யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 608

Yogavasishtam @ Maharamayanam 608

தினமொரு சுலோகம்

நாள் 608

போரினால் உளவான கெடுதியும் நன்மையும்!

ப்ரவிஷ்டா யாசனம்ʼ ஸஹ்யே லப்³தா⁴: ஸுரபி³லாத்³ த்³வயம்ʼ
அனர்தே²னா(அ)ர்த² ஆயாதி காகதாலீயத: க்வசித் (6.2/112/30)
प्रविष्टा याचनं सह्ये लब्धा: सुरबिलाद् द्वयं

अनर्थेनाऽर्थ आयाति काकतालीयत: क्वचित् (6.2/112/30)
pravisht’aa yaachanam sahye labdhaa: surabilaad dvayam
anarthenaa’rtha aayaati kaakataaleeyata: kvachit (6.2/112/30)

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” அரசன் நான்கு உருவங்களில் போர்க்களத்தில் நாலாபக்கமும் பாய்ந்து சென்று,போரிட்டார்.தன் படைகள், எதிரியைக் எதிர்கொள்வதிலும்,ஆயுதங்களிலும் எதிரியின் படைகளை விட பின்தங்கியருப்பதை மன்னன் உண்ர்ந்தார்.அவர் இப்படி யோசித்தார்:’ அகத்தியர் கடல் நீரை குடித்து கடலை வற்றை வைத்தது போல், தான் ஒரு அகத்தியராக மாறி, இந்த எதிரியின் படைகளை குடித்து வற்ற வைக்கத்தான் வேண்டும்’

அவர் வாயுஅஸ்திரத்தை நினைத்த மாத்திரத்திலையே அது அவர் கைக்கு வந்து சேர்ந்தது.மீண்டும் ஒருமுறை வணங்கி பிரார்த்தனை செய்து வாயு அஸ்திரத்தால் எதிரிகளின் மேல் எய்தான்.ஒரு கண நேரத்தில் அங்கு அஸ்திரத்தால் – ஶஸ்திரங்களின் ஒரு மஹா பிராவஹமே காணப்பட்டது.விசுவப்பிரளயம் என்று தோன்றுமாறு அங்கு புயலடித்தது.அந்த திவ்வியாஸ்திரம் எதிரிகளின் படைகளை இருந்த இடம் தெரியாமல் அழித்தது.அங்கு பெரும் மழையும், புயல்க் காற்றும் கருமை நிறத்துடனான மேகங்களும், நிறைந்து காணப்பட்டன. எதிரிகள் அங்கும் இங்குமாக ஓடிப்போனார்கள்.

முத்துகளும் நாகமும் நிறைந்த தென்பிராந்தியத்திலிருந்து வந்த எதிரிப் படை தங்கள் நாட்டை நோக்கி திரும்பி ஓடினார்கள்.பார்ஸிகள் வாஞ்சை வனத்தில் போய் ஒளிந்து கொண்டார்கள். தாரதர் குகைகளில் ஒளிந்து கொண்டார்கள்.தாஸர்ண படைகளின் அருகாமை யிலுள்ள காட்டிற்கு சென்று ஒளிந்து கொள்ள முயன்றார் களென்றாலும் அவர்களை சிங்கங்கள் கொன்று விட்டன.ஶாக பிராந்தியங் களிலிருந்து வந்த படைகள் இரும்பினாலான ஆயுதங்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பயந்து ஓடினார்கள்.

தங்க நிறமுடைய துங்குணர்களின் துணிமணிகள் கூட களவு போயின.அரக்கர்கள் அவர்களை கொன்று தின்றார்கள்.போரிலிருந்து உயிரோடு தப்பித்தவர்கள் சஹ்ய மலைகளில் போய் ஒளிந்து கொண்டார்கள். ஏழுநாட்கள் அங்கு தங்கி ஓய்வெடுத்துக் கொண்டார்கள். அவர்களது காயங்களுக்கு மருந்து போட்டது காந்தார நாட்டு வித்யாதர நாரீமணிகள்! விபஶ்சித் மன்னனின் ஆயுதங்கள் ஹூன், சீன,கிராட

நாடுகளிலிருந்து வந்த படைகளை காயப் படுத்தின.அவர்களது உறுப்புகளை காயப்படுத்தி துன்பத்திலாழ்த்தின.மரங்கள் கூட மன்னனின் போர் வீரத்தைக் கண்டு பயந்து நடுங்கின.போர்முடிந்த பிறகும் நீண்ட காலம் அசையாமல் நின்றுகொண்டிருந்தன.

விதுர நாட்டிலிருந்து வந்த ஆகாயப் படை காற்றின் புயல் வேகத்தில் அருகிலிருந்த ஏரியில் விழுந்து மூழ்கின.கண்மண் தெரியாமல் மழை பெய்ததால் தரைப்படைக்கு ஓடிப்போகக் கூட முடியவில்லை. வட திசையை நோக்கி ஓடிப்போனவர ஹூன் நாட்டுப் படை அங்கு பாலைவன மணலில் சிக்கி இறந்து போனார்கள்.கீழ்திசை நோக்கி ஓடிய ஶாக ப் படையை மன்னன் சிறை பிடித்து ஒரு நாள் கழிந்து விடுதலை பண்ணினான்.மாந்த்ர பிராந்தியத்திலிருந்து வந்த படைகளின் மகேந்திர பர்வதத்தில் அடைக்கலம் தேடினார்கள்.ஆனால் ஒரு அடி மேலே போனால் இரண்டடி கீழே விழுந்து காயமடைந்தார்கள். அவர்களை உபசரித்து மருந்து போட்டு குணப்படுத்தியது அங்கு தங்கியிருந்த முனிகளே!

“போர்க்களத்திலிருந்து தப்பியோடி உணவிற்காக இரந்து கொண்டு மலை மேல் ஏறினவர்களுக்கு நொடியில்,இரண்டு அனுக்கிரகங்கள் கிடைத்தன- அடைக்கலமும்,நிரந்தர சாந்தி தரும் மகாமுனிவர்களின் சத்சங்கமும் கிடைத்தன.கெடுதிகளுக்குப்பின் நல்லதும் சிலநேரங்களில் வந்து சேரும்.காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போல் எதேச்சையான ஒரு நிகழ்வு தான் அது

தாஶரணப் படைகள் தெரியாமல் விஷக்கனிகளைத் தின்று இறந்து போனார்கள்.ஆனால் ஹைஹயப் படைகளுக்கு கிடைத்தது ஏதோ ஒரு திவ்விய மருத்துவ செடி! ஆகாய பயணங்கள் முதலிய சித்திகளுடைய கந்தர்வரகளானார்கள் அவர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s