யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 438

தினமொரு சுலோகம்

நாள் 438

அக்னி எனும் சூரியனும்  குளிர்மையான சந்திரனும் உடலிலேயே உள்ளன !

पीत्वामृत्योपमं शीतं प्राण: सोममुखागमे

अभ्रगमात्पूरयति शरीरं पीनतां गत: (6/81/94)

pītvāmṛtyopamaṃ śītaṃ prāṇa: somamukhāgame

abhragamātpūrayati śarīraṃ pīnatāṃ gata: (6/81/94)

பீத்வாம்ருʼத்யோபமம்ʼ ஶீதம்ʼ ப்ராண: ஸோமமுகா²க³மே

அப்⁴ரக³மாத்பூரயதி ஶரீரம்ʼ பீனதாம்ʼ க³த: (6/81/94)

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” சரீரத்தில் காரிய- காரண தொடர்போடு அக்னியும் சந்திரனும் நிலை கொள்கின்றன. அந்த பந்தம் விதைக்கும் மரத்திற்கும் இடையிலுள்ளது போல்த்தான்.ஒன்று மற்றதிற்கு ஜீவன் தருகிறது.இல்லையென்றால் இருளிற்கும். வெளிச்சத்திற்கும் இடையிலுள்ள பந்தம் போல்த் தான் அது. ஒன்று மற்றதை இல்லாமலாக்கி விடுகிறது.இதையெல்லாம் பகுத்தறிவின் உதவியுடன் விளக்க முடிவதால்,, ஆசைகளின் உந்துதல் இல்லாததினால்,இம்மாதிரியான காரிய- காரண பந்தம்  எல்லாம் அறிவீனம் சொல்பவர்களையெல்லாம் உடனே தவிர்க்கவும . ஏனென்றால் இது நமது நேரனுபவமல்லவா?

” குளிர்மையான சந்திரனனின்அமுதை, அக்னி பானம் செய்கிறது.தேகத்தை பிராணனைக்கொண்டு நிரப்புகிறது.” 

அக்னி இறந்து சந்திரனாகிறது.பகல் முடிவிற்கு வரும்பொழுது இரவு உதயமாகிறது.அக்னியினுடையதும் சந்திரனுடையதுமான சேர்க்கையில்,இருளினுடையதும் வெளிச்சத்தினுடையதுமான ஒருமிப்பில்,அல்லது தின ராத்திரிகளின் சந்திப்பில் சத்தியம் சாக்‌ஷாத்கரிக்கப்படுகிறது. அது ஞானிகளுக்கு கூட  உணர மிகவும் கஷ்டமான விஷயம். ஒரு நாள் என்பது இரவும் பகலும் சேர்ந்ததல்லவா? அதே போல் ஜீவன் என்பது போதமும் ஜடமும் சேர்ந்தது தான்.அக்னியும்  சூரியனும் போதத்தையும், சந்திரன் இருளை அல்லது ஜடத்தையும் குறிக்கிறது.சூரியன் ஆகாயத்தில் உதயமாகும் பொழுது  இருள் காணாமல் போய்விடுகிறது.அது போல் போதம் விழித்தெழும் பொழுது அதன் ஒளியில்  அஞ்ஞானமெனும் இருளும் காணாமல் போய்விடுகிறது.அத்துடன் தோற்றம் தோற்றமின்மை என்பதும் இல்லாமலாகிவிடும்.சந்திரனை- அஞ்ஞானமெனும் இருளை அப்படியே உணர்ந்து விட்டால் சத்திய சாக்‌ஷாத்காரமாயிற்று.

போதத்தின் பிரகாசம் தான் சரீரத்தின் ஜடத்தன்மையையும் நமக்கு உணர்த்துகின்றது.போதம் அசைவற்றதும் ஒன்றன்றி வேறில்லாததுமாகையால் அதை காண முடியாது.ஆனால் தன் பிரதிபலிப்பான சரீரம் வழியாக தானாகவே சாக்‌ஷாத்காரத்தை அடைய முடியும்.போதம் தானே விஷயமாக மாறும் பொழுது உலகை சிருஷ்டிக்கின்றது.அந்த விஷயமாற்றம் இல்லாமலாவது தான் முக்தி.

பிராணன் அக்னி! அது உஷ்ணம்! அபானன் குளிர்மையேறின சந்திரன்! ஒளியும் நிழலும் போல் இரண்டும் நம் சரீரத்தில் குடிகொள்கின்றன .போத ஒளியும் சந்திரனின் குளிர்மையும் சேரும்பொழுது நமக்கு அனுபவங்கள் உண்டாகின்றன.அவை தான் சிருஷ்டியின் ஆரம்பம் முதல் இருக்கின்ற சூரிய- சந்திரர்கள்.அதே சூரிய சந்திரர்கள் சரீரத்திலும் உள்ளன.

இராமா,சூரியன் சந்திரனை தன்னில் ஆவாஹித்த அந்த ஒரு நிலையில் இருப்பாயாக! சந்திரன் இதயத்தில் குடி கொண்டிருக்கும் சூரியனில் கலந்து விட்ட நிலையை உனதாக்கிக் கொள்.சந்திரன் என்ற குறியீடு சூரியனின் பிரதிபலிப்பு தான் என்ற அறிவை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொள் இராமா! வெளியே உள்ள எல்லாக் காட்சிகளும் வீண் மாயை தான் என்பதை உணர்வாய் இராமா! 

பி.கு..யோகசாஸ்திரத்தில் உள் தொண்டையிலிருந்து அமுது ஒழுகி ஜடராக்னியால் அடி வயிற்றில் சென்றடைகின்றது.அங்கு அது ஜீரணிக்கப்படுகிறது.குளிர்மையான சந்திரன் தான் அக்னிக்கு காரணம்.இந்த அமுது அழியாமல் இருக்க ‘ விபரீத காரணி’ வழியை யோகி பயன்படுத்துகிறார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s