Yogavasishtam @ Maharamayanam 627
தினமொரு சுலோகம்
நாள் 627
இரண்டு வித சிருஷ்டிகள்
ப்³ரஹ்மாதீ³னாம்ʼ த்ருʼணாந்தானாம்ʼ த்³விதா⁴ ப⁴வதி ஸம்ப⁴வ:
ஏகோ ப்³ரஹ்மமயோ(அ)ன்யஸ்து ப்⁴ராந்திஜஸ்தாவிமௌ ஶ்ருʼணு (6.2/136/22)
ब्रह्मादीनां तृणान्तानां द्विधा भवति संभव:
एको ब्रह्ममयोऽन्यस्तु भ्रान्तिजस्ताविमौ शृणु (6.2/136/22)
brahmaadeenaam tri’naantaanaam dvidhaa bhavati sambhava:
eko brahmamayo’nyastu bhraantijastaavimau shri’nu (6.2/136/22)
தேவர்களின் சிந்தனை தொடர்ந்தது:’ பாருங்கள்; பிசாசுக்கள் எல்லோருமாக அந்த பிணத்தைத் தின்று தீர்த்து விட்டார்கள்.ஆகவே பூமியை காண முடிகிறது. அந்த உடலிலிருந்து எலும்புகள் புது மலைகளாக உருவெடுத்திருக்கின்றன.’
தேவர்கள் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது பிசாசுக்கள் ஆகாயத்தில் நடனமாட ஆரம்பித்தார்கள்.தேவர்கள் பூமியில் சிறிதே மீதமிருந்த இரத்தத்தை எடுத்து சமுத்திரத்தில் ஊற்றினார்கள்.பிறகு ‘சமுத்திர நீர் மது வாகட்டும்’ என்று சங்கற்பம் செய்தார்கள்.அது அப்படியே ஆயிற்று. பிசாசுக்கள் மதுவை குடித்து விட்டு மது மயக்கத்தில் நடனத்தைக் தொடர்ந்தார்கள்.
இந்த பூமி மேதஸால் உருவானதால் அது மேதினி என்றறியப்படலாயிற்று.அவ்வாறு பூமியில் உயிரினங்கள் மீண்டும் தோன்றின.சிருஷ்டிகர்த்தா ஒரு புது உலகையும் மனித குலத்தையும் சிருஷ்டித்தார்.
பாஸன் சொன்னார்:’ நான் அக்னி தேவனிடம் கேட்டேன்:’ இறப்பதற்கும் முன் யாராயிருந்தேன்.?’
என் கேள்விக்கு பதிலாக அக்னி தேவன் ஒரு கதையை கூறினார்: ‘ கேள், எல்லைகளற்ற ஒரு இடம் உள்ளது.அது முழுவதுமாக தூய போதமாக இருந்தது.அதில் அனேகம் உலகங்கள் நுண்ணிய அணுக்களாக ஊர்ந்து கொண்டிருக்கின்றன.அதில் ஒரு விசுவ புருஷன் தோன்றினான்.அவன் ஆத்மாவை உணர்ந்தவன். நாம் கனவுகள் காண்பது போல், அவனுக்கு தனது சக்தியை சுய ஒளியில் உணர்ந்திருந்தாள்.அவனது அனுபவங்களிலிருந்து ஐம்புலன்கள்,அவையின் அங்கங்கள் என்று எல்லாம் உருவாயிற்று.அதுவே ஒரு உடலாகவும் உருமாறியது.இந்திரியங்கள் தங்களுக்கேற்ற பொருட்களை கற்பித்து எல்லாவற்றையும் ஒன்றாக்கி உலகத்தை சமைத்தது. .
அந்த உலகில் அசுரன் என்ற பெயரில் ஒரு உயிரினம் தோன்றியது.அவனுக்கு தனது சக்தியில் மதிப்பேற்பட்டது. ஒருமுறை ஒரு முனிவரின் குடிலை அழித்தத காரணமாக அவரின் சாபத்தைக் ஏற்று வாங்க வேண்டி வந்தது.அந்த முனிவர்,’ நீ உன் உருவத்தின் காரணமாக அகங்காரியானாய்.நீ இறந்து ஒரு கொசுவாக பிறப்பாய்’ என்று சபித்தார்.அவன் அந்த சாபத்தின் காரணமாக ஒரு கொசுவாக பிறந்தான்..
அந்த கொசு இறந்து சாம்பலாயிற்று. மயங்கி விழுந்த மனிதனைப்போன்ற, அவன் உடலில்லாமல் ஒரு உயிரானான்.அந்த உயிர் ஆகாயத்தில் கலந்துவிட்டது.பிறகு அந்த உயிர் வாயுவுடன் கலந்தது. வாயு உயிர் சக்தி தான் ! அவனில் ஜீவன் உயிர்த்தெழுந்தது.அது உயிர்சக்தியையும் நீரையும் சேர்த்துக்கொண்டது.தன் மூலப்பொருட்களான பஞ்ச பூதங்களையும் அனந்த போதத்தின் ஒரு நுண்ணிய அணுவையும் சேர்த்து அந்த சத் வஸ்து ஒரு தனித்துவத்துடன் அசைய ஆரம்பித்தது.சாதகமான சூழ்நிலைகளிலும் விதையிலிருந்து முளை வெளிப்படுவது போல் அவனில் அனந்தபோதம் முளை விட்டது.
அந்த முளைவிட்ட அவபோதத்தில் முனிவரின் சாபம், கொசுவின் கற்பனைகள் எல்லாம் இருந்தன.அப்படி அந்த சத் வஸ்து ஒரு கொசுவாயிற்று.
இராமனின் கேள்விக்கு பதிலளிக்கும் முறையில் வஸிஷ்டர் சொன்னார்:” பிரம்மா முதல் புற்கொடி வரை எல்லா உயிரினங்களும் இரண்டு விதமான பிறவிகளுக்கு ஆட்பட்டவர்களாகிறார்கள்.ஒன்று : பிரம்மாவின் சிருஷ்டி. இரண்டு: பிரமையினால் உண்டாகும் சிருஷ்டி
சிருஷ்டிகர்த்தாவின் உள்ளத்தில் முதன் முதலாக உண்டாகும் யதேச்சையான , முன் ஒருபொழுதும் அனுபவப்படாத, முதல் சங்கற்பம் பிரம்மாவின் சிருஷ்டி.அது கர்ப்பப் பையிலிருந்து உண்டாகும் பிறவியில்லை.
லயித்து ப் போயுள்ள வாசனைகளாலும் பிரமையினாலுண்டாகின்ற கற்பனைகளாலுண்டாகின்ற சிருஷ்டிகள் மாயா சிருஷ்டிகள்.அவை விஷய – விஷயீ கட்டுக்குள் பிணைக்கப்பட்டிருக்கும் சிருஷ்டிகள்.”
அந்த கொசு தனது துணையுடன் ஒரு புற்கொடியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தது.அந்த புற்கொடியை ஒரு மான் தின்றுவிட்டது. மானைப் பார்த்துக்கொண்டே இறந்ததால் அது ஒரு மானாக பிறந்தது.ஒரு வேடன் அந்த மானைக் கொன்றான்.அடுத்த பிறவியில் அந்த மான் வேடனாக பிறந்தது.
வேடன் காட்டில் அலைந்து திரியும் பொழுது ஒரு முனிவரை சந்தித்தான்.அந்த முனிவர் அவனில் போதத்தை விழித்தெழ செய்தார்.
‘ ஏன் நீ இந்த கேடு கெட்ட வாழ்க்கை வாழ்கிறாய்? வேடனின் வாழ்க்கையைத் துறந்து மோக்ஷ வழியில் சென்று நிர்வாண நிலையை அடைவாயாக!’ என்று முனிவர் உபதேசித்தார்.