யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 587

Yogavasishtam @Maharamayanam 587

தினமொரு சுலோகம்

நாள் 587

நான் ( வாயு உருவில்)எல்லாம். எல்லாமாக இருந்தேன்

ஸர்வ்வபாதாள பாதே³ன பூ⁴தலோத³ரதா⁴ரிணா
க²மூர்த்⁴னாபி ததா³ ராம ந த்யக்தாத² பராணுதா (6.2/91/50)
सर्व्वपाताळ पादेन भूतलोदरधारिणा
खमूर्ध्नापि तदा राम न त्यक्ताथ पराणुता (6.2/91/50)
sarvvapaataal’a paadena bhootalodaradhaarinaa
khamoordhnaapi tadaa raama na tyaktaatha paraanutaa (6.2/91/50)

வஸிஷ்டர் சொன்னார் :” பிறகு நான் வாயு தாரணயில், தானே வாயுவாகி அதில் தியானித்து, வாயு தாதுவானேன்; மாறினேன். புற்கொடிகளையும் ,இலைகளையும்,செடிகொடிகளையும்,வைக்கோல் துரும்பையும் நடனமாடவைத்தது நான் தான்.ஊஞ்சலாடுகின்ற இளம் தென்றலாக நான் இளம் பெண்கள் விரும்புவனானேன். ஆனால் என்னுள்ளிருந்த உஷ்ணம் அனல் காற்றாகவும்,புயலாகவும் அச்சமுளவாக்கிகொண்டிருந்தது.

நந்தவனங்களிலும் பூங்காக்களிலும் நான் நறுமணம் தாங்கி உலா வந்து கொண்டிருந்தேன்.ஆனால் நரகங்களில் நெருப்பு பொறிகளை விதறிக் கொண்டிருந்தேன்.

என் வேகத்தைக் கண்ட ஜனங்கள் நானும் மனதும் சகோதரர்களோ என்று சந்தேகித்தனர்.கங்கையின் ஓட்டத்திற்கேற்றாற்போல் நான் ஓடிக்கொண்டிருந்தேன். மற்றுள்ளவர்களின் கஷ்டங்களை நீக்குவதிலும் அவர்களுக்கு ஆறுதல் தருவதிலும் நான் மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டேன்; அதில் எனக்கு மிகுந்த ஆர்வமும் இருந்தது.

நான் ஒலி அலைகளை தாங்கி பயணித்தேன்.ஆகவே என்னை ஆகாயத்தின் உத்தம நண்பனாக காண்கிறார்கள். எல்லா உயிரினங்களின் எல்லா முக்கிய அவயவங்களிலும் நான் உள்ளேன்.அக்னியின் இரகசியத்தைத் நானறிவேன்.நான் அக்னியின் நண்பன்.
பிராண வாயு( உயிர் மூச்சு) வாக இருந்து எல்லா உயிரினங்களின் தேகங்களையும் வாழ வைப்பது நான் தான.ஆகவே நான் அவர்களின் நண்பன்.அதே நேரத்தில் நான் அவர்களின் சத்ருவும் ( எதிரியும்) தான்.நான் எல்லாவருக்கும் முன்னும் இருந்து கொண்டிருக்கிறேன் என்றாலும் யாராலும் என்னை காண முடியாது.விசுவ பிரளய காலத்தில் பெரிய பெரிய மலைகளைக் கூட என்னால் தூக்கி எறிய முடியும்.

வாயு என்ற என்னால் பொருட்களை இணைக்க முடியும்; காயவைக்க முடியும்; தூக்கிப்பிடித்து நிறுத்த முடியும்; அசைவுகளை உளவாக்க முடியும்; மணங்களை பரவ வைக்க முடியும்.அது மட்டுமல்ல குளிர்மையை எல்லா இடங்களிலும் பரவ வைக்க முடியும். இப்படி ஆறு விதமான செயல்களை நான் நிகழ்த்துகிறேன்.தேகங்களை உருவாக்குவதும் அழிப்பதும் என் வேலையின் பகுதி தான்.வாயு தாதுக்களின் வழியாக ஒவ்வொரு பொருளின் ஒவ்வொரு அணுவின் வழியாக விசுவத்தை முழுவதும் நான் தரிசிக்கிறேன்.அந்த விசுவங்களின் உள்ளில் நான் நுண்ணிய அணுக்களையும் அந்த அணுக்களுக்குள் விசுவங்களையும் தரிசிக்கிறேன்.

ஆனால் ‘ அவை’ எதுவுமே உண்மையில் இருப்பவை இல்லை.எல்லாமே ஆகாயத்தின் ‘ வெறுமையில்’ அல்லது பிரம்மாண்டத்தின் சூன்னியத்தில் உளவான கற்பனைக் காட்சிகள் தான். அங்கெல்லாம் தேவதைகளும், கிரகங்களும் மலைகளும், சமுத்திரங்களும், ஜனன- ஜரா- மரணங்களும் மற்ற சங்கற்ப சிருஷ்டிகளுமுண்டு.என் இதயத்தில் முழுதும் திருப்தி ஏற்படும் வரை நான் சுற்றி திரிந்தேன்.என் தேகத்தில் எண்ணிக்கையிலடங்காத உயிரினங்களும்,யக்‌ஷ கின்னர கந்தர்வர்களும் ஈக்களும் புழு பூச்சிகளும், குடியிருக்கின்றன. என்னால்த் தான் அவர்களுக்கு மூர்த்தி உருவங்களுண்டாயின. என் தொடுதலில் அவர்களுக்கு மகிழ்ச்சியுண்டாகிறது. இருந்தாலும் அவர்களால் என்னை பார்க்க இயலுவதில்லை.

பாதாளம் எனது பாதங்களாயிருந்தாலும்பூமி என் உதரமாக இருந்தாலும்,ஆகாயம் என் தலையாக விருந்தாலும்,நான் என் நுண்ணிய அணு உருவத்தை கை விடவில்லை.

நான்எல்லா திக்குகளிலும் பரவி எல்லா காலங்களிலும் எல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன். நான் எல்லாவற்றின் ஆத்மா!நான் எல்லாமெல்லாம் தான்!
இருந்தாலும் மாசற்ற சூன்னியம் தான்! நான் எதுவாகவோ இருந்து அனுபவங்களை உணர்ந்தேன்.நான் ஒன்றுமாகாமலே எல்லாவற்றையும் அனுபவித்தேன். உருவத்தோடும் உருவமில்லா நிலை கொண்டேன்.இந்த நிலைகளையெல்லாம் குறித்துள்ள அவபோதத்தோடும் அப்படியில்லாமலும் இருந்தேன்.நான் அனுபவித்தது போல் அனேகம் விசுவங்கள் உள்ளன. மனிதன் கனவில் எண்ணிக்கையற்ற பொருட்களை காணுகிறான். ஒவ்வொரு அணுவிலும் பிரம்மாண்டத்தை கண்டேன். அவைகளில் நிறைந்திருந்த அணுக்களையும் கண்டேன்.

நான் தான் அந்த விசுவங்களாக மாறியிருந்தேன். அவைகளின் ஆத்மாவாக அவைகளில் நிறைந்திருந்ததும் நான் தான்.

இருந்தாலும் அவைகளை நான் முற்றிலும் மூடியிருநீதேன் என்று. சொல்ல முடியாது.
இவையெல்லாமே வெறும் வார்த்தை ஜாலங்கள் தான்.’ நெருப்பு சுடும’ என்ற சொற்றொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகள் இருந்தாலும் பொருள் ஒன்றே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s