் கடந்து போயின! அன்னப்பறவைகள் கர்ப்பமுற்றார்கள்.

இந்த கொண்டாட்டங்களெல்லாம் முடிந்த பிறகு இந்த தேவதைகள் ஹரனிடம் சென்றார்கள்.அவர்கள் உமாதேவியின் உடலை சமைத்து ஹரனிற்கு உணவாக படைத்தார்கள்.மாயாஜாலத்தால் அவர்கள் உண்மையின் உடலை அவ்வாறு மாற்றியிருந்தார்கள்.பரம சிவனுக்கு விஷயம் புரிந்தது.அவர் தேவதைகளை கோபித்துக்கொண்டார்.அவர்கள் உடனேயே உமையை மறுபடியும் உயிர்ப்பித்தார்கள்.பகவானின முன் தேவியை கொண்டு நிறுத்தினார்கள் பிறகு அவர்கள் தங்கள் தங்கள் வாசஸ்தலங்களுக்குச் சென்றார்கள்.

பிராம்மியின் வாகனங்களான அன்னப்பறவைகள் நடந்தது என்ன என்பதை தங்கள் தலைவியிடம்  சொன்னார்கள். பிராம்மி சொன்னார்கள்:’ நீங்கள் கர்ப்பமுற்றிருப்பதால் உங்களால் உங்கள் கடமைகளை சரிவர செய்ய இயலாது.ஆகவே சிறிது காலம் நீங்கள் வேறு எங்காவது போய் வசித்துக்கொள்ளுங்கள்.’

இவ்வாறு சொல்லிவிட்டு பிராம்மி தியானத்தில் ஆழ்ந்து விட்டாள்.அன்னங்கள் காலம் வந்ததும் இருபத்தியோரு முட்டையிட்டார்கள்.சிறிது நாட்களில் முட்டைகளிலிருந்து இருபத்தியோரு காக்கை குஞ்சுகள் வெளிவந்தன. அப்படி பிறந்த காகங்கள் தான் நாங்கள். நாங்கள் சண்டாவின் வம்சம்.நாங்கள் இருபத்தியொன்று காகங்கள் பிறந்தோம்.நாங்கள் எங்கள் தாய்மார்களுடன் பிராம்மியை உபாசிக்கின்றோம்.அந்த தேவியின் கிருபையால் எங்களுக்கு பிரம்ம ஞானம் கிடைக்கப்பெற்றோம்.நாங்கள் எப்பொழுதும் முக்தராகவே இருக்கிறோம்.

அவ்வாறு இருக்கையில் எங்கள் தந்தையளார் எங்களிடம் வந்து எங்களை ஆலிங்கனம் செய்தார். அவருடம் சேர்ந்து ஆலம்புஷாதேவியை பூசித்தோம்

சண்டன் தொடர்ந்தார்:’ குழந்தைகளே, நீங்கள் வாசனைகளாகின்ற பந்தங்களை அறுத்தெறிந்து விட்டு, எந்த விதமான மனோபாதைகளும் தொந்திரவும். இல்லாமல் இந்த காணப்படும் பிரபஞ்சமெனும் வலையிலிருந்து வெளியே வந்து விடுங்கள்.நாம் சேர்ந்து பரமமான ஞானத்தை நல்குகின்ற அந்த தேவதையை உபாசிப்போம்.’

நாங்கள் சொன்னோம்:’ தந்தையே, பிராம்மி தேவதையின் கிருபையால் கிடைப்பதற்கரிய ஞானத்தில் உன்னதமான ஞானத்தை பெற்று விட்டோம்.நாங்கள் வசிப்பதற்கு ஆட்கள் யாருமில்லாத , தகுந்த இடத்தை கண்டு பிடிக்கணும். அது தான் இனிமேலுள்ள தேவை.’.
சண்டன் சொன்னார்:’ குழந்தைகளே, பிரபஞ்சத்தில் உத்தமமான ஒரு மலை உள்ளது.அதன் பெயர் மேரு.பதினான்கு உலகங்களையும், அதில் வசிக்கின்ற உயிரினங்களையும் அந்த மேரு பர்வதம் தாங்கி நிற்கின்றது.தேவர்களும் முனிவர்களும் அங்கு வசிக்கிறார்கள்.அங்கு விரும்புவதை நல்குகின்ற ஒரு பெரிய மரம் உள்ளது.ஆலம்புழா தேவி தியானத்திலிருந்த காலத்தில் நான் அதில் ஒரு கூட்டை கட்டியிருந்தேன்.எல்லாவிதத்திலும்  நல்லதோர் கூடு அது.குழந்தைகளே, நீங்கள் அங்கு போய் வசிக்கலாம். எவ்விதமான கஷ்டங்களுமிராது.அப்படி தந்தையின் ஆணைப்படி இங்கு வந்து வசிக்கலானோம்.’

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s