யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 372

தினமொரு சுலோகம்

நாள் 372

பக்தி தரும் பலன்கள்

தே தே³ஶாஸ்தே ஜனபதா³ஸ்தா தி³ஶாஸ்தே ச பர்வ்வதா:

த்வத³னுஸ்மரணை காந்ததி⁴யோ யத்ர ஸ்தி²தா ஜனா: (6/29/109)

ते देशास्ते जऩपदास्ता दिशास्ते च पर्व्वता:

त्वदऩुस्मरणै कान्तधियो यत्र स्थिता जऩा: (6/29/109)

te dezAste jan2apadAstA dizAste ca parvvatA:

tvadan2usmaraNai kAntadhiyo yatra sthitA jan2A: (6/29/109)

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” பகவான் பரமசிவன் வசிக்குமிடங்களிலொன்று கைலாயம்.நான் சிறிது நாட்கள்  அங்கு வசித்து  பகவானை பூசை செய்து தவம் செய்ததுண்டு.என் சங்கம் மகா முனிவர்களுடன் தான் இருந்தது.அவர்களுடன் வேத சாஸ்திரங்களிலுள்ள சத்தியங்களைக் குறித்து சர்ச்சை செய்து நாட்களை போக்கிக்கொண்டிருந்தேன்.

ஒரு நாள் சூரியன் சாயுங்காலம் சூழ்நிலை மிகவும் அமைதியாகவும் ஒலிகளேதுமில்லாமலும் இருந்தது.நான் சிவ பூஜையில் மூழ்கியிருந்தேன்.அந்த கானகத்தின் இருள் ஒரு வாளால் பகுத்து இரண்டாக்குகின்ற அளவில் அடர்த்தியாக இருந்தது.அப்பொழுது அங்கு நான் ஒரு மகத்தான் ஒளியைக் கண்டேன்.புறக் கண்களால் கண்ட அந்த வெளிச்சத்தில் எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது.பகவான் பரமசிவன் தேவி பார்வதியுடன் கைகோர்த்துக் கொண்டு உலா வந்து கொண்டிருந்தார்.பகவானுக்கு முன்னால் நந்திபகவான் வழிகாட்டியாக நடந்து கொண்டிருந்தார்.என் சீடர்களிடம் விவரத்தைக் கூறி , அவர்களையும் சேர்த்துக் கொண்டு பகவானின் சன்னிதிக்கு சென்றோம்.

பகவானை மிகுந்த பயபக்தியுடன் வணங்கி விட்டு அந்த திவ்ய தரிசனத்தை சிறிது நேரத்திற்கு அனுபவித்து மகிழ்ந்தோம்.

பகவான் கேட்டார்:’ தங்கள் தவங்களெல்லாம் நன்றாக நடந்தேறிக்கொண்டிருக்கறதல்லவா? ஏதாவது தடைகள் ஏற்பட்டு தவத்திற்கு விக்னம் ஏதும் உண்டாகவில்லையே? யாரும் தங்களை தொந்திரவு செய்யவில்லையே? தாங்கள் சென்றடைய வேண்டிய, சென்றடைய உசிதமான அந்த நிலைக்கு சென்றடைந்து விட்டார்களா? உள்ளத்திலுள்ள பயமெல்லாம் நீங்கிவிட்டதா ? ‘

அவருடைய கேள்விகளுக்கு பதிலாக நான் சொன்னேன்:’ பரம் பொருளே! தங்கள் பக்தர்களாவதற்கு முடிந்தவர்களுக்கு எதுவும் கிடைப்பது கஷ்டமில்லையல்லவா!அவர்களுக்கு எந்த பயமுமில்லை! தங்களைத் குறித்துள்ள இடைவிடாத தியானத்தில் மூழ்கியிருப்பவர்களை உலகம் முழுவதும் பணிந்து வணங்குகின்றனார்.அவர்களை எல்லோரும் மதிக்கிறார்கள்’.

தங்களில் இதயபூர்வமான பக்தி நிறைந்தவர்கள் வாழும் இடங்கள் தான் நாடாகவும் நகரமாகவும், திசைகளாகவும், மலைகளாகவும், மதிக்கப் படுகின்றன.எப்பொழுதும் தங்களை நினைவு கூர முடிவது முன் ஜன்மத்தில் நாங்கள் செய்த புண்ணியங்களால்த் தான்.ஆசீர்வதிக்கப்பட்ட வருங்காலத்தை உறுதிப்படுத்துவதும்  பகவத் ஞாபகம் தான்’

தங்களைக் குறித்து இடைவிடாமல் தியானிக்க முடிவது அமுத கலசங்கள் கையிலுள்ளது போல்த்தான்.அது முக்தியின் திறந்து வைத்த வாசல்தான்.பகவத் நினைவுகளாகின்ற விலை மதிப்பில்லாத, இரத்தின கற்கள் பதித்த நகைகள் அணிந்து கொண்டு, என்னை  நோக்கிவரும் எல்லா துன்பங்களையும் தொந்திரவுகளையும் இனி வர முடியாத படி மிதித்து அரைத்து விட முடியும்.தங்களின் ஆசீர்வாதத்தால் நான் சத்திய சாக்‌ஷாத்காரம் அடைந்துள்ளேன்.எனக்கு இன்னொரு விஷயம் கூட தங்களிடமிருந்து அறியவேண்டுமென்று ஆவலாயுள்ளது.எல்லா பாபங்களையும் இல்லாமலாக்குவதற்கும்,எல்லா ஐசுவரியங்களையும் நேடுவதற்கும் எந்த மாதிரி பகவத் பூசை செய்ய வேண்டும்  என்று உபதேசித்து என்னை போதவானாக்குவீர்களாக! 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s