யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 520

தினமொரு சுலோகம்

நாள் 520

மெய்யும் கிடையாது, பொய்யும் கிடையாது!

வாஸனைவேஹ புருஷ: ப்ரேக்ஷிதா ஸா ந வித்³யதே

தாம்ʼ ச ந ப்ரேக்ஷதே கஶ்சித்தத: ஸம்ʼஸார ஆக³த: (6.2/31/16)

वासनैवेह पुरुष: प्रेक्षिता सा न विद्यते

तां च न प्रेक्षते कश्चित्तत: संसार आगत: (6.2/31/16)

வஸிஷ்டர் தொடர்ந்து சொன்னார்:” அனந்தாவபோதம், தானே , எல்லைகளில்லாததென்றும், வாசனைகளற்றதென்றும் எண்ணுவது தான் எல்லோரும் அனுபவப்படுவது. ஆனால் லௌகீக- பௌதிக விஷயங்கள் அதன் முன்னால் வரும்பொழுது அது, அவைகளைக் குறித்து திரும்பத் திரும்ப மனதில் அசை போடும் பொழுது, அவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்பொழுது, போதம் அந்த விஷயங்களுக்கு உருவம் நல்குகிறது.கனவில் காணும் காட்சிகள் உள்ளிலேயே நிகழ்ந்தாலும் கூட அவைக்கு ஒரு தனித்துவமும் உருவமும் இருப்பதாகவும் தோன்றுகிறதல்லவா? கனவில் கிடைக்கும் பொருட்கள் இழக்கும் பொழுது உண்மையில் இழப்பு எதுவும் நிகழ்வதில்லை. அதே போல் ‘உலகமும்’, ‘நானும்’ இல்லாமலாகி விட்டாலும் ஒரு இழப்பும் இல்லை.உலகையும், அஹங்காரத்தையும்  இகழ்ந்து பேசுவதில் எந்த விதமான பொருளும் இல்லை.வெறும் பிரமையானாலும்- கற்பனைகளை யாராவது புகழவோ, இகழவோ செய்வார்களா? விசார மார்க்கம் ஒன்று தான் உகந்த வழி. விசாரணையின் முடிவில் என்ன மீதமிருக்கின்றதோ அது மட்டுமே சத்தியம்.அந்த சத்தியத்தில் உறுதியாக நிலை கொள்வாய், இராமா! இந்த உலகம் எனும் காட்சி வெறும் கற்பனையே!விசாரித்து அறியும் பொழுது இல்லாமலாகிவிடுகின்ற மனோ விருத்திகள் மட்டுமே அவை! மனோ சங்கற்பங்கள் இல்லாமலாகி விட்டால் இருப்பது பிரம்மம் மட்டுமே! உலகம் எனும் பொருளற்ற கற்பனையை நம்புவது மலடியின் புத்திரனை நம்பி வாழ்வது போல் அர்த்தமற்றது  தான்!

வித்தியாசங்களுடன் தனி மனித்த்தின் தன்மை என்பதே வாசனை தான்; மனோபாதிகள் தான்.அவை விசாரமார்க்கத்தின் முடிவில் காணாமல் போய்விடும்.ஆனால் அவித்யையின் தாக்கத்தால் சரியான பார்வை இல்லாமலிருக்கும் தருணத்தில் உலகம் எனும் கற்பனை உயர்ந்து  வருகிறது.”

உடல்கள் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உருவாக்கப் படுகிறது.அது வெறும் உயிரற்ற ஜடம். அதில் தனதான சைதன்னியம் கிடையாது.மனம், புத்தி, மற்றும் அஹங்காரம் எல்லாமே ஜடம் தான்! எல்லாமே பஞ்ச பூதங்களின் கலவை தான்.மனோ- புத்தி- அஹங்காரங்களின் ஜடத்தன்மையையும் தவிர்த்து விட்டால் மீதமிருப்பது எப்பொழுதும் தூயதாக இருக்கும் போதம் விழித்தெழுந்த அனந்தாவபோதம்.அது தான் முக்தி நிலை!

விஷயம் அதை அனுபவப்பனில் கரைந்து விடுகிறது.அவைகளுக்கு தனியான இருப்பு கிடையாது. உபாதிகளால் பாதிக்கப் பட்ட நிலை என்பதும் உண்மையில்லை.விசாரித்தறியும் பொழுது இல்லாமலாவது தான் அது. அம்மாதிரி கற்பனைகளை என்றைக்குமே வராதபடி துறப்பது தான் மிகச் சிறந்தது.சாதகனும் கிடையாது; சாதகத்திற்கான விஷயமும் கிடையாது.மெய்யும் கிடையாது, பொய்யும் கிடையாது! பூரண அமைதி மட்டும் தான் உண்மை!.

அப்படிப்பட்ட அமைதியில் ஆனந்தம் அனுபவிப்பவர்கள் கர்மங்கள் செய்வதில் மூழ்கியிருந்தாலும்  இல்லையென்றாலும்,விருப்பு- வெறுப்புகளுக்கும் அப்பாற்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.மனம் , அனந்தாவபோதத்தை வரையறைகளுக்குள்ள நிற்கவைக்கும் எல்லாவிதமான சிந்தைகளுக்கும் புறம்பாக செயல் படும்பொழுது, போதம் விழித்தெழுந்த முனிவர் எப்படி இரட்டையின் நிலை கொள்ள முடியும்? ராகமாக, துவேஷமோ இல்லாமல் ஒருமுனைப்பட்ட மனதுடன் அஅமைதியாகவும் இருப்பர் அந்த முனிவர்.
.
நுகர்பவனும் போக விஷயம் உயிர்த்தெழும் பொழுது அது தன்னிலிருந்து வேறு என்ற உணர்வு அனுபவமாகின்றது.ஆனால் விஷயியும் விஷயமும், கனவும் கனவு காண்பவனும் போல், வேறுபடுத்திப் பார்க்க இயலாமல் உள்ளவை. இரண்டு பாத்திரங்களில் வைத்துள்ள பால் போல்த் தான் அது.எல்லைகளற்ற ஆத்மா எல்லா கற்பனைகளுக்கும் புறம்பானது.கற்பனைகள் தான் விஷயங்களை உளவாக்கின்றது.ஆகவே கற்பனைகள் இஇல்லாமலானால் விஷயங்களும் இல்லாமலாகிவிடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s