யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 499

தினமொரு சுலோகம்

நாள் 499
அஹம் போதத்தில் லயித்திருக்கிறது

ப்³ரஹ்மண்யஶேஷஶக்தித்வாத³சித்வம்ʼ வித்³யதே ததா²

அக்ஷுப்³தே⁴ விமலே தோயே பா⁴விபே²னலவோ யதா² (6.2/10/3)

ब्रह्मण्यशेषशक्तित्वादचित्वं विद्यते तथा

अक्षुब्धे विमले तोये भाविफेनलवो यथा (6.2/10/3)

brahmaṇyaśeṣaśaktitvādacitvaṃ vidyate tathā

akṣubdhe vimale toye bhāviphenalavo yathā (6.2/10/3)

புஶுண்டன் தொடர்ந்து சொன்னார்:” ஓ! கந்தர்வா! தாங்கள் இந்த காணப்படும் உலகக் காட்சிகள் அனந்தாவபோதத்தின் வெளிப்பாடு தான் என்ற எண்ணத்தை கை விட்டாலும்!  பிறகு என்றென்றும் தூய்மையானதாக இருக்கும் ஆத்மாவில் மகிழ்ந்து இருப்பீர்களாக!போதத்தில் மந்தம்( சோம்பல்- அசைவின்மை) தானாகவே உண்டாவது தான்.ஆனால் அது போதத்திலிருந்து வேறாகக் தோன்றுகிறது.அக்னியை கொழுந்து விட்டு எரியச்செய்கின்ற காற்றினால் அதை அழிக்கவும் முடியும்.அது போல்த் தான் போதம் அவபோதத்தையும் பந்தத்தையும் ஒரே நேரத்தில் ஆதரிக்கிறது.

ஆகவே தங்களுடைய தெளிந்த மேதா சக்தியால் அல்லது போதத்தினால் அஹம் என்று ஒன்று கிடையாது  என்ற பகுத்தறிவை அடைந்து  மீதமானது என்ன இருக்கிறதோ அதில் ஆனந்தம் காணுங்கள்.அப்பொழுது போதம் பரமாவபோதத்தில் லயித்து விடும்.அங்கு போதத்திற்கு முக்கியத்துவம் கிடையாது.அது தான் மற்ற எதுமில்லாத பரப்பிரம்மம். விசுவம் முழுவதும் நிறைந்து நிற்கின்ற எல்லைகளில்லாத பிரிக்க முடியாத போதமது! அதை சாக்‌ஷாத்கரித்து பிறகு விருப்பப் படி செயலாற்றவும்.

அஞ்ஞானத்தினால் பா்வை மூடியிருக்கும் பொழுது மட்டுமே, ஒருவன் வேற்றுமைகள் உள்ள உலகை காண்கிறான் .இந்த காட்சிகளெல்லாம் கண்கள் வியாதியால் பாதிக்கப்பட்டவன் ஆகாயத்தில் மரங்களை காண்பது போல்த் தான்.நீரில் பிரதிபலிக்கின்ற அக்னி எப்படி நிஜமான அக்னியிலிருந்து வேறில்லையோ, அது போல்  வெறும் ஜடப்பொருளான விசுவம் அனந்தாவபோதத்திலிருந்து. வேறில்லை. அது போல் அவித்யையும் வித்யையும் வித்தியாசங்கள் இல்லாதவை தான்.

” பிரம்மத்தின் வாய்ப்புகள் எண்ணிக்கையற்றவை என்பதால்,மந்தம், அல்லது போதமின்மையும் போதத்திலேயே வெளிப்படுகிறது! மிகவும் அமைதியாக காணப்படும் நீர்பரப்பின் மேல் தளத்தில் அலைகளும் சுழல்களும் உருவாக வாய்ப்புள்ளது போல்,பிரம்மத்தில் மந்தம்( அசைவின்மை-அறிவீனம்) ஒரு சம்பவிக்கக் கூடிய ஒன்றாக, அதில் லயித்து விட்ட சக்தியாக இருந்து கொண்டேயிருக்கிறது.”

நீரிற்கு அலைகளை உருவாக்க எந்த உந்துதலும் வேண்டியதில்லை.அதே போல் பிரம்மத்திற்கு விசுவ சிருஷ்டிக்கு எந்த ஒரு காரணமும் தேவையில்லை.சிருஷ்டி என்ற நிகழ்விற்கு போதுமான காரணம் ஏதுமில்லாததாக, சிருஷ்டி நிகழ்ந்துள்ளது என்று தீருமானிப்பதும் எளிதில்லை! விசுவம் பாலைவனத்து கானல் நீர் போல் ஒரு பொய்மை தான்.

பிரம்மம் மட்டும் இருந்து கொண்டிருக்கிறது.அது பரமமான அமைதி! உபாதிகளேதுமில்லாதுமில்லாத அது! பிரம்மம் எதையும் சிருஷ்டிபஃபதில்லை!

கந்தர்வா, தாங்கள்  பிரிக்க முடியாத, பங்கு போட முடியாத,ஆகாயத்திற்கு ஈடான,ஏக சொரூபம் ! .தாங்கள் எல்லாம் அறிந்தவர்! அது தங்களுக்கு தெரிந்தாலும் இல்லையென்றாலும் சந்தேகங்களையெல்லாம் ஒதுக்கி விடுங்கள்.தாங்கள் பிறக்கவில்லை; தங்களுக்கு முடிவுமில்லை! இதை தெரிந்து கொள்ளும் பொழுது எல்லா அவித்யையும் முட்டாள்த்தனமும் முடிவிற்கு வந்து விடும்.அத்துடன் உலகம் எனும் மாயக் காட்சிக்கும் முடிவாகிவிடும்.

எங்கும் நிறைந்திருக்கின்ற பிரம்மம் இருக்குமிடத்திலெல்லாம், அதாவது எல்லாயிடத்திலும்,இந்த விசுவம் எனும் காட்சியும் இருந்து கொண்டேயிருக்கும்.புற்கொடியில், கற்களில், மரத்தில்,உயிருள்ளவைகளில்,எங்கும் ஒரே பரப்பிரம்மம் இருக்கிறது. அதை விவரிக்க வார்த்தைகளில்லை.அதை வரையறுத்து கூற முடியாது! அதில் ‘ வேறொன்று’ இல்லை.ஆகவே அதை எதோடும் ஒப்பிட முடியாது! அதனால் பிரம்மத்தின் சுபாவம் இது தான் என்று கூட கூற முடியாது.அப்படி கூறுவது அறிவீனம்!

அஹம்பாவம் அஸ்தமிக்கும் பொழுது  எது அனுபவப்படுகின்றதோ அது வே தான் அஹம் இருக்கும் பொழுதும் அஹத்தை அறிவதற்காக விசாரம் செய்பவனிலும் அனுபவப்படுகின்றது.போதத்தில் அஹம் லயித்து விட்டிருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s