யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 466

தினமொரு சுலோகம்

நாள் 466

தூய சத்வம் அழிய காலம் தேவை! 

தே³ஹே யஸ்மிம்ʼஸ்து நோ சித்தம்ʼ நாபி ஸத்வம்ʼ ச வித்³யதே

ஸ தாபே ஹிமவத்³ராம பஞ்சத்வேன விலீயதே (6/103/33)

देहे यस्मिंस्तु नो चित्तं नापि सत्वं च विद्यते

स तापे हिमवद्राम पञ्चत्वेन विलीयते (6/103/33)

dehe yasmiMstu no cittaM nApi satvaM ca vidyate

sa tApe himavadrAma paJcatvena vilIyate (6/103/33)
வஸிஷ்டர் தொடர்ந்து சொன்னார்:” சத்வம் சமன் நிலையிலிருக்கும் பொழுது, உடல் சம்பந்தமானதோ, மனம் சம்பந்தமானதோ எந்த பிரச்சினையும் அனுபவங்களாக மாறுவதில்லை.இந்த சத்வத்தை காலப்போக்கில்த் தான் துறக்க முடியும். உடனடியாக பூரண விடுதலை என்பது நடவாத விஷயம்.

” மனமோ, தேகத்தில் சத்வமோ சிறிது கூட மீதமில்லாமலான பிறகு தான்,சூட்டில் பனிக்கட்டி உருகுவது போல்,சரீரமும் அதன் மூலப்பொருட்களான பஞ்ச பூதங்களில் லயிக்கும்.”

ஶிகித்வஜனின் தேகம் மனதிலிருந்து விடுதலை அடைந்து விட்டிருந்தாலும், அவரில் சத்வத்தின் ஒரு அணு மட்டும் மீதியிருந்தது.ஆகவே சரீரம் மூலப்பொருட்களான பஞ்ச பூதங்களில் இன்னும் லயிக்கவில்லை.

இதை அறிந்த சூடாலா இவ்வாறு தீருமானித்தாள்: ‘ சர்வ வியாபியான தூய போதத்தில் அவருக்கு சரீர உணர்வை விழித்தெழ செய்ய வேண்டும்.எப்படியிருந்தாலும் அவர் சிறிது காலம் கழித்து விழித்தெழுவார் என்பது திண்ணம்.பிறகு நான் எதற்கு அதுவரை தனியே இருக்க வேண்டும்? ‘

சூடாலா தன் உடலை விட்டு ஶிகித்வஜனின் தூய போதத்தில் நுழைந்தாள்.அந்த மனதில் ஒரு சிறிது அசைவை உண்டு பண்ணி விட்டு உடனேயே வெளியேறி தன் உடலிற்கு திரும்பினாள்.பிறகு மீண்டும் கும்பன் என்ற இளம் முனிகுமாரனின் உருவத்திற்கு மாறவும் செய்தாள்.

கும்பன் இனிமையான குரலில் சாம கானங்களை இசைக்க ஆரம்பித்தாள்.இதை கேட்ட ஶிகித்வஜன் தியானத்திலிருந்து விழத்தெழுந்தான்.இளம் முனியான கும்பனை கண்ட அவன் மிகவும் மகிழ்ச்சியோடு சொன்னான்:’ பகவன், என்னே சொல்ல! தங்கள் அருளால் தான் மீண்டும் தங்களின் போதத்தில் உருவெடுத்துள்ளேன்.என்னை ஆசீர்வதிப்பதற்கென்றே தாங்கள் மீண்டும் வந்துள்ளீர்கள்.!’

கும்பன் சொன்னான்:’ நான் தங்களை விட்டு போனேனென்றாலும் என் இதயம் தங்களுடனேயே தான் இருத்தது.எனக்கு சுவர்க்கத்திற்கு போவதற்கெல்லாம் விருப்பமில்லை. தங்களின் அருகாமை தான் அதற்கு உதவ முடியும்! அதுவே எல்லாவற்றையும்  விட  மேல்!தங்களையன்றி எனக்கு நம்பிக்கைக்கு உகந்த சீடனோ, பந்தமோ, தோழனோ இல்லை.’

ஶிகித்வஜன் சொன்னான்:’ நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும், தங்களைப் போன்ற பூரண முக்தனும்,முற்றிலும் போதமுணர்ந்தவனும் ஆன ஒருவர் எனது  அருகாமையை, தோழமையைத் விரும்புவதற்கு?  தாங்கள் என்னுடன் இந்த காட்டிலேயே தங்கி விடுங்களேன்?’
கும்பன் கேட்டான்:’ சொல்லுங்கள், தாங்கள் பரமமான உன்னத நிலையில் சிறிது நேரமேனும் அமைதியை அனுபவத்தீர்களா? ‘ இது வேறு’, ‘ இது  துயரம்’ போன்ற எண்ணங்கள் முடிவிற்கு வந்ததா? சுகானுபவங்களுக்கான ஆசை தங்களிலிருந்து ஒழிந்து விட்டதா?’

ஶிகித்வஜன் பதிலிறுத்தார்:’ தங்கள் ஆசியால் சம்சாரக் கடலின் மறுகரையை நான் அடைந்து விட்டேன்.நேடவேண்டியதையெல்லாம் நேடி விட்டேன்.எல்லாமே ஆத்மா தான்; ஆத்மாவையன்றி வேறொன்றில்லை என்று உணர்ந்து விட்டேன்.அறிந்ததும் அறியாததும் சாக்‌ஷாத்கரித்ததும் துறந்ததும் துறக்க வேண்டியுள்ளதும் எல்லாமெல்லாமே , ஏன் தூய போதமான சத்வம் கூட ஆத்மா தான் என்று உணர்ந்து விட்டேன்.எல்லையற்ற ஆகாயம் போல் எந்த வித உபாதியும் இல்லாமல் நான் நிலை கொள்கின்றேன் இப்பொழுது!’.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s