யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 418

தினமொரு சுலோகம்

நாள் 418

நாம் எதை உண்மை என்று நம்புகிறோமோ அது உண்மையாகிறது!

ஸர்வ்வஶக்த்ய: ஸ்வரூபத்வாஜ்ஜீவஸ்யாஸ்த்யேகஶக்திதா

அனந்தஶ்சாந்தப்ருʼக்தஶ்ச ஸ்வபா⁴வோ(அ)ஸ்ய ஸ்வபா⁴வத: (6/64/26)

सर्व्वशक्त्य: स्वरूपत्वाज्जीवस्यास्त्येकशक्तिता

अनन्तश्चान्तपृक्तश्च स्वभावोऽस्य स्वभावत: (6/64/26)

sarvvaśaktya: svarūpatvājjīvasyāstyekaśaktitā

anantaścāntapṛktaśca svabhāvo’sya svabhāvata: (6/64/26)

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” அனந்தாவபோதம் சர்வ வல்லமை படைத்தது. அதுவே எல்லாவற்றின் ஆத்மாவல்லவா?ஆனால் ஜீவன் அந்த போதத்திலிருந்து வேறல்ல.இருந்தாலும் அதற்கு சில வரையறைகளும் உண்டு.ஜீவனுக்கு அதன் எண்ணங்களுக்கு ஏற்ற திறைமைகள் உண்டு.ஆகவே தன் மனோ சங்கற்ப்பங்களுக்கு தகுந்தால் போலுள்ள திறைமைகளோ, எல்லைகளில்லாத திறைமைகளோ கைவரிக்க முடியும்.

அனந்தாவபோதம் சுருங்கவோ பெருக்கவோ செய்யாது.ஜீவனுக்கு அது என்ன விரும்புகிறதோ அது கிடைக்கிறது. யோகிகளான பெரியோர்கள் பல விதமான சித்திகள் நேடி இங்கும் எங்கும் வாழ்வதை நாம் காண்கிறோம்.இம்மாதிரி செயல்கள் அங்கேயும் இங்கேயும் அனுபவிப்பதாரல் அந்த அனுபவங்களுக்கும் வேற்றுமைகள் இருப்பதாகவும்,அவை வெவ்வேறு என்றும் தோன்றுகிறது.மிகவும் பிரபலமான கார்த்தவீரியனின் வாழ்வே இதற்கு சான்று.கார்த்தவீரியன் தன் எதிரிகளில் பயத்தை உண்டுபண்ணியது தன் வீட்டில் இருந்து கொண்டே தான்.அதே போல் பகவான் விஷ்ணு தன் ஆஸ்தானத்திலிருந்து போகாமலேயே பூமியில் மனிதனாக அவதரிக்கிறார்.தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஆசாரங்களின் தேவையானதை இந்திரன் தன் வாசஸ்தானத்திலிருந்துகொண்டே பல ஆயிரம் இடங்களில் சாதகர்கள் அர்ப்பணிக்கும் அர்க்கியத்தை ஏற்றுக்கொள்கிறார்.பக்தர்களின் பிரார்த்தனைகளை ஏற்று பகவான் விஷ்ணு ஒரே நேரத்தில் ஆயிரமாயிரம் பக்தர்களின்முன்னால் பிரத்தியக்‌ஷமாகி அனுக்ரகிக்கிறார்.

அது போல்த்தான் காட்டாளன் முதலிய பிறவிகள் அந்த சன்னியாசியின் மனோ சங்கற்பத்தில் உருவானவர்களேயானாலும் ,அவர்களை ருத்ர போதம் சைதன்யமுடையவைக்கியிருந்தது.அவர்கள் முற்றிலும் சுதந்திரகளைப் போல் தங்கள் இடங்களிலும் வீடுகளிலும் வசித்து தங்கள் கர்மங்களை ஆற்றிக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் சிறிது காலம் தங்களது பாகங்களை செவ்வனே நடித்து விட்டு ருத்ர உலகிற்கு திரும்பி விடுகிறார்கள்.இவைகளெல்லாம் அந்த சன்னியாசியின் மனோ சங்கற்பத்தில் உளவானதாகவிருந்தும் அவைகளுக்கு அந்த யோகியிலிருந்து வேறுபட்ட இருப்பு  உள்ளது போல் தோற்றம் அளித்தன.இவ்வாறு தான் அனேகம் உயிரினங்கள் அனந்தாவபோதத்திலிருந்து உதயமாகின்றன.

வெறும் மாயக் காட்சி மட்டுமேயான இந்த உலகில் அவர்கள் பன்மைத்தன்மையை கற்பனை செய்து உருவாக்கிவிட்டு பிறகு ஆத்மாவில் சென்றடைய விழைகின்றனர். அவர்கள் தங்கள் மரண நேரத்தில் மற்ற அவஸ்தைகளையும் அவைகளின் இருப்பையும் குறித்து சிந்திக்கிறார்கள்.அவர்கள் தாங்கள் அந்த அவஸ்தைகளுக்கும் அவைகளின் இருப்பிற்குக் புறம்பானவர்கள் என்று எண்ணுகிறார்கள்.அந்த எண்ணம் பாழ் என்று அவர்களுக்கு தெரிவதில்லை.ஆத்ம சாக்‌ஷாத்காரம் அடைவது வரை பௌதிக சரீரம் எடுத்துள்ளவர்கள் எல்லோரும் எண்ணிக்கையற்ற துன்பங்களுக்காளாகிறார்கள்.இந்த உண்மையை புரிய வைப்பதற்காகத்தான் இந்தக் கதையை சொன்னேன்.இது அந்த சன்னியாசியின் மட்டுமில்லை, எல்லா உயிரினங்களின் கதியும் இது தான்! 

தான் பரமாத்மாவிலிருந்து வேறில்லை என்ற உண்மையை உணராத ஜீவன் தன்னுடைய மனோ மயக்கங்களிலாழ்ந்து, தன் சங்கற்பங்களையும் உண்மை என்றே நம்புகிறது.அப்படி ஒரு கனவிலிருந்து இன்னொன்றிற்கென்று சரீரமும் புத்தியும் இருக்கும் வரை மாறி மாறி போய்க் கொண்டேயிருக்கிறார்கள்.”

இராமன் கேட்டான்:” இந்த கதை எவ்வளவு விசித்திரம்! தாங்கள் கூறினீர்கள் , ‘ நாம் எதையெல்லாம் உண்மை என்று நம்புகிறோமோ அவையெல்லாம் உண்ம, உண்மை என்று அனுபவப்படுகின்றது’ என்று சொன்னீர்கள்.இருந்தாலும் தாங்கள் இப்படிப்பட்ட சன்னியாசி எங்கேயாவது இருக்கிறாரா என்று சொல்ல முடியுமா?’

வஸிஷ்டர் சொன்னார்:” இதைக் குறித்து நான் சற்றே சிந்திக்க வேண்டும். நாளை இதற்கு பதில் கூறுகிறேன்’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s