யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 621

Yogavasishtam @ MAHARAMAYANAM621

தினமொரு சுலோகம்

நாள் 621

பாஸனின் மறு வரவு!

யேனைவாப்⁴யுதி³தா யஸ்ய தஸ்ய தேனா வினா க³தி:
ந ஶோப⁴தே ந ஸுக²தா³ ந ஹிதாய ந ஸத்ப²லா (6.2/130 to/2)येनैवाभ्युदिता यस्य तस्य तेना विना गति:

न शोभते न सुखदा न हिताय न सत्फला (6.2/130 to/2)yenaivaabhyuditaa yasya tasya tenaa vinaa gati:
na shobhate na sukhadaa na hitaaya na satphalaa (6.2/130 to/2)

இராமன் கேட்டான்:” இந்த மான்பேடைக்கு  துரதிர்ஷ்டமான இந்த நிலையிலிருந்து யார் மூலமாக முக்தி கிடைக்கும்?”

வஸிஷ்டர் சொன்னார்:” இந்த நிலையிலிருந்து முக்திக்கான வழி, இந்த நிலைக்கான காரணம் என்னவோ அதுவே தான்.வேறு எந்த வழியும் பூரண முக்தியளிக்க மாட்டா! ஏனென்றால் மற்ற வழிகள் எதுவும் ஆனந்தமோ, நன்மையோ, நல பலன்களையும் தர வல்லவையல்ல!

விபஶ்சித் மன்னன் அக்னியை பூசித்து வந்தானல்லவா? இந்த மான் அக்னியில் பிரவேசிப்பதோடு, நெருப்பிலிட்ட தங்கம் போல் ஜொலிப்புடன், அவர் தனது முன்னாலிருந்த நிலையை அடைவார்.இப்பொழுது பாருங்கள், நான் இந்த மானை அக்னிக்கு அழைத்துச் செல்கிறேன்.”

வால்மீகி சொன்னார்:” இவ்வாறு கூறி வஸிஷ்டர் தனது கமண்டலத்திலிருந்து சிறிதே ஜலத்தை எடுத்து ஆசமனம் செய்தார்.திடீரென அவை மத்தியில் ஒரு அக்னி குண்டம் தோன்றியது. விறகு,புகை, நெருப்பு பொறிகள் எதுவுமே இல்லாமல்,நெருப்பு ஜ்வாலை எழும்பியது. அவையோர்கள் துள்ளிக்குதித்து அவையின் ஓரங்களில் ஒதுக்கினார்கள் அந்த மானோ நெருப்பைக் கண்டு ஆவேசத்துடன் துள்ளிக் குதித்தது.”

வஸிஷ்டரும் தியானத்தில் மூழ்கிவிட்டார்.பூர்வ வாசனைகளிலிருந்து விடுபட அவர் அந்த மானை ஆசீர்வதித்தார்.அக்னி தேவனிடம் அவர் இவ்வாறு பிரார்த்தித்தார்.:” பூர்வ ஜன்மத்தை கருத்தில்க் கொண்டு இவரை மான் பிறவியிலிருந்து விபஶ்சித் மன்னனின் நிலைக்கு திரும்பவும் கொண்டு வருவாய்! ”

மகாமுனிவர் இவ்வாறு பிரார்த்தித்து முடித்ததும், மான் அக்னியை நோக்கி குதித்து பாய்ந்தது.

மான் சிறிது நேரம் அக்னியில் ஓய்வு எடுத்துக் கொண்டது. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, மெதுவாக மான் உருவத்திலிருந்தது மனித உருவத்திற்கு மாறியது.ஐசுவரியம் தளும்பி நிற்கின்ற அழகான ஒரு மனித உருவம் அக்னியிலிருந்து வெளி வந்தது.அவர் வெளி வந்தவுடன் அக்னி காணாமல் போய்விட்டது.

அவையோர் ஒரே குரலில் சொன்னார்கள் ,” மன்னவனே வருக! அமர்வீர்களாக! தாங்கள் சம்சார சாகரத்தில் உழன்று களைப்பஐந்திருப்பீர்கள்.ஆகவே ஓய்வெடுத்துக் கொள்வீர்களாக!”

அவையோர் ஆச்சரியத்துடன் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்:” என்னே ஒரு ஒளி இவர் முகத்தில்? கதிரவனைப் போல் ஓளிர்கிறான்! இவன் ‘பாஸன்’ ( கதிரவன்) என்ற பெயரில் புகழ் அடைய  போகிறான்.”

ஒரு நிமிடம் தியானத்திலாழ்ந்த பொழுது பாஸனுக்கு தனது பூர்வ காலம் ஞாபகத்திற்கு வந்தது.அவையில் ஏற்பட்ட சலசலப்பு அடங்கி எங்கும் அமைதி நிலைத்தது.பாஸன் எழுந்து வஸிஷ்டரை வணங்கினான்.முனிவரும் அவனை ஆசீர்வதித்தார்:” உன்னை சூழ்ந்திருந்த அஞ்ஞானச் சுழல் நீங்கி, நீ உன் சுயநிலைக்கு திரும்புவாய்!”

பாஸன் இராமனையும் வணங்கினான்.

தசரத மன்னனும் பாஸனை வரவேற்று வணங்கி அமர வைத்தான்.

பாஸனும் மகாராஜாவின் உபசாரத்தை ஏற்றுக்கொண்டு ஆசனத்தில் அமர்ந்தான்.
.தசரத மன்னன் தொடர்ந்து சொன்னான்:” சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு யானையைப் போல் விபஶ்சித் மன்னன் பல சோதனைகளுக்காளாகி,மீண்டு வந்துள்ளான்.தங்களது மனோ நிலைகளில் ஏற்படுகின்ற குறைபாடுகளினாலும்,சத்தியத்தைக் குறித்துள்ள தவறான எண்ணங்களாலும் உயிரினங்கள் என்ன என்ன கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வருகிறது! உண்மையில் இந்த பிரமையினாலுண்டாகின்ற காட்சிகள் அசத் ஆக இருந்தாலும்,மெய் இல்லாத்தாகவும் இருந்தாலும் இந்த மாயையின் சக்தி தான் என்னே அபாரம்! எல்லைகளில்லாத போதத்தில், பொய்யானதாக இருந்தாலும், அது எவ்வளவு வித விதமான உலகங்களையும் அனுபவங்களையும் ‘ சிருஷ்டி’க்கின்றது..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s