யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 463

தினமொரு சுலோகம்

நாள் 463

முக்தனுக்கு மனம் கிடையாது!

வாஸனாத்மஸு யாதேஷு மலேஷு விமலம்ʼ ஸகே²

யத்³வக்தி கு³ருரந்தஸ்த²த்³விஶதீஷூர்யதா² விஸே (6/101/14)

वासनात्मसु यातेषु मलेषु विमलं सखे

यद्वक्ति गुरुरन्तस्थद्विशतीषूर्यथा विसे (6/101/14)

vAsanAtmasu yAteSu maleSu vimalaM sakhe

yadvakti gururantasthadvizatISUryathA vise (6/101/14)

கும்பன் சொன்னான்:” தங்கள் உள்ளம் ஆன்மீகமாக விழித்தெழுந்துவிட்டது.அறியவேண்டியதெல்லாம் அறிந்து கொண்டு விட்டீர்கள்.பார்க்க வேண்டியதையெல்லாம் பார்த்து விட்டீர்கள்”.

ஶிகித்வஜன் சொன்னான்:’ உண்மை தான், முனிகுமாரன்! தங்கள் கருணையினால் நான் பரமபதம் அடைந்து விட்டேன். ஏன் இந்த பரமமான அறிவு  இதுவரை எனக்கு பிடி கிடைக்காமலே இருந்து வந்தது? ”

கும்பன் சொன்னான்:” மனம் முற்றிலும் அமைதியடைந்தால்மட்னுமே,எல்லா ஆசைகளும் முடிவிற்கு வந்தால் மட்டுமே, புலன்கள் அவையின் நிற வித்தியாசங்களை துறந்தால் மட்டுமே, குரு வசனங்கள் ஒருவனில் சரியான விதத்தில் பதிவாகும்.ஆனால் அதற்கு முன் செய்த முயற்சிகள் வீண் என்று சொல்வதற்கில்லை.அந்த முயற்சிகள் இன்று தான் பக்குவமடைந்தது என்று புரிந்து கொண்டால் போதும்.தங்களின் சரீரங்களில்( காரண சரீரம், பௌதிக சரீரம்) இருந்த அழுக்கெல்லாம் இல்லாமலாகி விட்டது.

” அப்படி ஒருவன் எல்லா விதமான மனோபாதைகளிலிருந்தும் விடுதலை பெற்று , தூயவனாகும் பொழுது, குருவின் உபதேசங்கள் அவனுடைய உள்ளுணர்விலுள்ள சைதன்னியத்தில் சென்றடைவது ,தாமரை மலர்கள் கொத்தில் ஒரு அம்பு சென்று சேருவது போல் எளிதான விஷயம்.” .

தாங்கள் அந்த மாதிரியான மாசற்ற ஒரு நிலையை அடைந்து விட்டீர்கள்.என் பேச்சுக்கள் தங்கள் போதத்தை தட்டி எழுப்பதுவதற்கான காரணம்.தங்களில் அஞ்ஞானம் முற்றிலும் முடிவிற்கு வந்து விட்டது.நம் சத் சங்கம் தங்களிலிருந்து கர்ம வாசனைகளை முற்றிலும் இல்லாமலாக்கி விட்டது.

இன்று காலை வரை தாங்கள் ‘ நான்’, ‘ நீ’  என்பன போன்ற தவறான எண்ணங்களுக்கு அடிமையாயிருந்தீர்கள். என் வார்த்தைகளை கேட்டு தாங்கள் ‘ நிர்மனம்’ ( மனமில்லாத நிலை) என்ற நிலையை அடைந்து விட்டீர்கள்.மனம் இருக்கும் வரை தான் அஞ்ஞானத்திற்கு இடமுள்ளது. தாங்கள் முக்தி பதத்தை அடைந்து விட்டீர்கள்.இந்த எல்லைகளில்லாத போததலத்தில் எந்த விதமான கவலைகளுமில்லாமல்,எதையும் நேட வேண்டும் என்ற எண்ணமில்லாமல், அது போன்ற முயற்சிகளையெல்லாம் கைவிட்டு, அமைதியாக இருப்பஈர்களாக! ”

ஶிகித்வஜன் கேட்டான் :” மகான்,முக்தனிலும் மனமிருக்குமா? அதில்லையென்றால் அவர் எப்படி லௌகீக வாழ்வில் ஈடுபட முடியும்? ”

கும்பன் சொன்னான்:” உண்மையில் முக்தனுக்கு மனம் கிடையாது.மனம் என்றால் என்ன? அது வெறும் உபாதிகளின் சேகரம் தான்.அது பல விதமான வரையறைகள் தான். முக்தனுக்கு பிறப்பு- இறப்பிற்கு காரணமான மனம் கிடையாது.முக்தர்களான மகா முனிகளின் நிலையும் அது தான்.உபாதிகளேதுமில்லாத மனம் அவர்களது! ஆகவே அவர்களுக்கு மறு பிறவி கிடையாது. அது மனமேயில்லாத தூய சத் தான் அது! 

முக்தன் வாழ்வது அந்த சத் நிலையில் தான்.மனதில் அல்ல! அஞ்ஞானியின் ஜடமான மனம் தான் மனம்! ஞானியினுடையது சத் ! ஞானி சத் திலும் அஞ்ஞானி மனதிலும் வாழ்கிறார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s