யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 622

Yogavasishtam @ Maharamayanam 622

தினமொரு சுலோகம்

 நாள் 622

பிரம்மமே  சத்யம்! அதுவே மித்யையும்!

கல்பனம்ʼ தத்பரம்ʼ ப்³ரஹ்ம பரம்ʼ ப்³ரஹ்மைவ கல்பனம்ʼ
சித்³ரூபம்ʼ நானயோர்பே⁴த³: ஶூன்யத்வாகாஶயோரிவ (6.2/131/20)कल्पनं तत्परं ब्रह्म परं ब्रह्मैव कल्पनं
चिद्रूपं नानयोर्भेद: शून्यत्वाकाशयोरिव (6.2/131/20)kalpanam tatparam brahma param brahmaiva kalpanam

chidroopam naanayorbheda: shoonyatvaakaashayoriva (6.2/131/20)

விசுவாமித்திர முனிவர் கூறினார்:” மன்னவா, மேலான ஞானம் பெறாத்தால், போதம் விழித்தெழாமல், இந்த சம்சார சாகரத்தில் உழலுபவர்களை அனேகருண்டு.முன்னொரு காலத்தில் பதினேழு இலட்சம் வருடங்கள் சம்சாரத்தில் உழன்று கொண்டிருந்த ஒரு அரசன் இருந்தான்.

அந்த மாதிரி ஆட்கள் பௌதிக விஷயங்களை நினைத்துக் கொண்டும் ஆராய்ந்து கொண்டும் அவைகளின் குணநலன்களைக் குறித்து சிந்தித்துக்கொண்டும் வாழ்நாளை கழிக்கிறார்கள்.

இந்த சிருஷ்டிஎன்பது பிரம்மாவின் மனதில் உருவான கற்பனையின் விளைவே!

ஒரு பந்தின் மேல் சதா ஊர்ந்து கொண்டிருக்கின்ற எறும்பு போல் மனிதர்கள் எப்பொழுதும் பயணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அனந்தமான ஆகாயத்தில்’ கீழ்’, ‘ மேல்’ என்றெல்லாம் கிடையாது.ஆனால் பொருட்கள் விழுந்தால் அது கீழே விழுந்து விட்டது என்று சொல்கிறார்கள். பறவை உயரத்தில் பறந்தால் அது ‘ மேலே’ பறக்கிறது என்கிறார்கள்.

இந்த உலகில் ‘ வாததனம் ‘ என்றொரு இடம் உள்ளது. அங்கு மூன்று அரச குமாரர்கள் இருந்தார்கள்.அவர் கள் இந்த உலகின் எல்லைக்குச் சென்று உலகில் என்ன என்ன உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தீருமானித்தாரகள்.சிறிது காலம் அவர்கள் பூமியிலுள்ள பொருட்களை ஆராய்ந்தார்கள்.பிறகு கடலிலுள்ள பொருட்களை ஆராய்ந்தார்கள்.இப்படி எல்லா பொருட்களைக் குறித்தும் பூர்ணமாக அறிந்து கொள்ளும் முயற்சியில் பல பிறவிகள் எடுத்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு உலகின் எல்லைவரை செல்லவே முடியவில்லை.அவர்கள் பந்தின் மேல் ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகளைப் போல் @பூகோளத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் போய்க்கொண்டேயிருந்தார்கள்.அவர்கள் இன்னமும் அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.இந்த சம்சாரம் எனும் பிரமைக் காட்சிகளுக்கும் முடிவே கிடையாது.எல்லைகளற்ற போதத்தினால் உருவான இந்த பிரமைகளுக்கும் எல்லை கிடையாது.

” ‘ பரப்பிரம்மம் என்பது தான் சத்தியம்! அதுவே கற்பனையும்! ஒன்றே சத்யமும் மித்யையும் இருக்கிறது. இரண்டுமே தூய அவபோதம் தான்.ஆகாயமும் வெறுமையும் எப்படி வித்தியாசங்கள் எதுவும் இல்லாமலுள்ளதோ அது போல் இவை இரண்டும் வித்தியாசங்கள் எதுவுமில்லாமல் இருக்கின்றன! 

நீர்பரப்பில்த் தோன்றும் அலைகளுக்கும் உள்ளே தோன்றும் சுழல்களுக்கும் என்ன வித்தியாசம் ? இரண்டும் நீர் தானே! போதத்திலிருந்து வேறாக ஒன்றும் உருவாக வாய்ப்பே கிடையாது என்கின்றபொழுது இன்னொரு பொருள் எங்கிருந்து வரமுடியும்?

அனந்தபோதத்திற்கு விசுவமாக தானாகவே ஒளிர்வதற்கு தனியாக விருப்பம் எதுவும் தேவையில்லை.

அனந்த போதத்தில் எவ்விதமான உருவங்களும்,எப்பொழுது வேண்டுமானாலும் தோன்ற முடியும்.அந்தஅந்த உருவங்களுக்கேற்ற குணங்களையும் தனதாக்கிக் கொள்ள முடியும்.போதத்தின் நுண்ணிய அணுவில்க் கூட எல்லைகளில்லாத சிறிதும் பெரிதுமான எல்லாவிதமான அனுபவங்களுக்கும் வாய்ப்புக்கள்  உள்ளடங்கியிருக்கின்றன..

மலைகளிலும் சிறிய கற்களும் பாறைகளும் உள்ளடங்கியிருக்கின்றன என்பது போல்த் தான் அது.அனுபவங்கள் அததற்கான நியத அனுபவங்களாக எங்கும் அனுபவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உண்மையில் பார்க்கப் போனால் அவை எதுவுமே அனுபங்களில்லை தானும் ! அவை எல்லைகளற்ற அவபோதமே தான்!

இப்படிப்பட்ட அனுபவங்களின் கூட்டுத் தொகை தான் உலகம்.பிரம்மத்தின் ஒளிமயமான வெளிப்பாடு!
என்னே ஆச்சரியம் ? தன்னுடைய சுய ‘சத்’ உருவம் கைவிடாமலே, பிரம்மம் , ‘ நான் ஒரு ஜீவாத்மா’ என்று எண்ணுகிறது! 

பாஸ மன்னா, இனி தங்கள் அனுபவங்களை விவரமாகச் கூறுவீர்களாக!

பின்குறிப்பு: @  நமது மாமுனிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் முன்னாலேயே ‘பூமி உருண்டையானது. பந்து போலுள்ள  அதன் மேற்பரப்பில் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் வசிக்கின்றனர்’ என்று அறிந்திருந்தனர். கலீலியோவும் மற்ற மேற்கத்திய விஞ்ஞானிகளும் இந்த உண்மையை கண்டறிய ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாயின.. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s