யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 612

Yogavasishtam @ Maharamayanam 612

போதம் ஒன்று தான் என்றிருந்தாலும் அது பலவிதமான தோற்றங்களைஏ ஏற்றுக் கொள்கிறது! ஏகதே³ஶக³தா: விஷ்வக்³வ்யாப்ய கர்மாணி குர்வதே
யோகி³னஸ்த்ரிஷு காலேஷு ஸர்வாண்யனுப⁴வந்த்யாபி (6.2/124/8)एकदेशगता: विष्वग्व्याप्य कर्माणि कुर्वते
योगिनस्त्रिषु कालेषु सर्वाण्यनुभवन्त्यापि (6.2/124/8)ekadeshagataa: vishvagvyaapya karmaani kurvate

yoginastrishu kaaleshu sarvaanyanubhavantyaapi (6.2/124/8)

இராமன் கேட்டான்:” பகவான் , விபஶ்சித் மன்னனின் ஒரேயொரு தனி மனித போதம் தானே நாலாக பிரிந்து நின்று கொண்டிருந்தது.அவர்களுக்கு எப்படி தனித்தனியாக ஆசைகள் இருக்கமுடியும்?”

வஸிஷ்டர்சொன்னார்:” போதம் உண்மையில் ஒன்று தான் என்றிருந்தாலும், அது ‘ அத்வைதம் ‘ தான் என்றிருந்தாலும், அது சர்வ வியாபி என்றிருந்தாலும்,தூக்கத்திலிருப்பவனின் கனவு காணுகின்ற மனம் போல்,பலதரப்பட்ட தோற்றங்களை ஏற்றுக் கொள்கிறது.கண்ணாடி எப்படி பலபொருட்களை பிரதிபலிக்கின்றது போல்,போதம் இயற்கையிலேயே மாசற்றதாக இருப்பதால் அது தன்னுள் எல்லாவற்றையும் பிரதிபலிக்கின்றது.கண்ணாடி உருவாக்குவது ஒரே பொருளைக் கொண்டு தான் என்றாலும் அது பலவிதமான பொருட்களை பிரதிபலிக்கின்றது.போதம் தனது அவபோத எல்லைக்குள் வரும் எல்லாவற்றையும் பிரதிபலிக்கின்றது.

அவ்வாறு பன்மை ஏகாத்மமானதாகத் தோன்றுகிறது.ஆனால் அது ஏகவும், அனேகமும் தான். இன்னொரு விதத்தில் பார்த்தால் அது ஏகமோ அனேகமோ இல்லை.அதே ஓரே நேரத்தில் ஏகவும் அனேகனுமாக தோற்றமளிக்கின்றது.ஆகவே இந்த நான்கு விபஶ்சித் மன்னர்களும் தங்கள் தங்கள் அனுபவங்களை போதத்தில் பிரதிபலித்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

யோகிகளுக்கு எல்லாயிடங்களிலும் ஒரே நேரத்தில் செயல்படவும்,மூன்று காலங்களில் அனுபவங்களையும் ஒரே இடத்திலிருந்து கொண்டே தனதாக்கிக் கொள்ள முடியும்.

நீர் ஒன்று தான்.அது எல்லா இடத்திலும் நிரம்பியிருக்கிறது.ஒரே நேரத்தில் நீரால் பல செயல்களை செய்ய முடியும்.அது பலவிதமான அனுபவங்களை தனதாக்கிக் கொள்கிறது என்று சொல்லலாம்.

ஒரே பகவான் விஷ்ணு நான்கு கரங்களும், நான்கு சரீரங்களும் பயன்படுத்தி விசுவத்தை பரிபாலனம் செய்கிறார்.அனேகம் கைகளுள்ள ஒரு சத்வம் தன் இரு கைகளால் ஒரு விலங்கைப்போல் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அதை கொல்கிறது.

விபஶ்சித் மன்னன் இப்படித்தான் நால்வரான பல விதமான செயல்களில் ஒரே நேரத்தில் ஈடுபட்டு வந்தார்.பூமியில் புற்கள் நிறைந்த நிலத்தில் அவர்கள் படுத்து இறங்கினார்கள்.பல பல்லாண்டு பூமியின் பகுதிகளிலும் அவர்கள் வசித்தார்கள்.காடுகளில் மகிழ்ச்சியுடன் பயணித்தார்கள்.பாலைவனங்களை கண்டு களித்தார்கள்.மலை உச்சிகளிலும் சமுத்திரத்தின் ஆழத்திலும் வசித்தார்கள்.கடலிலும் காட்டிலும் களித்து வாழ்ந்தார்கள்.கடறகரைகளிலும் நகரங்களிலும் கேளிக்கையாடினார்கள்.சில நேரங்களில் குகைகளில் ஒளிந்து வாழ்ந்தார்கள்.

கீழ்திசையில் நோக்கிச் சென்ற விபஶ்சித் மன்னன்,ஶாக பூகண்டத்தில் உதயகிரியின் அடிவாரத்தில் ஏழுவருடம் நீண்ட உறக்கத்திலாழ்ந்திருந்தான்.அங்கு அவன் கண்ட அப்சரஸுகள் அவனை மதி மயங்கச் செய்தார்கள்.கல்லிலிருந்து கிடைத்த நீரை குடித்து அவன். கல்லாகவே மாறிவிட்டிருந்தான. நினைவு திரும்பிய மன்னன் கொஞ்சம் நாட்கள் மஞ்சள்காட்டில் மாறு வேடத்தில் வாழ்ந்து வந்தான்.அங்கு ஒரு யகஷியின் உதவியால் அவன் சிங்கமாக மாறினான்.கொஞ்சம் காலத்திற்கு பின் அவன் துர்மரணம் அடைந்தான். ஒரு தவளையாக மறுபிறவி எடுத்தான்.ஒரு பத்து வருடம் தவளையாக வாழ்ந்தான்.

மேற்கு திசையை நோக்கிச் சென்ற விபஶ்சித் மன்னன் சூரியாஸ்தமன மலையில் ஒரு அப்சரஸின் மாயவலையில் சிக்கி, ஒரு மாதம் அவளுடன் இணைந்து வாழ்ந்தான்.

வட திசையில் போன மன்னன் ஶாக பூகண்டத்தில் நீலகிரியில் ஒரு பாழுங்கிணற்றில் நூறு வருடகாலம் வாழ்ந்தான்.

மேற்கே போன அரசன் காலப் போக்கில் கல்வியறிவு பெற்று பதிநான்கு வருடம் அங்கேயே வாழ்ந்தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s