RamanajothI part 2 -130

upadesavunthiyar  5

உபதேசவுந்தியார் 5

பாயிரம்

கன்மமயந்தீர்ந்து கதி காண நெறிமுறையின்

மன்மமுலகுய்ய வழங்குகெனச்- சொன்முருகற்

கெந்தைரம  ணன்றொகுத்தீர்ந்தானுபதேச

வுந்தியார் ஞானவிளக்கோர்

பொருள் விளக்கம்

பாயிர சுலோகம் பகவான் ரமணர் இயற்றதில்லை. முருகனார் தனியாக இயற்றியதே. ஏற்கனவே பாயிரம் என்றால் என்ன என்று விளக்கினோம்.முருகனார் அதன்படி உபதேசவுந்தியார் எனும் இந்த நூலின் நோக்கத்தை சுருக்கமாக இந்த சுலோகத்தில் சொல்லியுள்ளார்.கர்ம பலன்களையெல்லாம் அனுபவித்து முக்தி பெறுவதற்கான வழிமுறைகளை இந்த உலக நன்மைக்காக வழங்கப்பட்ட வேண்டும் என்று முருகனார் கேட்டுக் கொண்டதற்கிணங்க  சத்குரு ரமண பகவான்  உலகிற்கு வழி காட்டும் ஞான விளக்கை அளித்துள்ளார்.

உபோத்காதம்- பின்புலம்

இனி வரும் சுலோகங்கள் முருகனார் இயற்றிய திருவுந்தியார் எனும் நூலிலிருந்து பகவான் தெரிந்தெடுத்துத் தந்தைவை. . அவை உபதேசவுந்தியாரின் பின்புலத்தை விளக்குகின்றன. இவை ‘உந்தீப்பற ‘ என்ற மெட்டில் அமைக்கப்பட்டுள்ளன.. உந்தீப்பற என்ற மெட்டு பண்டைய காலங்களில் மேட்டுக்குடி பெண்மணிகள் அம்மானை( பந்து) விளையாடும்பொழுது  பாடுகின்ற பாட்டின் மெட்டு .

தாருகா வனத்தில் தவம் செய்து வந்த சில துறவிகள், தாங்கள் ஆற்றும் கர்மாக்களால்- ஆசார அனுஷ்டானங்களால் தங்களுக்கு முக்தி கிடைத்து விடும் என்று நம்பி  தவறான பாதையில் சென்று அழிவைத் தேடிக்கொண்டிருந்தனர்

தாரு வனத்திற் றவம் செய்திருந்தோர்

பூருவ கன்மத்தா லுந்தீபற

போக்கை போயின ருந்தீபற ( திருவுந்தியார் 1-70)

இங்கே பூர்வ கர்மா என்பது காமிய கர்மங்களின் பாதை (தற்காலிக ஆசைகளை நிறைவேற்றுவதற்காக செய்யப்படும் செயல்கள்), இது பூர்வ மீமாம்சாவால் பரிந்துரைக்கப்பட்ட பாதையாகும். பூர்வ மீமாம்சா என்பது ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த  ஒரு சிந்தனை வழியாகும்., இது வேதங்களை  தங்களுக்கேற்றாற்ப் போல்  விளக்குகிறது. இது கர்மங்களின் பாதையை மட்டும் வலியுறுத்துகிறது .கர்ம காண்டம் (சடங்கு சம்பிரதாயங்களை ஆதாரமாகக்கொண்ட  பாதையை கற்பிக்கும் வேதங்களின் பகுதி). இந்த சிந்தனை மார்க்கத்தை பின்பற்றினோர்   கர்மங்களை  மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதினர். , இது அடுத்த சுலோகத்தில்  விளக்கியுள்ள படி, கர்மாவைத் தவிர வேறு எந்த கடவுளும் இல்லை ; கடவுள் என்பதையே  மறுக்கும் அளவிற்கு இது செல்கிறது, அதாவது நிகழ்த்தப்படும் சம்பிரதாய சடங்குகளைத் தவிர  – கர்மாவைத் தவிர வேறு கடவுள் இல்லை என்ற இந்த கோட்பாடு, உபதேசா உந்தியாரின் முதல் சுலோகத்திலேயே ஸ்ரீ பகவானால் உறுதியாக மறுக்கப்படுகிறது.

கன்மத்தைய ன்றிக் கடவுளிலை யெனராயினும்

வன்மத்தராயின ருந்தீபற

வஞ்சிக்கப்பட்டு செருக்கினா லுந்தீபற

( திருவுந்தியார்1-71)

‘கர்மங்களையாற்றுபவனைத்தவிர வேறு கடவுளில்லை’ என்ற தவறான நம்பிக்கையின் மயக்கத்திலாட்ப்பட்டு 

அவர்கள் தங்களின் நிலை மறந்தவர்களாயினர்.

(அவர்களின் கதையை ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். மீண்டும் ஒரு முறை ஞாபகப் படுத்திக் கொள்வோம்.

இந்த கதை  முருகனார் இயற்றிய திருவுந்தியார் 1-72-98 வரையுள்ள சுலோகங்களில் சொல்லப்பட்டுள்ளது)

 இப்படி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்த  சந்நியாசிகளை விடுதலையின் (மோக்ஷ) பாதைக்குக் கொண்டுவருவதற்காக, சிவபெருமான் கருணையுடன் ஒரு மாமுனிவரின்  வடிவத்தை எடுத்து, விஷ்ணுவுடன் தாருகா காட்டுக்குள் நுழைந்தார். விஷ்ணு ஒரு அழகான  மோகினி வடிவத்தை எடுத்துக் கொண்டார். மோகினியைப் பார்த்தவுடனேயே, சந்நியாசிகள் காமத்தில் மூழ்கிவிட்டனர். காமம் இயற்கையிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது. அது, எவ்வளவு   காலம் தவம் செய்திருந்தாலும் கூட, தவசிகளை தன் வயப் படுத்தி விடும்.ஏனென்றால் அவர்கள் இன்னும் சத்தியத்தை உணர்ந்தவர்களில்லை.. எனவே, அவர்களின் அன்றாட சடங்கு நடைமுறைகளை (நித்யா-கர்மனுஷ்டானங்கள்) மறந்து, சந்நியாசிகள் மோகினியைப்  பின்தொடரத் தொடங்கினர், ஆனால் விரைவில் அவள் அவர்கள் பார்வையிலிருந்து  மறைந்து விட்டாள். 

இதற்கிடையில், தெய்வீக காந்தி படைத்த ஜாதாரியான  சிவனைக் கண்ட, சந்நியாசிகளின் மனைவிகள் தங்களை மறந்து அவரைப் பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினர். திரும்பி வந்த சன்னியாசிகள்  இதை அறிந்ததும்,  ஆத்திரமடைந்து- கோபமடைந்து ஒரு அபிச்சார-யாகத்தை (மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் ஒரு தியாகத்தை) செய்யத் தொடங்கினர், அதில் இருந்து ஒரு காட்டுப் புலி, யானை, நெருப்பு, திரிசூலம் மற்றும் பிற  ஆயுதங்களை, வரவழைத்துக் சிவனை கொல்லும் பொருட்டு அவர் மீது ஏவி விட்டார்கள்.. பரமசிவனோ, காட்டு விலங்குகளை கொன்று  அவர்களின் தோல்களை ஆடைகளாக அணிந்து, திரிசூலம் மற்றும் நெருப்பு போன்ற பிற ஆயுதங்களை தனதாக்கிக் கொண்டார். இவ்வாறு சந்நியாசிகள் அந்த யாகத்திலிருந்து எழுந்த ஆயுதங்கள் கூட, மிக சக்திவாய்ந்த கர்மங்களின் துணை இருந்தும கூட  அந்த மாமுனிவரின் முன் பயனற்றுப் போனதை கண்டார்கள்.  அவர் கடவுள் தான் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். கர்மங்கள் தான் கடவுள் என்று எண்ணிக்கொண்டிருக்கின்ற அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போயிற்று.

கன்மம் பலந்தருங் கர்த்தற் பழித்துச் செய்

கனம் கலங்கியது கண்டாருந்தீபற

கர்வமகன்றன ருந்தீபற ( திருவுந்தியார் 1-99)

கர்மபலன்களால் கிடைத்த சக்திகள் எதுவும் கடவுள் முன் பயன்படாமல் போனதைக் கண்டு , அந்த சன்னியாசிகள் மனம் கலங்கிப் பின்,அகந்தையை கைவிட்டனர். அவர்களது கர்வம், கர்மமே கடவுள் என்ற எண்ணம் உடைந்து சின்னாபின்னமானது. இதையே பகவான் தனது உபதேசவுந்தியாரின் முதல் சுலோகத்தில் கூறுகிறார்.

.

காத்தருளென்றுக் கரைய கருணைக் கண்

சேர்த்தருள் செய்த னுந்தீபற

சிவனுபதேசமி துந்தீபற ( திருவுந்தியார் 1-100)

தங்களது நம்பிக்கையெல்லாம் பொய்த்துப் போக அந்த சன்னியாசிகள் பரமசிவனிடம் ‘ காத்தருள வேண்டும்’ என்று பிரார்த்தித்தார்கள். பரம சிவனும் கருணைகூர்ந்து  தன் கருணைக் காடாட்சத்தை அவர்கள்மீது பரவ விட்டு முக்திக்கான மார்க்கத்தை உபதேசித்தார்..

உட்கொண்டொழுக வுபதேசசாரத்தை

யுட்கொண்டெழுஞ்சுகத்தையு ந்தீபற

வுட்டுன்பொழிந்திடு மு ந்தீபற  ( திருவுந்தியார் 1-101)
இந்த சிவனுபதேசத்தை யார் யார் கேட்டு உள்வாங்கிக் கொள்கிறார்களோ அவர்கள்  உள்ளிருந்து எழும் பரமானந்தத்தை அனுபவிப்பார்கள். அதோடு அவர்களது துயரங்கள் எல்லாம் ஒழிந்து விடும்.அது திண்ணம்.

சாரவபதேச சார  முட்சாரவே

சேரக்களி சேரவுந்தீபற

தீரத்துயர் தீரவுந்தீபற  (திருவுந்தியார்1-102)


இந்த சிவனுபதேச சாரத்தை செவிமடுத்து, இதயத்தில் வாங்கிக் கொள்போருக்கு நித்தியானந்தம்

 கிட்டும்.எல்லாத் துயர்களும் ஒழிந்து விடும்.

இந்த முன்னுரையுடன் பகவானின் உபதேசவுந்தியார் துவங்குகிறது.( தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s