யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 626

Yogavasishtam @ Maharamayanam 626

தினமொரு சுலோகம்

 நாள் 626


தேவர்களின் புலம்பல்

தே³வா ஊசுரயம்ʼ தே³வி உபஹாரி க்ருʼதோஅம்பி³கே
ஸார்த⁴ம்ʼ ஸ்வபரிவாரேண ஶீக்⁴ரமாஹ்ரியதாமிதி (6.2/134/14)देवा ऊचुरयं देवि उपहारि कृतोअंबिके
सार्धं स्वपरिवारेण शीघ्रमाह्रियतामिति (6.2/134/14)devaa oochurayam devi upahaari kri’toambike

saardham svaparivaarena sheeghramaahriyataamiti (6.2/134/14)
பாஸன் தொடர்ந்தார்:” சித்தர்களுடையதும் மாமுனிவர்களுடையதுமான பிரார்த்தனையைக் கேட்டு திவ்விய ஜனனியாக கருங்காளி தோன்றினாள்.அவள் இரத்தமும் நீரும் இல்லாமல் காய்ந்து வரண்டு போய் காணப்பட்டாள்.அனேகம் சைத்தான்களும் பிசாசுக்களும் அவளுக்கு சேவை செய்து கொண்டு கூடவே வந்தார்கள்.அவள் ஆகாயம் தொடும்படியான உயரத்துடன் காணப்பட்டாள்.பரம்பொருளில் உறுதியாக நிலை கொண்ட அவள் அந்த பேய் உருவத்தின் மீது அமர்ந்தாள்.

தேவர்கள் சொன்னார்கள்:” அம்மா, திவ்விய ஜனனீ, இதோ அம்மாவிற்கான காணிக்கை! அம்மா நீ உன் பரிவாரங்களோடு சேர்ந்து இந்த பிணத்தை ஒரு நொடியில் உண்டு தீர்க்கவும்.”

தேவர்கள் இவ்வாறு கூறினவுடன் மகா காளி தனது பிராணசக்தியை பயன்படுத்தி அந்த பிணத்திலிருந்து உயிர்சக்தியை உறிஞ்சி குடிக்க ஆரம்பிததாள்..அவளது தேகம் படிப் படியாக புஷ்டியடைய ஆரம்பித்தது.அவளுக்கு வயிறு நிறைந்ததும் நடனமாட ஆரம்பித்தாள்.

உலக- உலகமல்லாத மலைத் தொடர்ச்சியில் , உலகின் எல்லைகளில் அமர்ந்திருந்த தேவர்கள் இந்த காட்சியை கண்டு களித்தார்கள்.பிசாசுக்கள் அந்த பிணத்தைத் தின்ன ஆரம்பித்தார்கள்.உலகின் நிலைமை அப்பொழுது மிகவும் பரிதாபமாக இருந்தது.உலகிலிருந்த மலைகள் உடைந்து பொடிப் பொடியாயிருந்தன! ஆகாயம் இரத்தத்தின் சிகப்பு நிறத்தில் உள்ள  ஆடைணிந்தது போல் தோன்றியது.நடனம் செய்து கொண்டே அம்மா காளி தன் ஆயுதங்களை சுழற்றி அங்கும் இங்கும் எறிந்தாள்.அதன் தாக்கத்தில் மீதமிருந்த நகரங்களும் பட்டணங்களும் அழிந்தன.அவைகளைக் குறித்துள்ள ஞாபகங்கள் மட்டும் தான் மீதமிருந்தது.

உலகம் முழுவதும் காளியின் பரிவாரங்களான பிசாசுக்களால்  நிறைந்தது.உலக- ஆலோகத்திலுள்ள மலை உச்சிகளில் நின்றிருந்த தேவர்களின் மனதில் பீதி நிறைந்திருந்தது.”

இராமன் வஸிஷ்டரிடம் கேட்டான்:” அந்த உயிரற்ற சடலம் உலகம் முழுவதும் நிறைந்து மூடியிருந்தது என்று சொன்னீர்களல்லவா? பிறகு எப்படி உலக- உலகிலில்லா மலைகளைக் காண்பதற்கு முடிந்தது?”

வஸிஷ்டர் சொன்னார்:” அந்த மலைகள் அந்த பிணத்தின் தோள்களுக்கு மேல் தெரிந்தது.

தேவர்கள் இவ்வாறு சிந்திக்கத் தலைப்பட்டனர்:’ ஐய்யோ! இந்த பூமிக்கென்னாயிற்று? சமுத்திரங்கள் எங்கு போய் மறைந்தன? மனிதர்களுக்கும் மலைகளுக்கும் என்ன ஆயிற்று? எங்கே சந்தன மரங்கள் நிறைந்த, நறுமணம் கமழும் மலர்வாடிகளிருந்த மலய பர்வதம்? இமயமலையிலுள்ள வெண்மையான பனி மலைகள் சேறு புரண்டதாகக் காணப்படுகிறது.பகவான் விஷ்ணுவின் இருப்பிடமான பாற்கடல்,விரும்பியதை தரக்கூடிய கற்பப்ப விருட்சம்,தயிர், தேன், மது, பால், போன்றவையாகளால் நிறைந்து விழுந்து கொண்டிருந்த  கடல்கள் எங்கு போய் மறைந்தன.தென்னை மரங்கள் நிறைந்திருந்த மலைகளையும் காணோம்.கிரௌஞ்ச பூமண்டலமும், அதில் நிறைந்திருந்த மலைத் தொடர்ச்சிகளும்,பிரம்மாவின் வாகனமான அன்னம் விளையாடுகின்ற, அப்சரஸுகள் விளையாடுகின்ற , தாமரை மலர்கள் நிறைந்த ஏரிகளையும் காணவில்லை.மாமுனிவர்கள் வசிக்கின்ற குகைகளையும் காணவில்லை.இவைகளெல்லாம் இருக்கின்ற புஷ்கரணி தேவையே காணவில்லை.சுத்தமான நீர்நிறைந்த கோமேதகத் தீவு, நினைத்த மாத்திரையிலேயே ஐசுவரியம் தருகின்ற ஶாகத் தீவு இவையெல்லாம் கூட அழிந்து விட்டிருக்கின்றன.

பூங்காவனங்களும் காடுகளும் அழிந்து விட்டிருக்கின்றன.பணிப்பளுவால் பலவீனமடைந்த ஆட்கள் இனிமேல் எங்கு ஓய்வெடுப்பார்கள்? கரும்பு தோட்டங்கள் எல்லாம் அழிந்து விட்டதால் இனி எப்படி இனிப்பு கிடைக்கும்?

மற்ற எல்லா தீவுகளையும் பலனடையச்செய்யும் ஜம்புத் தீவு கூட அழிந்து விட்டது.என்னே கஷ்டம்! அந்த எல்லோருக்கும் அபயம் நல்குகின்ற பூமி எங்கு போய் மறைந்தது?” இப்படி அங்கலாய்த்தார்கள் தேவர்கள்.
.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s