Yogavasishtam @ Maharamayanam 615

யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 615

தினமொரு சுலோகம்

நாள் 615

முளக்திக்கும் பந்தனத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசம் அவர்களது போதத்தில்த் தான்.!

நைவ தஸ்ய க்ருʼதேனார்த்தோ² நாக்ருʼதேனேஹ கஶ்சன
யத்³யதா² நாம ஸம்பன்னம்ʼ தத்ததா² ஸ்த்விதரேண கிம்ʼ (6.2/125/46)

नैव तस्य कृतेनार्त्थो नाकृतेनेह कश्चन
यद्यथा नाम सम्पन्नं तत्तथा स्त्वितरेण किं (6.2/125/46)
naiva tasya kri’tenaarttho naakri’teneha kashchana

yadyathaa naama sampannam tattathaa stvitarena kim (6.2/125/46)

வஸிஷ்டர் தொடர்ந்து சொன்னார்:” போதம் விழித்தெழுந்தவனில் உண்டாகும் அனுபவத் தோன்றல்களில் ‘ இது சுகம்’, ‘ இது துன்பம்’ என்கின்ற பாகுபாடு எதுவும் கிடையாது.’உலகமும், ஆத்மாவும் எதுவும் உண்மையில்லை’ என்ற பகுத்தறிவு உண்டாகும் பொழுது, எல்லாமே ஒன்றின் பிரிக்க முடியாத பகுதிகளே தான் என்று உணரும் பொழுது சுகம், துக்கம் என்பன போன்ற வார்த்தைகள் வெறும் பொருளற்ற உளறல்கள் தான் ! அவர்களது துன்பத்திற்கு ஆழமில்லை,ஏனென்றால் அவர்கள் அம்மாதிரி கவலைகளுக்கெல்லாம் அப்பாறப்பட்டவர்களல்லவா! பரமசிவன் பிரம்மாவின் தலைகளில் ஒன்றை கிள்ளி எடுத்தார் என்று சொல்வார்கள்.பிரம்மா விரும்பியிருந்தால் இன்னொரு தலையை வளர்த்துக்கொண்டிருக்க முடியும்.ஆனால் அவர் அதை செய்யவில்லை.ஏனென்றால் ‘இந்த ‘ சிருஷ்டி’ என்ற சங்கற்பமே பொய்யாக இருக்கும் பொழுது எனக்கு இன்னொரு தலை இருந்தாலென்ன இல்லாவிட்டால் என்ன?’

ஏதாவது செய்து நேட வேண்டிய ஒன்றும் அவருக்கு கிடையாது. என்ன கர்மம் செய்தாலும் அவருக்கு எந்த நன்மையும் கிடையாது. என்ன நிகழ வேண்டுமோ அது அவ்வாறே நிகழட்டும். அதில் மாறுதல்கள் செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன?”

காமனை எரித்து சாம்பலாக்க முடிந்த பரம சிவனுக்கு, தன் உடம்பின் பாதியை தன் மனைவிக்கு கொடுக்க வேண்டி வந்தது.எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபட சக்தியுள்ள சிவன், எல்லா பிரிய பந்தங்களிலிருந்தும் முக்தி பெற தகுதியுடைய சிவன் தன் மனைவியிடம் பிரியம் வைத்துள்ளது போல் நடந்து கொள்கிறான்.அவருக்கு ஆஸக்தியினாலோ, ஆஸக்தி இல்லாமல் இருப்பதாலோ என்ன பயன்?

அது அப்படியே இருக்கடஃடும்.

பகவான் மஹாவிஷ்ணு கூட பல விதமான கர்மங்களில் மூழ்கியிருக்கத் தான் செய்கிறார்.அது மட்டுமில்லை; அவர் எல்லோரையும் அவரவர் கர்மங்களை செய்யுமாறு வலியுறுத்தவும் செய்கிறார்.அவரும் மரணத்தை எதிர்க் கொள்கிறார்; பிறகு பிறக்கவும் செய்கிறார்.சிலரை கொல்லவும் செய்கிறார். அவரும் குழந்தையாக இருக்கிறார்; வளருகிறார்.அவ்வாறு பகவானும் மாற்றங்களுக்கு உட்பட்டவர் போல் தோற்றமளிக்கின்றார்.ஆனால் அந்த நேரங்களில் கூட அவர் இவைகளிலிருந்தெல்லாம் முக்தராகவே இருக்கிறார்.இந்த காணப்படும் கர்மங்களிலிருந்து ஒதுங்கியிருப்பது அவருக்கு மிகவும் எளிதானது! ஆனால் அம்மாதிரி கட்டுப்பாடுகளால் என்ன பயன்?

ஆகவே எல்லாமே அப்படியே தொடருகின்றன.

அனந்தாவபோதசாக்‌ஷாத்காரம் பெற்றவர்களின் மனோநிலையை இது தான்.ஜீவன்முக்தர்களென்றாலும், சூரிய- சந்திரர்களும்,அக்னி முதலியவர்களும்,தங்களது இயற்கை கர்மங்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறார்கள்.அஞ்ஞானிகளான மனிதர்களைப் போல் ஒருவருக்கொருவர் சாதாரண மனிதர்களைப்போல் எப்பொழுதும் எதிர்அணியில் நின்று கொண்டு போராடுவதாக காட்சியளிக்கும் தேவர்களின் குருவான பிரஹஸ்பதியும் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியரும் ஜீவன் முக்தர்களே!மிகவும் கொடூரமான போர்களில் ஈடுபட்டு போர்க்களங்கள் பல கண்ட ஜனக ராஜனும் ஜீவன் முக்தனான ராஜ ரிஷியே! உள்ளத்தால் பூரண முக்தியடைந்தும் அரசனுக்குரிய கடமைகளை செவ்வனே நிறைவேற்றிய அனேகம் ராஜரிஷிகள் உள்ளார்கள். லௌகீக கர்மங்களில் ஈடுபடும் பொழுது முக்தனும் அஞ்ஞானியும் ஒரே போல் நடந்து கொள்வார்கள்.முக்திக்கும் பந்தனத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசம் அவர்களது போதத்தில்த் தான்.உபாதிகள் அஞ்ஞானியின் போதத்திற்கு எல்லைகள் உண்டுபண்ணுகின்றன. ஆனால் முக்தனின் போதத்திற்கு எல்லைகள் கிடையாது.
.
மகாபலி, பிரகலாதன்,நமுசி,வியத்திரன்,அந்தகன்,முரன்,முதலிய அரக்கர்களும் முக்தர்களாக வாழ்ந்தார்கள்.விருப்பு- வெறுப்புக்கள்,மனோ விருத்திகள்,உள்மனம் எதுவும் அவர்களை பாதிப்பதில்லை.எல்லைகளில்லாத அவபோதத்தில் ஆனந்தம் அனுபவிக்கும் பொழுது,எல்லாவிதமான வேற்றுமைகளும் மறைந்து போகின்றன.

சிருஷ்டியில் நாம் காண்கின்ற வேற்றுமைகள்,வானவில்லில் நாம் காண்கின்ற வண்ணப் பகிட்டு போல்த்தான்.அது வெறும் தோன்றல் மட்டும் தான்.ஆகாயத்தில் வெறுமையும், தூரமும் அனுபவப்படுகிறது. அதிவும் வெறும் மனப்பிரமை தான்.அதே போல், உலகம் எனும் மாயத்தோற்றம். அனந்தாவபோதத்தில் கால- தேச வித்தியாசங்களுக்கு ஆட்பட்டதாகவும்,தாற்காலிகமானதாகவும் காட்சியளிக்கிறது.

.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s