யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 660

Yogavasishtam @ MAHARAMAYANAM 660

தினமொரு சுலோகம்

நாள் 660

புலனடக்கத்திற்கான வழிகள்

சித்தமிந்த்³ரியஸேனாயா நாயகம்ʼ தஜ்ஜயாஜஜய:

உபானத்³கு³ட⁴பாத³ஸ்ய நனு சர்மாவ்ருʼதைவ பூ⁴: (6.2/163/6)
चित्तमिन्द्रियसेनाया नायकं तज्जयाजजय:

उपानद्गुढपादस्य ननु चर्मावृतैव भू: (6.2/163/6)
chittamindriyasenaayaa naayakam tajjayaajajaya:

upaanadgud’hapaadasya nanu charmaavri’taiva bhoo: (6.2/163/6)
இராமன் கேட்டான்:” அஞ்ஞானம் அகல வேண்டுமென்றால் புலன்களை பூர்ணமாக கட்டுக்குள் கொண்டு வரணுமல்லவா? புலன் கட்டுப்பாட்டை எப்படி செயல் படுத்துவது? தயவு செய்து விளக்கமாக கூறுவீர்களாக!”

வஸிஷ்டர் கூறினார்:” சுய முயற்சியால் எப்படி ஒருவனால் புலனடக்கம் அடைய முடியும் என்பதை சொல்கிறேன், கேளுங்கள்.

தனியொருவனின் ஆன்மா என்பது எல்லைகளில்லாத போதம் தான்.( அனந்த போதம்). அதன் சுய கற்பனையால் அது தனிப்பட்ட ஜீவனாக உணரப்படுகிறது. அது தான் உண்மை.அந்த ஜீவன் என்ன எண்ணுகிறதோ அது எளிதில் சாத்தியமாகிறது. ஆகவே ஆத்ம கட்டுப்பாடு அல்லது புலனடக்கம் என்பது சுயமான அவபோதத்தைக் பொறுத்துத்தானிருக்கிறது.அதை மையமாகக் கொண்டுதானிருக்கிறது. அப்படித்தான் அதை புலனடக்கத்தை நேட வேண்டும்.

‘ சித்தம் அல்லது மனம் தான் புலன்களாகின்ற படைகளின் தலைவன்.ஆகவே மனதை கட்டுப்படுத்திவிட்டால் புலனடக்கமும் கைகூடும்.ஒருவன் கால்களில் தோலினாலான செருப்பு அணிந்து கொண்டால் அது பூமி முழுவதையுமே தோலினால் மூடினாற் போலாகும்.’

ஒருவன் தனது சுய அவபோதத்தை ( உள்ளுணர்வை) இதயத்திற்கு மேல்ப்படுத்தி தூயபோதத்தில் நிலைத்து நிற்க செய்தால்,மனம் இயற்கையாகவே , முயற்சிகளேதுமில்லாமல் பூரண அமைதியாகும். தவமிருப்பதோ, புண்ணிய தலங்களுக்கு யாத்திரை போவதோ, யாக கர்மங்கள் செய்வதோ, இவை எதுவுமே இதற்கு( மனவடக்கத்திற்கு) உதவாது.இந்த நிலைமையில் உள்ளுணர்வு ஒரு அனுபவத்தை எதிர்க்கொள்ளும்பொழுது அந்த அனுபவம் ஜீவனில் வாசனையாக உருமாறி பதிவாகாது. உருவான உடனேயே மறக்கப்படுவது போல்த் தான் அது.

இதற்கான பயிற்சிகள் ஒருவனை பரமமான ஞானத்தை நோக்கி இட்டு செல்கிறது.தகுந்த சுயமுயற்சியின் பலனாக பெறப்படும் எல்லோருக்கும் உகந்த பலன்களில் திருப்தியடைவாய்.தனது நியத கர்மங்களை செய்வதும் அவைகளின் பலன்களில் திருப்தி காண்பதும், தனதல்லாத கர்மங்களில் ஈடுபடாமலிருப்பதும் அவைகளை துறப்பதும் ஆத்ம கட்டுப்பாடு ( சுயக்  கட்டுப்பாடு) தாம்.. 

தனக்கு புறம்பான நிகழ்வுகளிலும், காட்சிகளிலும் ஈர்ப்பு ஏதுமின்றி எவனொருவனது மனம் உள்முகமாக ஆத்ம விசாரணையில் மூழ்குகின்றதோ,அவன் முழு அமைதியை அனுபவிக்கிறான்.அவ்வாறு தன்னுள்ளேயே மனதை ஒருமுனைப்படுத்தும் பொழுது மனதிலிருந்து அமைதியின்மைகளெல்லாம்- கலக்கங்களெல்லாம் எங்கோ போய் மறைந்து விடுகிறது.உள்ளத்தில் விவேக- விஞ்ஞானங்கள் வந்து நிறைகின்றன. அவ்வாறு விவேகமடைந்தவனுக்கு புலன்களை வெற்றிகொள்வது சிரமமான காரியமேயில்லை.வாசனைகளும் மனோபாதிகளும் அவனைத் தொந்திரவு செய்யமாட்டா! அவன் உலகை தன் உண்மை நிலையில் காண்கிறான்.

அதோடு உலகம் எனும், பிரமையினாலுளவாகின்ற, மாயாக்காட்சிகளுக்கு முடிவேற்படுகிறது.மனச் சஞ்சலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுகிறது.’வார்த்தைகளுக்கும் விவரணங்களுக்கும் அப்பாற்ப்பட்ட சுய போதம் தான் உலகமாக தென்படுகிறது’ என்ற அறிவு உறுதிப்பட்டு விட்ட ஒருவனுக்கு, எங்கிருந்து பந்தமும் பந்தனமும் உண்டாகும்? அப்புறம் அவனுக்கு எதிலிருந்து முக்தி வேண்டும்? 

வரண்டுபோன நதிக்கு ஓட்டம் கிடையாது.காரணமற்ற அனுபவங்களால் மனச் சஞ்சலங்களை    உளவாக்க முடியாது.எல்லைகளற்ற உள்ளுணர்வில்- ஆன்மாவில் ‘ நான்’, ‘ நீ’ , போன்ற நாம் ரூபங்களைக் உருவாக்குகின்ற அதிசய    பன்மைகளை படரவிடுகின்ற அனுபவங்களின் விசித்திர நிகழ்வு தான்  அது.அந்த உண்மை அறிவை உணர்ந்தவனில் அவைகள் வாசனைகளை உளவாக்க முடியாது ! எங்கும் நிறைந்து நிற்பது அனந்த போதம் மட்டும் தான்! போதமல்லாமல் வேறொன்று இல்லவேயில்லை! 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s