யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 380

தினமொரு சுலோகம்

நாள் 380

பேய் என்று நம்பினால்த் தான் பேய் உண்டு!

புஷ்டஸங்கல்ˍப்பமாத்ரேண யதி³த³ம்ʼ து³꞉க²மாக³தம்ʼ

தத³ஸங்கல்ˍப்பமாத்ரேண க்ஷயி காத்ர கத³ர்ˍத²நா (6/33/34)

पुष्टसङ्कल्ˍप्पमात्रेण यदिदं दुःखमागतं

तदसङ्कल्ˍप्पमात्रेण क्षयि कात्र कदर्ˍथना (6/33/34)

puṣṭasaṅkalˍppamātreṇa yadidaṃ duḥkhamāgataṃ

tadasaṅkalˍppamātreṇa kṣayi kātra kadarˍthanā (6/33/34)

அனந்தாவபோதத்தில் எவ்வாறு இரட்டை மனோபாவம் உளவாயிற்று என்றும் இந்த இரட்டை மனோபாவம் எவ்வாறு யுகமுடிவு வரை திரும்பத் திரும்ப எண்ணுவதின் மூலம் உறுதிப்பட்டது என்றும் ஆன வஸிஷ்டரின் கேள்விகளுக்கு பகவான் இவ்வாறு பதிலளித்தார்:” உள்ளது அனந்தாவபோதம் என்ற பரப்பிரம்மம் ஒன்று மட்டுமே என்றிருக்கும்பொழுது,இரட்டை மனோபாவமும் பன்மைத்தன்மையும் முற்றிலும் பகுத்தறிவிற்கு பொருந்தாது! ‘ ஒன்று’ என்ற எண்ணம் தோன்றுவது ‘இரண்டு ‘ என்ற கற்பனை எழும்பொழுது தான் ! அது எதிர்மறையாகவும் சரிதானா! அதாவது ஒன்று என்று சொன்னால் இரண்டு உளது என்று பொருள்படுகிறது.

ஆனால் இந்த வேற்றுமைகளும் போதம் தான் என்று பகுத்தறியும்பொழுது அதுவும் போதம் தான்.காரியமும் காரணமும் உண்மையில் வேறு வேறல்ல.அந்த உண்மையை காரிய காரணங்களிலிருத்து பிரித்து பார்க்கவும் முடியாது.

போதத்தின் விஷயமும் போதமே! அதில் உண்டு என்று நம்பப்படுகின்ற உபாதைகளும் வெறும் கற்பனைகளே! கடலிலிருந்து மலையளவு அலைகள் உயர்ந்து வந்தாலும் அவை சமுத்திரத்திலிருந்து வேறல்ல! 

போதம் தான்’ அதும் இதும் இரண்டுக்கு இடையிலுள்ளதும்’ ஆக தோற்றமளிக்கின்றது.அதே போதம் தான் அனந்தாவபோதம், பிரம்மம்,சத்தியம்,கடவுள்,சிவன்,சூன்னியம்,ஏகம்,பரமாத்மா என்ற எல்லாம்.என்றும் எப்பொழுதும் மாசற்றதாக நிலைகொள்ளும் ‘ நான்’  எல்லாவிதமான நாம- ரூப- கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டு, பரமாத்மாவாக,வார்த்தைகளுக்கெல்லாம் புறம்பாக இருக்கின்றது. அது பிரிக்க இயலாதது.

இந்த போதம் தன்னைத்தவிர வேறொன்றை காண ஆரம்பிக்கும் பொழுது அது இரட்டைத்தன்மையை காண்கிறது.அது தானாகவே அஞ்ஞானத்தினால் ஏற்படுகின்ற கற்பனைகளுக்கு ஆடப்படுகிறது.இந்த கற்பனைகளில் மூழ்கும்பொழுது,கற்பனைகள் உண்மை எனும் பொய்மையை கைக்கொள்கிறது.

அதற்கு பின் அஹம்பாவமும் உறுதிப்படுகிறது.அது தானே கர்த்தாவாகவும், நுகர்பவனாகவும் அனுபவங்களை உணருகிறது.இவ்வாறு எதேச்சையாக வந்து சேர்ந்த ஞாபகத் தவறு உறுதிப்பட்டு உண்மை போல் காட்சியளிக்கிறது.

பேயை உருவாக்குவது பேய் இருக்கு என்ற எண்ணம் – நம்பிக்கை தான். இரட்டை மனப்பாங்கும அது போன்று ‘ஒன்றைத்தவிர வேறொன்று  உண்டு’ என்ற கற்பனையினால் உண்டானது  தான். நம்பிக்கையினால்த்தான்! ஒன்றன்றி வேறொன்றில்லை என்பதை உணர்ந்து விட்டால் இரட்டை மனப்போக்கு நொடியில் காணாமல் போய்விடும்.நம்பிக்கை தான் எல்லா வேற்றுமைகளுக்கும் காரணம்.’பலதுண்டு’ என்ற எண்ணம்-நம்பிக்கை இல்லாமலாகிவிட்டால் வேற்றுமைகளும் இல்லாமலாகிவிடும்.மனோ விசாரம், கற்பனைகள்,நம்பிக்கை என்பன தான் எல்லாத் துன்பத்திற்கும் காரணம்.அவைகளை விலக்கிவிடுவது அவ்வளவு கஷ்டமான காரியமொன்றுமில்லை.

” இந்த துன்பம் என்பதை உருவாக்கியது மனோ விசாரங்களும் நம்பிக்கைகளும் தான்.அவை இல்லாமலாகிவிட்டால் துன்பங்களும் முடிவிற்கு வந்து விடும்.இதிலென்ன கஷ்டம்?”

.எல்லா மனோ விருத்திகளும் நம்பிக்கைகளும் துன்பத்தில் முடிகிறது,ஆனால் மனோ விருத்தி இல்லாத நிலை அதாவது மனோ நிவுருத்தி என்ற நிலை ஆனந்தம் தரக்கூடியது.

ஆகவே விவேகம் எனும் அக்னியில் நம்பிக்கை எனும்  நீரை ஆவியாக்கி அவைகளை இல்லாமலாக்குக!

அவ்வாறு பரம சாந்தியை – பூரண அமைதியை அடைந்து பரமானந்தம் என்பது என்ன என்று உணர்வாய்! ஏகமான அவபோதத்தை அறிவாய்! ‘ நான் அரசன்’ என்பதை மறந்திருக்கும்பொழுது தான் அரசனுக்கு துன்பங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது. ‘ தான் அரசன்’ என்று உணர்நதுவிட்டாலோ எல்லாத் துன்பங்களுக்கும் முடிவாயிற்று! மழை ஓய்ந்து சரத்காலமாகும் பொழுது ஆகாயத்தால் மேற்கொண்டு மேகங்களை சேகரிக்க முடியாதது போல்,ஒரு முறை அனந்தாவபோதத்தை சாக்‌ஷாத்கரித்து விட்டால் அவித்யை எனும் மேகங்கள் அங்கு நுழைய முடியாது. 
.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s