யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 641

Yogavasishtam @ Maharamayanam 641

தினமொரு சுலோகம்

நாள் 641

யதே³ந்த்³ரியாணி திஷ்டந்தி பா³ஹ்யதஶ்ச ஸமாகுலம்ʼ

ததா³ ம்லானானுப⁴வன: ஸங்கல்பார்த்தோ²(அ)னுபூ⁴யதே (6.2/145/2)

यदेन्द्रियाणि तिष्टन्ति बाह्यतश्च समाकुलं

तदा म्लानानुभवन: संकल्पार्त्थोऽनुभूयते (6.2/145/2)

yadendriyaani tisht’anti baahyatashcha samaakulam

tadaa mlaanaanubhavana: sankalpaarttho’nubhooyate (6.2/145/2)

முனிவர் தொடர்ந்து சொன்னார்:” ஜீவன் வெளியுலகை அறிவதும் அனுபவிப்பதும் தனக்கு புறம்பான புலன்களினால்த்தான்.ஆனால் தன்னுள்ளேயிருக்கும் புலன்களால்த்தான் தன்னுள்ளே உளவாகும் கனவுகளை காண்கிறது.

புலன்கள் புற உலகு சம்பந்தப்பட்ட அனுபவங்களில் ஆழ்ந்து இருக்கும் பொழுது தன்னுள்ளேயிருக்கின்ற எண்ணங்களுக்கும் கருத்துக்களுக்கும் ஒரு தெளிவு உண்டாவதில்லை.அவைகள் பனிமூட்டத்தால் , புகமண்டலத்தால் மூடப்பட்டது போல் இருக்கும்.”

ஆனால் தியானத்திலாழ்ந்திருக்கும் பொழுது,புலன்கள் உள்நோக்கி திரும்பி அவனுள்ளேயே இருக்கின்ற உலகை மிகத் தெளிவாக காண்கிறது.உண்மையில் உலகமெனும் வெளிக்காட்சியில் எந்த விதமான எதிர்மறைகளுமில்லை.அவைகள் எப்படி காணப்படுகிறதோ, அப்படியே தான் இருக்கிறது. ஆகவே கண்களை திறந்து பார்க்கும் பொழுது இந்த உலகம் அனந்த போதத்திற்கு வெளியே உள்ளது போல் தோன்றுகிறது. எல்லா புலனனுபவங்களும்- தொடுதல்,காண்பது, முகர்தல்,கேட்பது, ருசித்தேன், ஆசைகள்- இவைகளின் சேர்க்கை தான் ஜீவன்! அது உயிர்சக்தியுள்ள தூய போதமே! இந்த ஜீவன் தான் எல்லாமாக, எல்லாவற்றிலும், இருந்து கொண்டு, எங்கும் எப்பொழுதும்,எல்லாவற்றையும் அனுபவிப்பது!

ஜீவனின் அல்லது உயிர்சக்தியுள்ள அடிப்படை சத்தில் ‘ கபம்’ நிறையும் பொழுது அதன் பலன் உடன் வெளிப்படுகிறது.ஜீவன் பாற்கடலில் மிதப்பதாக உணருகிறான்.ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கின்ற நிலவை காண்கிறான்.தாமரை மலர்கள் நிறைந்த ஏரிகளுள், மலர்வாடிகளும், பெண்கள் நடனமாடுகின்ற திருவிழாக்களும், கொண்டாட்டங்களும், பல்சுவை உணவுகளிலும் செழிப்புற்ற விருந்துகளும், கடலில் சென்றடையும்பொழுது நீரோடைகளும் நீர்வீழ்ச்சிகளும்,வெண்பட்டாடை அணிந்த மாடமாளிகைகளும்,அழகிய மஞ்சாளாடையணிந்த வயல்களும்,மான்கள் துள்ளி விளையாடுகின்ற பூங்காக்களும் மலைகளும், அவன் காண்கிறான்.

இன்னொரு ஜீவ அரசனான பித்த ரசம் அவனுள் நிறையும் பொழுது, அதன் பலனையும் அனுபவிக்கிறான்.அழகு மிகு அக்னி பிழம்புகளும்,நாடி நரம்புகளை முறுக்கேற்றுகின்ற,உஷ்ணக்காற்றும் அவன் ‘காண்கிறான்’.அந்த தீ நாம்புகள் கருமை நிறைந்த புகையால் கக்குவதையும் ஆகாயம் அதனால் இருளில் மூழ்குவதையும் அவன் காண்கிறான். எங்கும் தன் ஒளிக்கதிர்களால் வெளிச்சமூட்டுகின்ற சூரியன் கடும் சூட்டியுள்ளனர் வாரி வழங்குகிறான்.கடலும் கடலிலிருந்து ஆகாயத்தை நோக்கி உயருகின்ற நீராவியும்,உள்ளே நுழைய முடியாத அடர்த்தியான காடுகளும், கானல் நீரும் அவைகளில் நீச்சலடித்து விளையாடுகின்ற புள்இனங்களையும் அவன் ‘காண்கிறான்’.வெயிலின் சூட்டினால் வாடி வதங்கிய, வழிகளில் ஓடி ஓடி களைத்துப் போன, தன்னையே அவன் காண்கிறான். பூமி சூரியதாபத்தால் பழுத்து வரண்டு , காய்ந்து கிடப்பதையும் அவன் ‘ காண்கிறான்’.கண் சென்றவிடமெல்லாம் நெருப்பு பற்றி எரிவதுமில்லை ‘காண்கிறான்’.மேக பொழிவது கூட தீ மழை தான்! எங்கும் நெருப்பு பரவியிருப்பதால் எல்லாயிடங்களுக்கும் ஒளி மயமாக காணப்படுகிறது.

ஆனால் ஜீவனில் வாத ரசம் நிறையும் பொழுது,அவனுக்கு உலகம் புதுமை நிறைந்ததாகத் தெரிகிறது.தான் மட்டுமில்லை; கற்களும், மலைகளும் கூட காற்றினில் பாடித்திரிவதாக ‘ காண்கிறான்’.எல்லாமே தட்டாமாலை சுற்றுவது போல் அனுபவப்படுகிறேன். எதுவும் எங்கும் நிலைத்து நில்லாமலிருப்பதாக காண்கிறான்.ஆகாயத்தில் உல்லாசப் பயணம் மேற்கொண்டிருக்கின்ற தேவ கன்னிகைகளையும் கின்னரர்களையும் அவன் காண்கிறான்.புமியும், பூகம்பங்களையும் அவனால் காண முடிந்தது.ஆழமான இருளடைந்ததாக, முடிவில்லாத பாழுங்கிணற்றில் வாழ்வதாகவும் அனுபவப்பட்டான்.அதி பயங்கரமான விபத்துக்கள் நேரவதாக கண்டான்.மலையுச்சியிலுள்ள ஒரு மாமரத்தின் உச்சாணிக் கிளையிலிருந்து கொண்டு கீழே பார்ப்பதாக உணர்ந்தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s