யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 643

Yogavasishtam @ Maharamayanam 643

தினமொரு சுலோகம்

நாள் 643

ஜாக்³ரத்³ஸ்வப்ன ஸுஷுப்தாதி³ பரமார்த்த²விதா³ம்ʼ விதா³ம்ʼ

ந வித்³யதே கிஞ்சித³பி யதா²ஸ்தி²தமவஸ்தி²தம்ʼ (6.2/146/21)

जाग्रद्स्वप्न सुषुप्तादि परमार्त्थविदां विदां

न विद्यते किञ्चिदपि यथास्थितमवस्थितं (6.2/146/21)

jaagradsvapna sushuptaadi paramaartthavidaam vidaam

na vidyate kinchidapi yathaasthitamavasthitam (6.2/146/21)

631 യോഗവാസിഷ്ഠം നിത്യപാരായണം ദിവസം 631

ജാഗ്രദ്സ്വപ്ന സുഷുപ്താദി പരമാര്‍ത്ഥവിദാം വിദാം

ന വിദ്യതേ കിഞ്ചിദപി യഥാസ്ഥിതമവസ്ഥിതം (6.2/146/21)

முனிவர் தொடர்ந்தார்:” நான் இன்னொருவனுக்கு உயிர்சக்தியுள்ள அமர்ந்திருந்த பொழுது , அங்கு விசுவப் பிரளயத்தின் துவக்கத்திற்கான சில அறிகுறிகளைக் கண்டேன். ஆகாயத்திலிருந்து மலைகள் பொழிய ஆரம்பித்தன.அதை நான் இன்னொருவனுக்கு உயிர் சக்தில் இருக்கும் பொழுது கண்டேன்.அவனது இரத்தம் குழாய்கள் வழியாக, உணவு துணுக்குகளை உருண்டு வருவது மலைகள் உருண்டு வருவது போல் தோன்றியது.அங்கு நிலவிலிருந்த இருள் அவனது உறக்கத்தின் இருள்! நானும் அவனுடன் உறக்கத்திலாழ்ந்தேன்.
சிறிது நேரத்திற்கு பிறகு என் போதத்தில் ஏதோ ஒரு புதிய உணர்வு உண்டாவது நான் அறிந்தேன்.உறக்கத்திலிருந்து விழித்து எழ ஆரம்பித்த பொழுது,என்னில் கனவுலகம்ஞ உதயமாயிற்று.அங்கு உயிர்சக்தியுள்ள , என்னைப் போலவேயுள்ள ஒரு பெருங்கடலை தரிசித்தேன். அங்கு நான் என்ன பார்த்தேனோ அவைகளெல்லாம் என் அனுபவங்களாகின்றன.என் போதம் அசையாமல், எந்த விதமான கேடுகளுக்கும் ஆளாகாமல் நிலை கொண்டிருந்ததால், என்னால் அந்த காட்சிகளை மிகத் தெளிவாக காண முடிந்தது.
போதம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது.நாம் அதனுள் இருக்கிறோம்; நாம் அதுவே தான்! அதனுள்த் தான் உலகம் எனும் வெளிப்பாடு காணப்படுவது.ஒரு தாயின் கர்ப்பப் பையில் குழந்தை உருவாவது போல் , நீண்ட உறக்கத்திலிருந்து இந்த உலகம் உருக்கொள்கின்றது.

வியாதன் வினவினான்:” நீண்ட உறக்கத்திலிருந்து உலகம் உருக்கொள்கின்றது என்று சொன்னீர்களல்லவா? அம்மாதிரியான நீண்ட உறக்கத்தில்( சுஷுப்தியில்) என்னதான் ஒருவன் அனுபவிக்கிறான்?”

முன்வரும் தொடர்ந்தார்:” ‘ உற்பத்தியாயிற்று’, ‘ தோன்றியது’ , ‘ உலகம் உயிர்ப்பெற்றது’ என்பன போன்ற வார்த்தை இரட்டைத்தன்மை வார்த்தை ஜாலங்கள் தான். அவை முற்றிலும் அர்த்தமற்றது தான்.

‘ஜாதம்’ ( பிறந்தது) என்றால் என்ன என்று சொல்கிறேன் , கேளுங்கள்.அந்த வார்த்தியினால் குறிப்பிடுவது, ‘ நிகழ்ந்தது’ என்று தான்.அதாவது அழிவற்றது எதுவோ, என்றும் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்குமோ, அது தென்பட்டது என்று தான்.’ சிருஷ்டி ‘ என்ற வார்த்தைக்கும் இதே பொருள் கொள்ளலாம்.அதாவது ‘ ஸர்க்கம்’ இருப்பைக் குறிப்பிடுகிறது.போதம் விழித்தெழுந்த எங்களைச் போன்றவர்களுக்கு சிருஷ்டி’ என்பதே கிடையாது. அதனாலேயே மரணமுமில்லாத. முடிவும் இல்லை! எல்லாம் நித்தியம்; பிறவாதது,அமைதியின் ஒளிர்முகம்,! பிரம்மம் என்பது தூய இருப்பு( அஸ்தித்துவம்). உலகமும் தூய இருப்பு தான்! யாரை ‘ யமநியமங்கள்’ ஆதிக்கும்?மாயையின் மாயத்தன்மை தான் விவாத விஷயம். ‘ அது இருக்கிறது’ என்றால் ‘ அதில்லை’ என்றும் தான் பொருள்படுகிறது.இம்மாதிரி வாதங்களை அஞ்ஞானிகள் தான் எடுத்து விளம்புகிறார்கள்.அவர்கள் அம்மாதிரி வாதப் பிரதி வாதங்களை பிரம்மத்திற்கும், அனந்த போதத்திற்கும் இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.
சத்தியத்தை சாக்‌ஷாத்கரித்தவர்களில்,பரம் பொருளை உணர்ந்தவர்களில்,ஜாக்ரத், சொப்பனம் மற்றும் சுஷுப்தி என்பவை கிடையாது.எவையெல்லாம் எப்படியோ அப்படியே நிலைகொள்கின்றன.அனுபங்களின் தாது நேரத்தில் உண்மையாகத்தான் தோன்றினாலும்,ஒருவனிலுளவாகும் கனவு அனுபவமும்,அவன் கற்பனையாக உருவாக்கிய உலகமும் எதுவும் உண்மையில்லை.அதே போல், உலகின் ஆரம்பத்தில் ‘ அது’ உண்டாகவும், நிகழ்வதில்லை.உலகை தூய போதமாக சாக்‌ஷாத்கரித்து விட்டால் எது எங்கு உண்டாக முடியும்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s