Yogavasishtam @ Maharamayanam 631
தினமொரு சுலோகம்
நாள் 631
பிராணன் மனதின் சாரதி
யதா³ ஸ்வகர்மணி ஸ்பந்தே³ வ்யக்³ர: ப்ராணோ ப்⁴ருʼஶம்ʼ ப⁴வேத்
ததா³ ததீ³ஹிதவ்யக்³ர: ப்ராணோ நாத்மோத்³யமி ப⁴வேத் (6.2/139/12)
यदा स्वकर्मणि स्पन्दे व्यग्र: प्राणो भृशं भवेत्
तदा तदीहितव्यग्र: प्राणो नात्मोद्यमि भवेत् (6.2/139/12)
yadaa svakarmani spande vyagra: praano bhri’sham bhavet
tadaa tadeehitavyagra: praano naatmodyami bhavet (6.2/139/12)
வஸிஷ்டர்தொடர்ந்தார் சொன்னார்:” மனம் தான் உலகின் சிருஷ்டி கர்த்தா.அதனுள் சத், அசத் இரண்டும் கலந்தேயிருக்கிறது.
‘ பிராணன் என் அசைவு. பிராணன் இல்லாமல் நானில்லை’ என்ற சங்கற்பத்தோடு மனம் பிராணனை கொண்டு வந்தது.அப்படி அதுவே என் இலட்சியமாயிற்று. ‘ சிறிது நேரத்திற்கு என் பிராணனை இழக்க நேரிட்டாலும், எனக்கு என் பிராணன் திரும்பவும் கிடைக்கும்.’ என்று நான் சங்கற்பித்துக் கொண்டேன்.
இந்த பிராணன் மனதுடன் சேரும்பொழுது பிரமையினாலுளவாகின்ற உலகைக் காண்கிறது.’ நான் இனி ஒரு பொழுதும் பிராணனும் உடலுமில்லாமல் இருக்கமாட்டேன் என்று சங்கற்பித்துக் கொள்வதால், அது பிறகு ஒரு பொழுதும் தன் இயற்கை சொரூபமான தூய போதத்தை அடைவதில்லை’
சந்தேகம் எனும் புயல் காற்றில் சிக்கி ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு அது ஊசலாடிக்கொண்டிருக்கின்றது.அந்த ஊசலாட்டத்தின் விளைவு தீராத துன்பம்! ஆத்மஞானம் முளை விடுவது வரை ‘ இது தான் நான்’ என்ற தவறான எண்ணம் ஒழிவதில்லை.முக்தி மார்க்கத்தை தேடுவதினால் மட்டுமே ஆத்மஞானம் பெற முடியும் .ஆகவே என்ன செய்தாவது முக்தியை நேடியே ஆகணும்..
மனம் எப்பொழுதும் ‘ என் உயிர் சக்தி, – பிராணன்- என் வாழ்வு ‘ என்ற கற்பனையில் வாழ்வதால் மனம் பிராணனில் அபயம் கொண்டுள்ளது.உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுது மனம் நன்றாக செயல் படுகிறது.உடல் பலவீனம் மனதை பாதிக்கிறது.மனம் வேறு எதைக் குறித்தும் சிந்திக்காமல் உடல் சம்பந்தப்பட்ட வியாதிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறது.
” பிராணன் தனக்கு தானாகவே நேடிக்கொண்ட அசைவில் கவனமாக இருக்கும் பொழுது,அது தன்னையே மறந்தது போல் செயல்படுகிறது.அப்படியிருக்கையில் ஆத்ம விசாரணைக்கான ஊக்கம் உண்டாவதில்லை.”
பிராணனுக்கும் வண்டிக்கும் இடையிலுள்ள உறவு வண்டிக்கும் வண்டியோட்டுபவனுக்குமிடையிலுள்ள உறவு தான்.அனந்தாவபோதத்தில் முதன் முதலாக உருவான சங்கற்பம் இப்படிப்பட்டதாக இருந்ததால் அது இன்றும் தொடர்கிறது.போதம் விழித்தெழாதவர்களுக்கு இது புரியாது.
அஞ்ஞானிகள் நேரம், தூரம், காலம் , விஷயம் , மனம்,பிராணன் என்று பலவற்றையும் குறித்துள்ள எண்ணங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் செயல்பட்டுக் வருகிறார்கள்.மனமும் பிராணனும் சொருமிப்புடன் செயலாற்றும் பொழுது தனி ஒருவன் பல விதமான செயல்களில் ஈடுபடுகிறான்.ஆனால் அவைகளுக்கிடையில் ஒவ்வாமை உளவாகும்பொழுது சுருதி பிசகுகிறது.இரண்டும் ஓய்வெடுத்துக்கொள்ளும் பொழுது சுஷுப்தி நிலை ஏற்படுகிறது.
நாடி நரம்புகளில் உணவுப்பொருட்கள் சேகரிக்கப்படும் பொழுது, ஒருவனில் மந்தம் ஏற்படுகிறது.உடல் பலவீனப் படும் பொழுதும் பிராணனின் பயணத்திற்கு தடை ஏற்படுகிறது.பிராணனால் பயணிக்க முடியாத பொழுது நீண்ட உறக்கம் தானாக வந்தடைகிறது.
ஏதாவது காரணத்தால் நாடி நரம்புகள் பலவீனமாகும் பொழுதுஅவைகளில் பல விதத்திலுள்ள மாசுக்கள் குவிவதற்கு இடையாகிறது.பிராணன் அசாதரண செயல்களில் ஈடுபடும்பொழுதும் சுஷுப்தி வந்து சேரலாம்”
முனிவர் சொன்னார்:” இருள் எங்கும் பரவிய பொழுது நான் யார் இதயத்தில் நுழைந்து வசிக்க ஆரம்பித்தேனோ, அவன் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.நானும் அந்த உறக்கத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்தேன்.ஆனால் உண்ட உணவு செரிமானவுடன், நாடிகள் தூய்மையடையவும் பிராணன் பயணம் துவங்கவும்செய்தன.அந்த நேரத்தில் சுஷுப்தி பலவீனம் அடைந்தது.”
.