யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 611

Yogavasishtam @ Maharamayanam 611

தினமொரு சுலோகம்

நாள் 611

இயற்கையின் விசித்திரங்கள்! 

ஸ்பு²ரதி ச க⁴னம்ʼ ஸ்ம்ருʼத்வா ஸ்ம்ருʼத்வா ந சாபி விபத்³யதெ
கு³ணவதி ஜனே ப³த்³தா⁴ஶானாம்ʼ ஶ்ரமோ(அ)பி ஸுகா²स्फुरति च घनं स्मृत्वा स्मृत्वा न चापि विपद्यतॆ

गुणवति जने बद्धाशानां श्रमोऽपि सुखावह: (6.2/118/26)sphurati cha ghanam smri’tvaa smri’tvaa na chaapi vipadyate’
gunavati jane baddhaashaanaam shramo’pi sukhaavaha: (6.2/118/26வஸிஷ்டர் சொன்னார்:”அமைச்சர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள்:’ பிரபுவே, அந்த கொக்கைப் பாருங்கள்.@@

மீனவப் பிடித்து தின்பதற்கான அதன் சாமர்த்தியத்தைப் பாருங்கள்.எவ்வளவு எச்சரிக்கையாக, கவனமாக தன் கர்மத்தில் ஈடுபட்டிருக்கிறது. தீயவர்கள் கொக்கின் இந்த இயற்கையான  செயலைக்கொண்டு தங்களது தீய செயல்களையும் தன்னலம் சார்ந்த செயல்களையும் நியாயப்படுத்துகிறார்கள்.

ஆனால் மயிலைப்பாருங்கள்அது தூய மழை நீரை அருந்தி தனது தாகத்தை தணித்துக் கொள்கிறது.மாசடைந்த ஓடைகளிலும் அருவிகளிலிருந்து மாசடைந்த நீரை அது பருகுவதில்லை.

” ஆனால் அந்த மயில் தொடர்ந்து மழை மேகங்களை வேண்டி தியானத்தில் மூழ்கி மழைக்காக காத்திருக்கிறது.அப்படி காத்திருப்பதில் அது ஆனந்தம் பெறுகிறது.மகான்களில் பக்திபெருக்கெடுத்துள்ள சத் ஜனங்கள் தங்களுக்கு ஏற்புடையதல்லாத அனுபவங்களைக் கூட மகிழ்ச்சி நிறைந்தவையாக்க முடிகின்ற இதயமுள்ளவர்களாக இருக்கிறார்கள்”

மன்னவா, அந்த இளம் தம்பதிகளை பாருங்கள்! அவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவருக்கு மற்றொருவரிடமுள்ள பிரேமையினால், ஒவ்வொரு நொடியையும் புதிய அனுபவங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த இளைஞன் தனது பிரிய தோழியை நீண்ட காலம் பிரிந்து இருந்து விட்டு இப்பொழுது தான் சந்திக்கிறான் போலும்!

அவன் சொல்வது இப்படித்தான் போலும்:’ பிரியமானவளே, நாம் பிரிந்திருந்த நாட்களில் நடந்தது என்ன தெரியுமா? நான் அந்த மேகத்திடம் உனக்கென்று ஒரு செய்தியை கொண்டு போவாயா என்று கேட்டேன்..உன்னைக் காணமுடியாத மனவருத்தத்தினால் நான் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்.என் மூச்சு அடங்கி விட்டது போல் தோன்றியது.என் ஞாபகங்கள் எல்லாம் காணாமல் போய் விட்டது.என் சரீரம் மரத்துப்போய் ஒரு மரத்துண்டு போல் ஆகி விட்டது.தனக்கு மிகவும் பிரியமானவளை பிரிந்திருப்பதிலுள்ள கஷ்டத்தை யாரால் துல்லியமாக விவரிக்க முடியும்? என் நிலைமையைக் கண்ட வழிபோக்கர்கள் நான் இறந்து விட்டேன் என்று நினைத்தார்கள்.அவர்கள்  உயிரற்றதென்று எண்ணிய எனது சடலத்தை எரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினார்கள்.என் உடலை ஒரு சுடு காட்டிற்கு கொண்டு போனார்கள்.நெருப்பு மூட்டி என் உடலை அதில் வைத்தார்கள்,
நொடியிடையில் என்னுள்ளிருந்த மனோ விகாரங்கள் கடலலைகளென மேலெழுந்து வந்தன.விசித்திரமான அனுபவங்களும்,காட்சிகளும் என்னில் தோன்ற ஆரம்பித்தன. பூமியிலுள்ள ஒரு பாழுங்கிணற்றில் வீழ்வது போல் தோன்றியது.ஆனால் உன் காதல் ஒரு கேடயமும் போல் என்னை பாது காத்துக் கொண்டிருந்தது.உன்னைக் குறித்துள்ள நினைவு என் இதயத்தில் நிறைந்திருந்தது.அந்த இக்கட்டான நிலைமையில்க் கூட உன்னிடமுள்ள பந்தம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திக்கொண்டிருந்தது.நம்முடைய சிருங்கார சேஷ்டைகளின் ஒவ்வொரு எண்ணமும் என் மனதில் விளையாடிக்கொண்டிருந்தன.திடீரென என்னை சூழ்ந்து கொண்டிருந்த நெருப்பின் சூடு என்னை தகிக்க ஆரம்பித்தது.இவ்வளவையும் கேட்ட அந்த பெண் மயங்கி விழுந்து விட்டாள்.காதலன் அவளை மயக்கம் தெளியவைத்து தன் கதையை தொடர்ந்தான்.’ ஐயோ, நெருப்பு, நெருப்பு ‘ என்று கத்திக் கொண்டு நான் என் மயக்க நிலையிலிருந்து குதித்தெழுந்தேன்.நான் மரணத்திலிருந்து தப்பி வந்து விட்டதாக நினைத்து அங்கு குழுமியிருந்தவர்கள் மகிழ்ச்சியுற்றார்கள்.அவர்கள் என்னை சுற்றி ஆனந்த நடனமாடினார்கள். பிறகு எல்லோரும் கலைந்து போனார்கள். அப்படித்தான் நான் உன்னைக் காண ஓடோடி வந்துள்ளேன்.’,

வஸிஷ்டர் தொடர்ந்து சொன்னார்:” இவ்வளவையும் கேட்ட அந்த நான்கு விபஶ்சித் மன்னர்களும் சேர்ந்து அக்னி பூஜை செய்தார்கள்.அக்னி தேவன் அவர்கள் முன் தோன்றினான்.அவர்கள் அக்னி தேவனிடம் இப்படி பிரார்த்தனை செய்தார்கள்:’ பஞ்ச பூதங்களாலான இந்த விசுவத்தை அதன் முழு உருவில் காண நாங்கள் விழைகிறோம்.அந்த காட்சியை நாங்கள் காணும் வரை எங்களை மரணம் தீண்டாமல் இருக்க எங்களை ஆசீர்வதித்தாலும் ்முடியுமென்றால் இந்த சரீரத்திலிருந்து கொண்டே அந்த காட்சியை காண்பதற்கான பாக்கியத்தை அளிக்க வேண்டும்.விழிகளால் காணமுடியாதவற்றை மனம் காணும்படி செய்யவும்.’

அக்னி தேவனும் அவர்கள் விரும்பிய வரத்தை நல்கினார் ்

—————-

@@ இந்த பகுதியில் இயற்கையன்னையின் பல பல விசித்திரக் காட்சிகளைக் பற்றியும்,ஆன்மீகத்திலுள்ள விதவிதமான மர்கங்களைக் குறித்தும் இயற்கையில் காணப்படும் செடி கொடிகளைப்பற்றியும் பட்சி மிருகங்களைக் குறித்தும் விவரமான கவிதை நயத்தோடு கூடிய வருணனையை வால்மீகி முனிவர் நமக்கு அளித்துள்ளார். அதில் ஒன்றிரண்டைத்தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s