Yogavasishtam @ Maharamayanam 628
தினமொரு சுலோகம்
நாள் 628
உள்ளே காணும் கனவு வெளியே நிகழ்வது போல் தோன்றுவது ஏன்?
விவேஶ மானஸா மௌனி தத: ஶாஸ்த்ரவிவேகிதாம்ʼ
தி³னைரேவ யதா² புஷ்பமாமோதே³னனராஶயம்ʼ
विवेश मानसा मौनि तत: शास्त्रविवेकितां
दिनैरेव यथा पुष्पमामोदेननराशयं
vivesha maanasaa mauni tata: shaastravivekitaam
dinaireva yathaa pushpamaamodenanaraashayam
வேடன் உருவில் இருந்த வியாதன் கேட்டான்:” அப்படியென்றால், கடுமையான, அல்லது எளிதான பயிற்சிகள் எதுவும் இல்லாமல் ஒருவனால் எப்படி துக்கத்தை இல்லாமலாக்க முடியும்?”
முனிவர் சொன்னார்:” உன்கையிலிருக்கும் வில்லையும் அம்பையும் இப்பவே தூர எறிந்து விடு! பிறகு இங்கேயே மீதி நாட்களுக்குப் மௌனமாக இருந்து துக்கமேதுமில்லாதவனாக இருப்பாய்”
வஸிஷ்டர் சொன்னார்:” வேடன் இந்த உபதேசத்தை எளிதாக ஏற்றுக்கொண்டான்.
‘ சில நாட்களிலேயே அவனில் வேத சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்ட அறிவு உதயமாயிற்று.மலர்களின் மணம் ஒருவனின் உடலில் படருவது போல் எளிதாக நிகழ்ந்தது அது’
ஒரு நாள் அவர் முனிவரிடம் கேட்டார்: ‘ மகா முனியவர்களே! உள்ளத்தில் தோன்றும் கனவுக் காட்சிகள் ஏன் வெளியுலகில் நிகழ்வது போல் தோன்றுகிறது.’
முனிவர் சொன்னார்:’ என்னுள்ளும் இந்த கேள்வி முதலில் எழுந்தது உண்டு.அதற்கு தீர்வு காண்பதற்காக நான் என் கவனத்தை ஒரு முனைப் படுத்தி,தியானம் செய்ய ஆரம்பித்தேன்.தூய போதத் தியானத்தோடு பத்மாசனத்தில் அமர்ந்தேன்.ஆயிரமாயிரம் பொருட்களை நோக்கி போய்க்கொண்டிருந்த மனதை என் இதயத்தில் ஒருமுனைப் படுத்தினேன்.உயிர் மூச்சுடன் என் மனதையும் வெளியே தள்ளிவிட்டேன். அந்த உயிர்மூச்சு- பிராணன்- ஒரு உயிரினத்தினுள்ளே பிரவேசித்து என் முன்னால் வந்து நின்றது..அந்த பிராணி பிராணனை உள்ளிழுத்துக் அதன் இதயத்தில் ஏற்றுக் கொண்டது.அப்பொழுது நான் அந்த பிராணியின் இதயத்தில் பிரவேசித்தேன்.என் புத்தி யால்( மேதா சக்தியினால்) அந்த பிராணியை பின் தொடர்ந்தேன்.
நான், அந்த பிராணியின் உள்பகுதி எண்ணிக்கையற்ற குழாய்களும் கால்வாய்களுமாக பகுக்கப் பட்டிருப்பதை கண்டேன்.குடல, பித்தப்பை, முதலிய பாகங்களைக் கண்டேன்.வீட்டு ப் பொருட்கள் நிறைந்த ஒரு வீடு போல் காணப் பட்டது..உள்ளே மிகுந்த சூடு அனுபவப்பட்டது.வெளியே இருந்து குளிர்மையான காற்று வந்து கொண்டிருந்ததால் உயிர் உடலில் நிலைத்து நின்றது.அங்கிருந்த குழாய்களில் இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் உள்ளே ஒரே இருட்டாக இருந்தது.
பிராண வாயுவின் போக்கில் ஏதாவது ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டால், இந்த இரத்தம் குழாய்கள் உடலின் ஆரோக்கியமின்மையை துல்லியமாக காட்டித் தந்தது.அதில் ஒரு குழாய் தாமரையின் தண்டு போல் இருந்தது.அதன் வழியாக வலுவான காற்று சஞ்சரிக்கும் பொழுது , சிறிதே வாயு பயணிக்கும்பொழுது பொழுது ஏற்படும் ஓசை கேட்டது.பலவிதமான பொருட்களால் அந்த இடம் நிறைந்திருந்தது .ஆனால் பிராண வாயுவின் ஓட்டம் இவைகளையெல்லாம் கோர்த்து சொருமிப்புடன் செயலாற்ற வைத்தது.
உடலின் சில பகுதிகள் சுமுகமாகவும்.வேறு சில பகுதிகள் கலக்கமாகவும்இருந்தன.நாக்கின் கீழ்ப் பகுதியில் எங்கோ உலக சங்கீத வித்வான்களின் கச்சேரி நடப்பது போலவும்,மற்ற சில பகுதிகளில் இனிய பாட்டுக்கள் கேட்பது போலவும் தோன்றியது.நான் அந்த பிராணியின் இதயத்தில் நுழைந்தேன்.அங்கு நான் ஒளியின் தத்துவமாக மாறினேன்.அங்கு மூன்று உலகங்களும் பிரதிபலிக்கின்றதை கண்டேன்.அங்கு மூன்று உலகங்களுக்கும் காணத் தகுந்த ஒளி இருந்தது.எல்லா உயிரினங்களின் உள்ளுணர்வு அது தான்! அங்கு தான் ‘உயிர்’ வாழுகிறது.
ஜீவன் உடல் முழுவதும் பரவியிருக்கிறது.ஆனால் ஆத்ம ஒளி என்ற உள் பிரகாசத்திற்கு ஒரு குறிப்பிட்ட இடமுண்டு.பிராண வாயுவால் சூழப்பட்டு பாதுகாப்பான இடத்தில் நிலைகொள்கின்றது அது. மண்பானையில் நீர் நுழைவது போல், நான் அதன் உள் நுழைந்தேன்.என் ஆத்ம ஒளியில் இருந்து கொண்டு நான் விசுவத்தை முழுவது மாகக் கண்டேன்.